தமிழக எம்பிகளுக்கு "அவமதிப்பு".. ஹிந்தியில் பேசிய சிந்தியா.. கொதித்த சசி தரூர்..காரசார விவாதம்
டெல்லி; நேற்று லோக்சபாவில் தமிழ்நாடு எம்பிக்கள் கேள்விக்கு மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா ஹிந்தியில் பதில் அளித்தது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் எம்எல்ஏவாக இருந்து அதன்பின் பாஜகவில் இணைந்தவர் எம்பி ஜோதிராதித்ய சிந்தியா. இவர் தற்போது மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சராக இருக்கிறார்.
டாஸ்மாக் பார்களை 6 மாதத்துக்குள் மூட வேண்டும்- அதிரடியாக உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
இந்த நிலையில் நேற்று குடியரசுத் தலைவர் உரை மீதான விவாதமும், கேள்வி நேரத்தில் எம்பிக்கள் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதிலும் வழங்கி வந்தனர். இதில் தமிழ்நாடு எம்பிக்கள் ஜிஎஸ்டி இழப்படி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து கேள்வி எழுப்பினர்.

தமிழ்நாடு எம்பிக்கள் கேள்வி
காங்கிரஸ் எம்பிக்கள் சிலர் தமிழ்நாட்டில் கூடுதல் விமான நிலையங்களை அமைப்பது குறித்தும், சில விமான நிலையங்களுக்கு சர்வதேச விமான நிலைய அங்கீகாரம் தர வேண்டும் என்பது குறித்தும் கேள்வி எழுப்பி வந்தனர். ஏற்கனவே சிபிஎம் எம்எல்ஏ சு வெங்கடேசன் இது தொடர்பான கோரிக்கையை வைத்து இருந்தார். இந்த நிலையில் தமிழ்நாடு எம்பிக்கள் கேள்விகளுக்கு மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் சிந்தியா பதில் அளித்தார்.

சிந்தியா பதில்
அவையில் தமிழ்நாடு எம்பிக்கள் ஆங்கிலத்தில் கேள்வி எழுப்பிய நிலையில் சிந்தியா ஹிந்தியில் சரளமாக பதில் அளித்தார். அவர் ஹிந்தியில் பேசியது தமிழ்நாடு எம்பிக்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஏனென்றால் பொதுவாக ஆங்கிலத்தில் கேட்கப்படும் கேள்விகளுக்கு அமைச்சர்கள் ஆங்கிலத்தில்தான் பதில் அளிப்பார்கள். ஆனால் சிந்தியா தமிழ்நாடு எம்பிக்களுக்கு புரியாதஹிந்தியில் பதில் அளித்தார்.

ஹிந்தியில் பதில்
இந்த நிலையில் சிந்தியா பேச்சை கேட்டுக்கொண்டு இருந்த கேரளாவை சேர்ந்த திருவனந்தபுரம் காங்கிரஸ் எம்பி சசி தரூர், தமிழ்நாடு எம்பிக்கள் ஆங்கிலத்தில் கேள்வி எழுப்பி உள்ளனர். அவர்களுக்கு ஹிந்தியில் பதில் அளிக்காதீர்கள். இது அவர்களுக்கு இழைக்கப்படும் அவமதிப்பு. உங்களுக்கு ஆங்கிலம் நன்றாக தெரியும். நீங்கள் ஆங்கிலத்தில் அவர்களுக்கு பதில் தரலாம் என்று சசி தரூர் குறிப்பிட்டார்.

அவமதிப்பு
இதற்கு பதில் அளித்த, சிந்தியா, நான் ஹிந்தியில் பேசுவேன்.. நான் பேசுவதை கூட ஒரு எம்பி இப்போது எதிர்க்கிறார். இதற்குத்தான் மொழிபெயர்ப்பு இருக்கிறது. அவையில் மொழி பெயர்ப்பு இருக்கும் போது அதில் இருந்து தமிழ்நாடு எம்பிக்கள் பதிலை புரிந்து கொள்வார்கள் என்று சசி தரூரிடம் அமைச்சர் சிந்தியா குறிப்பிட்டார். இதையடுத்து சபாநாயகர் ஓம் பிர்லா, இது எல்லாம் அவமதிப்பு கிடையாது என்று விளக்கம் அளித்தார்.

கொதிப்பு
அமைச்சர் சிந்தியா அளித்த இந்த பதில் கடும் விமர்சனங்களை சந்தித்துள்ளது.அவருக்கு ஆங்கிலம் தெரிந்தும் வேண்டும் என்றே அவர் ஹிந்தியில் பேசி இருக்கிறார். பொதுவாக அமைச்சர்கள் இப்படி பதில் அளிக்க மாட்டார்கள். ஹிந்தி மட்டும் தெரிந்த ஆங்கிலம் தெரியாத எம்பிக்கள் சமயங்களில் இப்படி பதில் அளிப்பார்கள். இதனால் சிந்தியா நடந்து கொண்ட விதம் விமர்சனங்களை சந்தித்துள்ளது.