டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

வீரப்பன் வேட்டை.. அதிரடி விஜயக்குமாரின் ஜம்மு காஷ்மீர் ஆளுநரின் ஆலோசகர் பதவி முடிவுக்கு வந்தது!

Google Oneindia Tamil News

Recommended Video

    தமிழகத்தை சேர்ந்த அதிகாரி விஜயகுமாரின் ஆலோசகர் பதவிக்காலம் முடிவுக்கு வந்தது-வீடியோ

    டெல்லி: ஜம்மு காஷ்மீர் ஆளுநருக்கு ஆலோசகராக பணியாற்றி வந்த ஐபிஎஸ் அதிகாரி கே விஜயகுமாரின் பதவிக்காலம் நேற்றுடன் முடிவடைந்தது.

    தமிழகத்தை சேர்ந்தவர் கே விஜயகுமார் (67). இவர் கடந்த 1975-ஆம் ஆணடு ஐபிஎஸ் பணியில் சேர்ந்தார். 1995-96-ஆம் ஆண்டுகளில் தமிழகத்தில் தென் மண்டல ஐஜியாக பதவி வகித்தார்.

    அச்சமயம் விருதுநகர், ராமநாதபுரம், நெல்லை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் ஜாதிக் கலவரங்களை முடக்கினார். பின்னர் தமிழக- கர்நாடக சிறப்பு படை பிரிவுக்கு தலைமை வகித்த போது கடந்த 2004-ஆம் ஆண்டு சந்தன கடத்தல் வீரப்பனை என்கவுன்ட்டர் செய்தவரும் இவரே.

    அவங்களை விடுங்க.. ஏன் நிறுத்தறீங்க.. பாதை அமைக்காட்டி ஊரே கூடி உட்காருவோம்.. பூங்கோதை ஆவேசம்அவங்களை விடுங்க.. ஏன் நிறுத்தறீங்க.. பாதை அமைக்காட்டி ஊரே கூடி உட்காருவோம்.. பூங்கோதை ஆவேசம்

     நியமனம்

    நியமனம்

    ஜெயலலிதாவின் குட் வில் லிஸ்டில் இருந்தவர். இத்தனை அதிரடிகளுக்கு சொந்தக்காரரான விஜயகுமார் கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஜம்மு காஷ்மீர் ஆளுநர் விவி வோராவுக்கு ஆலோசகராக நியமிக்கப்பட்டார்.

     ஆளுநர்கள் நியமனம்

    ஆளுநர்கள் நியமனம்

    இதையடுத்து அவரது பதவிக்காலம் முடிந்தவுடன் கடந்த ஆண்டு ஆகஸ்ட் முதல் ஆளுநர் சத்யபால் மாலிக்கிற்கு ஆலோசகராக பணியாற்றி வந்தார். தற்போது ஜம்மு காஷ்மீர், லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டு இரண்டுக்கும் தனித்தனி துணை நிலை ஆளுநர்கள் நியமனம் செய்யப்பட்டனர்.

     விஜயகுமார் பதவிக்காலம்

    விஜயகுமார் பதவிக்காலம்

    இதையடுத்து சத்யபால் கோவா ஆளுநராக கடந்த வாரம் இடமாற்றம் செய்யப்பட்டார். இந்த நிலையில் ஆளுநருக்கு ஆலோசகராக இருந்த விஜயகுமாரின் பதவிக்காலம் நேற்றுடன் முடிவடைந்தது.

    நன்றி

    இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறுகையில் நான் ஆலோசகர் பதவியிலிருந்து விடை பெறுவது குறித்து பல்வேறு யூகங்கள் எழும். ஆனால் ஒன்றை புரிந்து கொள்ளுங்கள், எனது பதவிக்காலம் முடிவடைந்துவிட்டது. என் பணிகாலத்தில் கிடைத்த நல்ல நினைவுகளுடன் செல்கிறேன். முன்னாள் ஆளுநர்கள், எனக்கு ஆலோசகர்களாக இருந்தவர்கள் அத்துணை பேருக்கும் நன்றியும் வாழ்த்துகளும் என கூறியுள்ளார்.

     விஜயகுமார் பங்கேற்பாரா?

    விஜயகுமார் பங்கேற்பாரா?

    ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்துக்கு ஆளுநராக நியமிக்கப்பட்ட ஜிசி முர்முவின் பதவியேற்பு நிகழ்ச்சியில் விஜயகுமார் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. விழா தலைநகர் டெல்லியில் நடைபெறுகிறது. ஜம்மு காஷ்மீர் இரண்டாக பிரிக்கப்பட்டு யூனியன் பிரதேசங்களாக அறிவிக்கப்பட்ட போது விஜயகுமார் துணை நிலை ஆளுநராக நியமிக்கப்படலாம் என்ற பேச்சு பரவலாக இருந்தது.

    English summary
    IPS officer K.Vijayakumar completes his tenure as advisor to Jammu Kashmir Governor.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X