டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஸ்டாலினுக்கு கூட இப்படி ஒரு மரியாதை இல்லை.. 21 எதிர்க்கட்சிகளை வழிநடத்திய கனிமொழி.. தேசிய வைரல்!

எதிர்க்கட்சிகள் இன்று நடத்திய ஆலோசனை கூட்டத்தில் திமுக எம்.பி கனிமொழிக்கு பெரிய அளவில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு உள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    lok sabha elections 2019 : ஒன்றுகூடிய 21 எதிர்கட்சி தலைவர்கள்! கனிமொழியும் பங்கேற்பு- வீடியோ

    டெல்லி: எதிர்க்கட்சிகள் இன்று நடத்திய ஆலோசனை கூட்டத்தில் திமுக எம்.பி கனிமொழிக்கு பெரிய அளவில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு உள்ளது. எதிர்க்கட்சிகளை கனிமொழி வழிநடத்தி சென்ற புகைப்படம் பெரிய வைரலாகி உள்ளது.

    நடந்து முடிந்த லோக்சபா தேர்தலின் போது வாக்குபதிவு எந்திரத்தில் பல இடங்களில் கோளாறு ஏற்பட்டது. எந்திர கோளாறு காரணமாக வாக்குபதிவு நடப்பதில் பல இடங்களில் தாமதம் ஏற்பட்டது. சில இடங்களில் வாக்குகள் தவறுதலாக பாஜக கட்சிக்கு சென்றதும் குறிப்பிடத்தக்கது.

    இதையடுத்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டது உட்பட பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி எதிர்க்கட்சிகள் தேர்தல் ஆணையத்தை இன்று சந்தித்தது.

     பெரிய சைஸ் காவி நிற நாய் பொம்மை பக்கத்தில் ட்விங்கிள் கன்னா தியானம்.. மோடியை கிண்டல் செய்து ட்வீட் பெரிய சைஸ் காவி நிற நாய் பொம்மை பக்கத்தில் ட்விங்கிள் கன்னா தியானம்.. மோடியை கிண்டல் செய்து ட்வீட்

    என்ன பிரச்சனை

    என்ன பிரச்சனை

    நாடு முழுக்க மொத்தம் 4 லட்சம் வாக்குப்பதிவு எந்திரங்கள் அங்கு வேலை செய்யாமல் பிரச்சனை செய்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தேர்தல் முடிந்துள்ள நிலையில் நாளை முக்கிய கோரிக்கைகளை முன்னிறுத்தி எதிர்க்கட்சிகள் தேர்தல் ஆணையத்தை சந்தித்தது. மொத்தம் 21 கட்சி சார்பாக தலைவர்கள் தேர்தல் ஆணையத்தை சந்தித்தார்கள்.

    யார் எல்லாம்

    யார் எல்லாம்

    ஆந்திர பிரதேச முதல்வர் சந்திரசேகர ராவ், திமுக, பகுஜன் சமாஜ், சமாஜ் வாதி, திரிணாமுல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ், ஆம் ஆத்மி சார்பாக தலைவர்கள் தேர்தல் ஆணையத்தை சந்தித்தார்கள். இந்த ஆலோசனை கூட்டம்தான் இன்று டாப் செய்தி என்பது குறிப்பிடத்தக்கது.

    என்ன கோரிக்கை

    என்ன கோரிக்கை

    இவர்கள் பின்வரும் கோரிக்கைகளை தேர்தல் ஆணையத்திடம் வைத்தனர். வாக்கு எண்ணிக்கையின் போது முறைகேட்டை தவிர்க்க வேண்டும். வாக்கு பதிவு எந்திரங்களில் ஏற்பட்ட கோளாறு, முறைகேடு தொடர்பாக விசாரிக்க வேண்டும். வாக்கு பதிவு எந்திரங்களை முடிவுகள் வெளியாகும் வரை பாதுகாக்க வேண்டும். மேற்கு வங்க கலவரம் குறித்து விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டது.

    எதிர்க்கட்சிகளின் கூட்டணி

    எதிர்க்கட்சிகளின் கூட்டணி

    இந்த எதிர்க்கட்சிகளின் சந்திப்பை கூட்டியது ஆந்திர பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடுதான். ஆனால் இதில் முன்னிலையில் இருந்தது யார் என்று பார்த்தால் அது திமுக கட்சியின் மாநிலங்களவை எம்.பி கனிமொழி என்பது குறிப்பிடத்தக்கது. ஆம் இந்த சந்திப்பு முழுக்க கனிமொழிக்கு எதிர்க்கட்சிகள் அதிக அளவில் முக்கியத்துவம் கொடுத்தது.

    கனிமொழி சொன்னார்

    கனிமொழி சொன்னார்

    உதாரணமாக சொல்ல வேண்டும் என்றால் கனிமொழிதான் எதிர்க்கட்சிகளின் தீர்மான கடிதத்தை எடுத்து சென்றது. இவர்தான் தேர்தல் ஆணைய அதிகாரிகளிடம் 21 கட்சிகள் சார்பாக அதை சமர்ப்பித்தது. குழுவை வழிநடத்தி செல்வது போல இவர்தான் முன்னிலையில் இருந்தார். இவர் குழுவிற்கு முன்பாக சென்றது தேசிய அளவில் பெரிய வைரலாகி உள்ளது.

    ஸ்டாலின்

    ஸ்டாலின்

    லோக்சபா தேர்தலில் திமுக அதிக இடங்களை வெல்லும் என்பதால், கண்டிப்பாக திமுக கட்சி முக்கிய சக்தியாக உருவெடுக்கும் என்று கூறுகிறார்கள். இதனால் திமுகவிற்கு அளிக்க வேண்டிய மரியாதையை தற்போது கனிமொழிக்கு அளித்து இருக்கிறார்கள். ஆனால் இப்படி ஒரு மரியாதை ஸ்டாலினுக்கே அளிக்கப்பட்டது இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

    எம்.பி எப்படி

    எம்.பி எப்படி

    கனிமொழிக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது என்பதற்கான காரணங்கள் இன்னும் தெளிவாகவில்லை. லோக்சபா தேர்தலுக்கு பின் காங்கிரஸ் ஆட்சி அமைத்தால், கனிமொழி முக்கிய அமைச்சரவை பொறுப்புகளை பெற வாய்ப்புள்ளது. அப்படி நடந்தால், கனிமொழி மிக முக்கியமான தலைவராக உருவெடுக்க கூட வாய்ப்புள்ளது.

    English summary
    DMK MP Kanimozhi leads All 21 opposition leaders in their meeting with Election Commission.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X