டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இந்தியாவில் ஜெட் வேகத்தில் உயர்ந்த மாநிலங்களின் கடன்.. அதிர வைத்த தமிழக கடன்.. முழு லிஸ்ட்

Google Oneindia Tamil News

டெல்லி: இந்தியாவில் உள்ள மாநிலங்களின் கடன் அளவு 55 சதவீதம் உயர்ந்து. அதேநேரம் தமிழகத்தின் கடன் அளவு கடந்த நிதியாண்டை ஒப்பிடும் போது இந்த நிதியாண்டில் 107 சதவீதம் உயர்ந்துள்ளது. நாட்டிலேயே அதிகபட்சமாக கர்நாடகாவில் 343 சதவீதம் கடன் அதிகரித்துள்ளது. அதற்கு அடுத்தபடியாக மகாராஷ்டிராவின் கடன் 218 சதவீதம் அதிகரித்துள்ளது.

எந்த மாநிலத்திற்கு எவ்வளவு சதவீதம் கடன் அதிகரித்துள்ளது என்பதை இப்போது பார்ப்போம். கொரோனா பரவல் காரணமாக கடும் நிதிநெருக்கடியில் உள்ள மாநில அரசுகள் கடன் வாங்கி ஆட்சி நடத்தி வருகின்றன.

அப்படி கடன் வாங்கி ஆட்சி நடத்துவது ஒருபுறம் எனில், ஏற்கனவே பொருளாதார மந்த நிலை, ஜிஎஸ்டி வருவாய் பற்றாக்குறை போன்றவற்றால் வரிவருவாய் பாதிக்கப்பட்டு கடும் நிதி நெருக்கடியை சந்தித்துள்ளன.

Memes: அடுத்த தேர்தலிலும் எடப்பாடியே முதல்வர் வேட்பாளரா?.. அப்ப 5 வருஷத்திற்கு லீவு கன்பர்ம்!Memes: அடுத்த தேர்தலிலும் எடப்பாடியே முதல்வர் வேட்பாளரா?.. அப்ப 5 வருஷத்திற்கு லீவு கன்பர்ம்!

தமிழகம் 4வது இடம்

தமிழகம் 4வது இடம்

நாட்டிலேயே அதிகபட்சமாக கர்நாடகாவின் கடன் 343 சதவீதம் அதிகரித்துள்ளது. அதற்கு அடுத்தபடியாக மகாராஷ்டிராவின் கடன் 218 சதவீதம் உயர்ந்துள்ளது. மூன்றாவதாக நாகலாந்தின் கடன் 200 சதவீதம் உயர்ந்துள்ளது. நான்காவதாக தமிழகத்தின் கடன் 107 சதவீதம் உயர்ந்துள்ளது.

ஒடிசா கடன் அளவு

ஒடிசா கடன் அளவு

50 முதல் 100 சதவீதம் கடன் அதிகரிப்பை சந்தித்த மாநிலங்களை இப்போது பார்க்கலாம். மத்திய பிரதேசத்தின் கடன் 100 சதவீதம் உயர்ந்துள்ளது. அதற்கு அடுத்தபடியாக மேகாலயாவின் கடன் 78 சதவீதம் உயர்ந்துள்ளது. கோவாவின் கடன் 60 சதவீதமும், அஸ்ஸாமின் கடன் 59 சதவீதமும், ஆந்திரா மற்றும் உத்தரகாண்டின் கடன் 56 சதவீதமும் உயர்ந்துள்ளது. இதேபோல் ஒடிசா மற்றும் சத்தீஸ்கரின் கடன் 50 சதவீதம் உயர்ந்துள்ளது.

குஜராத்தின் கடன் அளவு

குஜராத்தின் கடன் அளவு

50 சதவீதத்திற்கும் குறைவான கடன் உள்ள மாநிலங்கள் எவை என்பதையும் என்ன சதவீதம் கடன் அந்த மாநிலங்களுக்கு உள்ளன என்பதையும் இப்போது பார்ப்போம். இமாச்சல பிரதேசத்தின்க டசிக்கிம் மாநிலத்தின் கடன் 36 சதவீதமும், ஜம்மு காஷ்மீரின் கடன் 34 சதவீதமும், குஜராத்தின் கடன் 31 சதவீதமும் அதிகரித்துள்ளது. ராஜஸ்தான் கடன் 29 சதவீதமும், ஹரியானாவின் கடன் 28 சதவீதமும், கேரளா மற்றும் தெலுங்கானாவின் கடன் 26 சதவீதமும் உயர்ந்துள்ளது.மிசோரத்தின் கடன் 23 சதவீதமும், மேற்கு வங்கத்தின் கடன் 24 சதவீதமும் உயர்ந்துள்ளது.

இமாச்சல பிரதேசம் சூப்பர்

இமாச்சல பிரதேசம் சூப்பர்

ஆனால் அதேநேரம் பீகார், பஞ்சாப், அருணாச்சல பிரதேசம், திரிபுரா, மணிப்பூர், ஜார்க்கண்ட், உத்தரப்பிரதேசம், இமாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களின் கடன் கணிசமாக குறைந்துள்ளது. எந்த மாநிலத்தில் எவ்வளவு கடன் குறைந்துள்ளது என்பதை இப்போது பார்ப்போம். பீகாரின் கடன் 5 சதவீதமும், பஞ்சாப்பின் கடன் 8 சதவீதமும், அருணாச்சால பிரதேசத்தின் கட 9 சதவீதமும் குறைந்துள்ளது. திரிபுராவின் கடன் 11 சதவீதமும், மணிப்பூரின் கடன் 13 சதவீதமும். ஜார்க்கண்ட் கடன் 20 சதவீதமும், உத்தரப்பிரதேசத்தின் கடன் 25 சதவீதமும், இமாச்சல பிரதேசத்தின் கடன் 38 சதவீதமும் குறைந்துள்ளது.

English summary
States such as Karnataka, Maharashtra, Nagaland and Tamil Nadu have seen an increase of over 100 per cent borrowings, from year ago period.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X