டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கர்நாடகா: தகுதி நீக்கத்தை எதிர்த்து 3 எம்.எல்.ஏக்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு

Google Oneindia Tamil News

டெல்லி: தங்களை தகுதி நீக்கம் செய்ததை எதிர்த்து 3 கர்நாடகா எம்.எல்.ஏக்கள் உச்சநீதிமன்றத்தில் இன்று வழக்கு தொடர்ந்துள்ளனர்.

கர்நாடகாவில் ஜேடிஎஸ்-காங்கிரஸ் அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வி அடைந்தது. இந்த வாக்கெடுப்பில் பங்கேற்காத ஜேடிஎஸ்-காங்கிரஸ் மற்றும் சுயேட்சை எம்.எல்.ஏக்கள் மொத்தம் 17 பேர் தகுதி நீக்கம் செய்யப்படுவதாக சபாநாயகர் ரமேஷ்குமார் அறிவித்தார்.

Karnataka rebel MLAs move to Supreme Court

இந்த தகுதி நீக்க உத்தரவை எதிர்த்து காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏ ஜார்கோலி உள்ளிட்ட 3 பேர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். ஏற்கனவே எம்.எல்.ஏக்கள் ராஜினாமா மீதான வழக்கை உச்சநீதிமன்றம் விசாரித்தது.

ஈழத் தமிழர் பகுதிகளில் அடுத்தடுத்து விபத்துகள் - 8 ராணுவத்தினர் பலி- இலங்கை அரசு ஷாக்! ஈழத் தமிழர் பகுதிகளில் அடுத்தடுத்து விபத்துகள் - 8 ராணுவத்தினர் பலி- இலங்கை அரசு ஷாக்!

அப்போது எம்.எல்.ஏக்கள் ராஜினாமா மீது சபாநாயகர் எப்போது வேண்டுமானாலும் முடிவெடுக்கலாம் என கூறியது. அதேநேரத்தில் ராஜினாமா கடிதம் கொடுத்த எம்.எல்.ஏக்களை சபைக்கு வருமாறு கட்டாயப்படுத்தக் கூடாது; கொறடா உத்தரவு அவர்களுக்கு பொருந்தாது எனவும் உச்சநீதிமன்றம் கூறியிருந்தது.

இந்நிலையில் சபாநாயகர் எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Karnataka Rebel MLAs moved the Supreme Court against Speaker K R Ramesh Kumar’s disqualification decision.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X