டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மோடிதான் செய்தார்.. பின்னே டொனால்ட் டிரம்ப்பா செய்தார்? கார்த்தி சிதம்பரம் பகீர் புகார்!

முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் கைது செய்யப்பட்டதற்கு பிரதமர் மோடியின் காழ்ப்புணர்ச்சிதான் காரணம் என்று அவரின் மகன் மற்றும் காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    ஜாமீன் கிடைத்தாலும் கைது.. சிதம்பரத்திற்கு அமலாக்கத்துறை செக்- வீடியோ

    டெல்லி: முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் கைது செய்யப்பட்டதற்கு பிரதமர் மோடியின் காழ்ப்புணர்ச்சிதான் காரணம் என்று அவரின் மகன் மற்றும் காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

    ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனமானது இந்திராணி முகர்ஜி, பீட்டர் முகர்ஜி ஆகியோருக்கு சொந்தமானதாகும். இது மும்பையை சேர்ந்த நிறுவனம். 2007ம் ஆண்டு, மத்திய நிதியமைச்சராக ப.சிதம்பரம் இருந்தபோது, ஐஎன்எக்ஸ் நிறுவனம் ரூ.305 கோடி வெளிநாட்டு நிதியைப் பெறுவதில் முறைகேடு நடந்துள்ளது.

    இந்த வழக்கில் நேற்று ப. சிதம்பரம் கைது செய்யப்பட்டார். இந்த கைது குறித்து தற்போது காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் பேட்டி அளித்துள்ளார்.

    ஜாமீன் கிடைத்தாலும் மீண்டும் கைது.. ப.சிக்கு அமலாக்கத்துறை செக்.. அமித் ஷாவின் மாஸ்டர் பிளான்! ஜாமீன் கிடைத்தாலும் மீண்டும் கைது.. ப.சிக்கு அமலாக்கத்துறை செக்.. அமித் ஷாவின் மாஸ்டர் பிளான்!

    எதை மறைக்க

    எதை மறைக்க

    காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் தனது பேட்டியில், 370 சட்டப்பிரிவு நீக்கம் காரணமாக நாடு முழுக்க பிரச்சனை நிலவி வருகிறது. இதில் இருந்து திசை திருப்ப வேண்டும் என்று பாஜக இப்படி செய்கிறது. இந்த வழக்கு முழுக்க முழுக்க ஜோடிக்கப்பட்ட வழக்கு. இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை. இந்த வழக்கில் அவருக்கு எந்தவித தொடர்பும் கிடையாது.

    எல்லாம் அரசியல்

    எல்லாம் அரசியல்

    அரசியல் ரீதியாக மற்றும் சட்டபூர்வ முறையில் இதற்கு எதிராக நாங்கள் போராடுவோம். அரசியல் காழ்ப்புணர்ச்சியால் வழக்கு ஜோடிக்கப்பட்டு எனது தந்தையை கைது செய்துள்ளனர். மோடிக்கு என் தந்தை மீது காழ்ப்புணர்ச்சி அதனால் அப்படி செய்துள்ளார்.

    மோடிதான் காரணம்

    மோடிதான் காரணம்

    ஆம் மோடிதான் இதற்கு காரணம், பின்னே டொனால்ட் டிரம்ப்பா காரணம்.? இது ஒரு ஜோடிக்கப்பட்ட வழக்கு. 2008 ல் சம்பவம் நடந்ததாக கூறுகின்றனர். இப்போது 11 வருடம் கழித்து அதற்கு கைது செய்கிறார்கள். முன்னாள் நிதி மற்றும் உள்துறை மந்திரியின் தோற்றத்தினை சீர்குலைக்கவும் மற்றும் தொலைக்காட்சியில் பரபரப்பு ஏற்படுத்தவும் இப்படி செய்துள்ளனர்.

    முன்பு

    முன்பு

    கடந்த ஆண்டு என்னை பாடாய் படுத்தினர். இது சம்பந்தமாக 20 முறை எனக்கு சம்மன் அனுப்பினர். சி.பி.ஐ.க்கு நான் விருந்தாளியாக உள்ளேன். என்னை எப்படி எல்லாமோ முடக்க பார்த்தனர். ஆனால் அவர்களால் முடியவில்லை. இப்போது நான் எம்பி ஆகிவிட்டேன்.

    எதுவும் நடக்காது

    எதுவும் நடக்காது

    இதனால் என்னுடைய அப்பாவை முடக்க பார்க்கிறார்கள். ஆனால் பாஜக நினைக்கும் எதுவுமே நடக்காது. ஐ.என்.எக்ஸ் . வழக்கில் இதுவரை குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யவில்லை. மத்திய அரசு செய்யும் எதையும் சட்டப்படி சந்திப்போம்; எனது தந்தை எங்கும் ஓடி ஒளியவில்லை, என்று காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

    English summary
    Congress MP Karthi Chidambaram accuses PM Modi for P Chidambaram arrest.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X