டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

திகாரிலிருந்து வெளி வந்த ப.சிதம்பரம்.. தொண்டர்கள் செம வரவேற்பு.. தமிழக தலைவர்களைக் காணலேயே!

Google Oneindia Tamil News

Recommended Video

    செய்தி தெரியுமா | 05-12-2019 | Morning News | oneindia tamil

    டெல்லி: திஹார் சிறைவாசலில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை வரவேற்பதற்காக ஆட்களை திரட்டுவதற்குள் கார்த்தி சிதம்பரத்துக்கு போதும் போதும் என்றாகிவிட்டதாம்.

    தமிழகத்தில் இருந்து பெரியளவில் ப.சி. ஆதரவாளர்கள் டெல்லிக்கு வரவில்லை என்றும், அங்கிருக்கக்க கூடிய டெல்லி காங்கிரஸ்காரர்களை வைத்து ப.சிக்கு வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டது எனவும் களத்தில் இருந்த செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

    அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கு மற்றும் ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியதை அடுத்து நேற்றிரவு சிதம்பரம் சிறையிலிருந்து வெளியே வந்தது குறிப்பிடத்தக்கது.

    8 கிலோ எடை குறைந்து.. அதே கெட்டப்பில் வெளியே வந்த ப.சிதம்பரம்.. திகார் வாசலில் என்ன சொன்னார்? 8 கிலோ எடை குறைந்து.. அதே கெட்டப்பில் வெளியே வந்த ப.சிதம்பரம்.. திகார் வாசலில் என்ன சொன்னார்?

    106 நாட்கள் சிறைவாசம்

    106 நாட்கள் சிறைவாசம்

    முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் 106 நாட்கள் சிறைவாசத்துக்கு பின்பு திஹார் சிறையில் இருந்து நேற்று ஜாமீனில் வெளியே வந்தார். அப்போது அவரை வரவேற்பதற்காக அங்கு திரண்டிருந்தவர்களில் பெரும்பாலானோர் டெல்லி காங்கிரஸ் நிர்வாகிகளும், தொண்டர்களுமே தான். தமிழகத்தில் இருந்து அவர் எதிர்பார்த்தப்படி பெரியளவில் டெல்லிக்கு யாரும் செல்லவில்லை.

    மனதிடம்

    மனதிடம்

    சிறைவாசலில் காரில் ஏறி நின்றபடி பேட்டியளித்த ப.சிதம்பரம் தனது மனதிடம் குறையவில்லை என்பதை உணர்த்தும் வகையில் சில விவகாரங்களை பேசினார். சிறைச்சாலை தனது உறுதியை குலைக்கவில்லை என்பது போன்று இருந்தது ப.சிதம்பரத்தின் உடல் மொழி.

    அழைப்பு

    அழைப்பு

    ப.சிதம்பரத்துக்கு நேற்று ஜாமீன் கிடைக்க 99 % வாய்ப்பிருப்பதாக அவரது வழக்கறிஞர்கள் இரண்டு நாட்களுக்கு முன்பே கார்த்தி சிதம்பரத்திடம் நம்பிக்கை அளித்திருந்தனர். இதனால் தந்தையை வரவேற்பதற்காக தமிழகத்தில் இருந்து ஆதரவாளர்களை டெல்லிக்கு வருமாறு கார்த்தி அழைப்பு விடுத்திருந்தார். ஆனால் அவர் எதிர்பார்த்தபடி தமிழகத்தில் இருந்து பெரியளவில் யாரும் செல்லவில்லை.

    டெல்லி காங்கிரஸ்

    டெல்லி காங்கிரஸ்

    ப.சி. வட்டாரத்திற்கு மிக மிக நெருக்கமான தமிழக நிர்வாகிகள் ஒரு சிலர் மட்டுமே டெல்லியில் ப.சி.யை வரவேற்றனர். இதனால் டெல்லி காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை வைத்து சிறைவாசலில் ப.சிதம்பரத்துக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனிடையே அவரை தனிப்பட்ட முறையில் சந்தித்து பேச தமிழக காங்கிரஸ் தலைவர்கள் டெல்லி சென்றுள்ளனர்.

    English summary
    karthi chidambaram who organized the crowd to welcome P. Chidambaram
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X