டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பாஜகவுக்கு இது ஹேப்பி டைம்.. காஷ்மீர் விவகாரத்துக்கு மக்கள் தந்த பரிசா.. எக்சிட் போல் சொல்வது என்ன?

காஷ்மீர் சிறப்பு சட்ட நீக்கத்திற்கு மக்கள் தந்த பரிசா இது என தெரியவில்லை

Google Oneindia Tamil News

Recommended Video

    Exit polls results for maharashtra and haryana election

    டெல்லி: ஹரியானா, மகாராஷ்டிரா எக்சிட் போல்முடிவுகள் காஷ்மீர் சிறப்பு சட்ட நீக்கத்திற்கு மக்கள் கொடுத்த பரிசுதான் இந்த வெற்றியா என தெரியவில்லை.

    மகாராஷ்டிராவைப் பொறுத்தவரை பாஜகவின் கை பெரிய அளவில் வலிமையாகியுள்ளது. சிவசேனாவே சற்று மிரண்டு போகும் அளவுக்கு அங்கு பாஜக தன்னை வலிமையாக வளர்த்துள்ளது. இது பெரிய விஷயம். அங்கு பெரும்பான்மைக்கு 145 இடங்கள் தேவை. ஆனால் பாஜக கூட்டணி 244 இடம் வரை வெல்லும் என்று சொல்கிறார்கள். காங்கிரஸ் அடியோடு காலியாகியுள்ளது.

    இதை விட பெரிய ஆச்சரியம் ஹரியானாதான். ஹரியானாவில் காங்கிரஸ் கட்சி கிட்டத்தட்ட சின்னாபின்னமாகியுள்ளது. சுயேச்சைகள் ரேஞ்சுக்கு அது தள்ளப்பட்டுள்ளது. அதிகபட்சம் 15 இடங்களுக்குள்தான் அக்கட்சிக்குக் கிடைக்கக் கூடும் என்று எல்லா கணிப்புகளுமே கூறி விட்டன. அதேசமயம் பாஜகவுக்கு 70 இடங்களுக்கு மேல் தாராளமாக கிடைக்கும் என்று அனைவருமே கூறியுள்ளனர் அங்குள்ள மொத்த இடங்கள் 90 ஆகும்.

    அடித்து நொறுக்கும் மோடி - அமித் ஷா இரட்டைகுழல் துப்பாக்கி.. 2 மாநில தேர்தலை வெல்கிறதுஅடித்து நொறுக்கும் மோடி - அமித் ஷா இரட்டைகுழல் துப்பாக்கி.. 2 மாநில தேர்தலை வெல்கிறது

    ராகுல் காந்தி

    ராகுல் காந்தி

    இந்த எக்சிட் போல் கணிப்புகளைப் பார்த்தால் ஒன்று தெளிவாக தெரிகிறது. காங்கிரஸ் கட்சி மிகப் பெரிய சரிவை சந்தித்துள்ளது. லோக்சபா தேர்தல் தோல்வியிலிருந்து கட்சியினர் இன்னும் மீளவில்லை என்பதையே இது காட்டுகிறது. ராகுல் காந்தி தலைவர் பதவியிலிருந்து விலகியது கட்சியை மேலும் மோசமான நிலைக்குத் தள்ளியுள்ளது என்றும் இதை எடுத்துக் கொள்ளலாம். அதேபோல கட்சியினரை தட்டிக் கொடுத்து மீட்டுக் கொண்டு வரும் தலைவர் காங்கிரஸில் இல்லை என்பதையும் இது புரிய வைத்துள்ளது.

    கோட்டை

    கோட்டை

    காங்கிரஸ் கட்சியின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாகியுள்ளது. வலிமையான தலைவர் கட்சிக்கு அவசியம் தேவை, அவசரமாக தேவை என்பதையும் இந்த முடிவுகள் புரிய வைக்கின்றன. காரணம், காங்கிரஸ் படு மோசமான நிலைக்குப் போயுள்ள இந்த இரு மாநிலங்களுமே ஒரு காலத்தில் கட்சியின் கோட்டையாகும். ஆனால் ஒரு சுயேச்சை ரேஞ்சுக்கு கட்சி தள்ளப்பட்டிருப்பது ஆச்சரியமாக உள்ளது.

    ஆதரவு

    ஆதரவு

    மறுபக்கம் மத்திய பாஜக அரசு ஜம்மு காஷ்மீர் சிறப்புசட்டத்தை அதிரடியாக நீக்கிய நிலையில் இந்த தேர்தலை சந்தித்தது. அதற்கு மக்களிடையே ஆதரவு அதிகமாக கிடைத்திருப்பதையே எக்சிட் போல் முடிவுகள் சுட்டிக் காட்டுகின்றன. இது நிச்சயம் பாஜகவுக்கு சந்தோஷமான திருப்திகரமான விஷயம்.

    மீண்டு வருமா?

    மீண்டு வருமா?

    மக்களின் முடிவு 24ம் தேதி அதிகாரப்பூர்வமாக தெரியும். ஆனால் மக்கள் பாஜகவிடமிருந்து விலகவில்லை என்பதை இந்த எக்சிட் போல்கள் அதற்குள்ளாகவே காட்டி விட்டன. பாஜகவுக்கு இது ஹேப்பி டைம்.. காங்கிரஸுக்கோ மிக மிக சோதனையான காலம். மீண்டும் வருமா மீண்டு வருமா.. காங்கிரஸ் தலைமையிடம்தான் பதில் உள்ளது.

    English summary
    haryana and maharashtra election exit polls: its said that, kashmir issue reflects in both maharashtra, hayraya exit polls
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X