டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இனி 'ஆல் இந்தியா ரேடியோ'.. வாசிப்பது ஸ்ரீநகரில் இருந்து.. பெயர்களும் மாறியது!

Google Oneindia Tamil News

டெல்லி: ஜம்மு காஷ்மீர் மாநிலம் லடாக் மற்றும் ஜம்மு காஷ்மீர் என இரு யூனியன் பிரதேசங்களாக இன்று பிரிந்ததை தொடர்ந்து ஜம்மு காஷ்மீரில் உள்ள வானொலி நிலையங்களின் பெயர்கள் 'அனைத்து இந்தியா வானொலி நிலையம்' என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

பல சமாஸ்தானங்களை இணைத்து இந்தியாவை உருவாக்கிய இரும்பு மனிதர் வல்லபாய் படேலின் பிறந்த நாளான இன்றைய நாள்(அக்டோபர் 31) ஜம்மு காஷ்மீர் மக்களுக்கு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நாள் ஆகும்.

kashmir radio stations renamed as the all india radio

ஐம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு சட்டம் 2019க்கு குடியரசுத் தலைவர் கடந்த ஆகஸ்ட் 9ம் தேதி ஒப்புதல் தந்தார். இதன்படி 72 ஆண்டுகளுக்கு பிறகு நள்ளிரவு 12 மணி முதல் (வியாழக்கிழமை) ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய இரண்டு புதிய யூனியன் பிரதேசங்கள் பிரிந்து செயல்பட தொடங்கி உள்ளது.

அயோத்தி, சபரிமலை, ரஃபேல்... நீதிபதி ரஞ்சன் கோகாய் தீர்ப்பளிக்க இருக்கும் முக்கிய வழக்குகள்!அயோத்தி, சபரிமலை, ரஃபேல்... நீதிபதி ரஞ்சன் கோகாய் தீர்ப்பளிக்க இருக்கும் முக்கிய வழக்குகள்!

இதில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் மட்டும் சட்டசபை செயல்பட போகிறது. லடாக் யூனியன் பிரதேசம் எம்பி தொகுதி மட்டும் இடம் பெறும். யூனியன் பிரதேசங்களை நிர்வகிப்பது போல் மத்திய அரசால் நிர்வாக அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார்.

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த நாளில் ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய இரண்டு புதிய யூனியன் பிரதேசங்கள் நடைமுறைக்கு வருவதைக் கண்டு, முந்தைய மாநிலத்தின் மறுசீரமைப்பை நடைமுறைக்குக் கொண்டு, வானொலி நிலையங்களும் மறுபெயரிடப்பட்டுள்ளன.

ஜம்முவில் அமைந்துள்ள வானொலி நிலையம் அகில இந்திய வானொலி ஜம்மு என மறுபெயரிடப்பட்டது. ஸ்ரீநகர் மற்றும் லே ஆகிய நிலையங்கள் முறையே அகில இந்திய வானொலி, ஸ்ரீநகர் மற்றும் அகில இந்திய வானொலி லே என மறு பெயரிடப்பட்டுள்ளன.

English summary
Radio Stations situated in Jammu kashmir renamed as the All India Radio
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X