டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இந்தி திணிப்பு: வரைவு திருத்தத்துக்கு எதிராக கஸ்தூரி ரங்கன் குழு உறுப்பினர்கள் போர்க்கொடி

Google Oneindia Tamil News

Recommended Video

    இந்தி கட்டாய பாடம்-கஸ்தூரி ரங்கன் குழு பரிந்துரைகள் வெளியீடு- வீடியோ

    டெல்லி: மும்மொழித் திட்டம் மூலம் இந்தியை திணிக்கும் புதிய கல்விக் கொள்கையின் வரைவு அறிக்கையில் திருத்தம் செய்ததற்கு கஸ்தூரி ரங்கன் கமிட்டியின் 2 உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து போர்க்கொடி தூக்கி உள்ளனர்.

    புதிய கல்விக் கொள்கையை உருவாக்குவதற்காக இஸ்ரோ விஞ்ஞானி கஸ்தூரி ரங்கன் தலைமையில் மத்திய அரசு ஒரு குழுவை அமைத்தது. இக்குழுவில் 11 உறுப்பினர்கள் இடம் பெற்றிருந்தனர்.

    இக்குழுவின் வரைவு அறிக்கை மத்திய அரசிடம் கடந்த வாரம் தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து பொதுமக்களின் கருத்துக்காக இணையதளத்தில் வரைவு அறிக்கை வெளியிடப்பட்டது.

    தேசபக்தியாளர்களே.. தமிழ்தான் சுத்தமான மொழி.. அதை படிங்க.. இந்தி நடிகர் அதிரடி தேசபக்தியாளர்களே.. தமிழ்தான் சுத்தமான மொழி.. அதை படிங்க.. இந்தி நடிகர் அதிரடி

    இந்தி திணிப்பு

    இந்தி திணிப்பு

    அதில், இந்தி பேசாத மாநிலங்களிலும் மும்மொழித் திட்டத்தை திணிக்கும் வகையில் பரிந்துரைகள் இடம்பெற்றிருந்தன. இந்தி பேசாத மாநிலங்களில் இந்தியை கட்டாய பாடமாக்கும் பரிந்துரைகளும் அதில் இருந்தன.

    தமிழகம் கொந்தளிப்பு

    தமிழகம் கொந்தளிப்பு

    இது தமிழ்நாடு உள்ளிட்ட இந்தி பேசாத மாநிலங்களை பெரும் கொந்தளிப்புக்குள்ளாக்கியது. தமிழக அரசு மற்றும் தமிழக அரசியல் கட்சிகள் போர்க்குரல் எழுப்பின. இதனால் தமிழ்நாட்டில் மீண்டும் இந்தி திணிப்புக்கு எதிராக மீண்டும் போராட்டங்கள் வெடிக்கும் சூழ்நிலை எழுந்தது.

    மத்திய அரசு பல்டி

    மத்திய அரசு பல்டி

    இதையடுத்து வரைவு அறிக்கையில் திருத்தம் செய்துவிட்டோம்; இந்தியை திணிக்கமாட்டோம் என மத்திய அரசு கூறியது. ஆனாலும் மும்மொழித் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என மத்திய அரசு தெரிவித்தது மேலும் சர்ச்சையானது. இன்று இல்லாவிட்டால் நாளை இந்தியை திணிக்கவே மும்மொழிக் கொள்கையை வைத்திருக்கிறார்கள்; இதனால் மும்மொழிக் கொள்கையை கைவிட்டு இருமொழிக் கொள்கைதான் தேவை என அறிவிக்க வேண்டும் என்கிற குரல்களும் எழுந்தன.

    கஸ்தூரி ரங்கன் கமிட்டியில் எதிர்ப்பு

    கஸ்தூரி ரங்கன் கமிட்டியில் எதிர்ப்பு

    இதனிடையே திருத்தம் மேற்கொள்ளப்பட்டதற்கு கஸ்தூரி ரங்கன் கமிட்டியில் இடம் பெற்றிருந்த 2 உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மத்திய பிரதேச முன்னாள் துணைவேந்தர் ராம்சங்கர் குரீல், உத்தரப்பிரதேச மாநில முன்னாள் கல்வித்துறை செயலாலர் கே.எம். திரிபாதி ஆகியோர்தான் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தி உள்ளனர்..

    மும்மொழிக் கொள்கை அவசியம்

    மும்மொழிக் கொள்கை அவசியம்

    இது தொடர்பாக குரீல் கூறுகையில், நாங்கள் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சரிடம் மே 31-ல் அறிக்கையை தாக்கல் செய்துவிட்டோம். மும்மொழிக் கொள்கை என்பது நாட்டின் ஒற்றுமைக்கு அவசியமானது என்றார். கஸ்தூரி ரங்கன் கமிட்டி உறுப்பினர்கள் மத்திய அரசுக்கு எதிராக குரல் கொடுத்திருப்பது புதிய சர்ச்சையாகி உள்ளது.

    English summary
    Two Kasturi Rangan Committee members strongly object over the NEP draft revise after the Protest voices from TamilNadu.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X