டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஓட்டுப்போட வரிசையில் நிற்கும் முஸ்லீம் பெண்கள்.. கர்நாடக பாஜக வெளியிட்ட சர்ச்சை டுவிட்

Google Oneindia Tamil News

Recommended Video

    டெல்லி தேர்தல்: ஓட்டுப்போட வரிசையில் நிற்கும் முஸ்லீம் பெண்கள் - வீடியோ

    பெங்களூர்: டெல்லி சட்டசபை தேர்தலில் முஸ்லிம் பெண்கள் வாக்களிக்க வரிசையில் நிற்க கூடிய ஒரு வீடியோவை பயன்படுத்தி, கர்நாடக பாஜக தனது ட்விட்டர் கணக்கில் பகீர் ட்விட்டை வெளியிட்டுள்ளது.

    டெல்லி சட்டசபைக்கு இன்று காலை முதல் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. மக்கள் ஆர்வமுடன் வாக்களித்து வருகிறார்கள்.

    இந்த நிலையில்தான் கர்நாடக பாஜக கட்சியின் அதிகாரப்பூர்வமான ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோ பகிரப்பட்டு அதனுடன் ஒரு எச்சரிக்கை வாசகம் இடம்பெற்றுள்ளது.

    சும்மா கிடந்த சங்கை.. தேவையில்லாமல் விஜய்யைத் தொட்டு விட்டதா பாஜக? சும்மா கிடந்த சங்கை.. தேவையில்லாமல் விஜய்யைத் தொட்டு விட்டதா பாஜக?

    வீடியோ

    அந்த வீடியோவில் இஸ்லாமிய பெண்கள் வரிசையாக நின்றபடி தங்கள் வாக்காளர் அடையாள அட்டையை காண்பிக்கிறார்கள். பொதுவாக செய்தி நோக்கத்திற்காக புகைப்படம் அல்லது வீடியோ எடுக்கும் போது வாக்காளர் அடையாள அட்டையை காண்பிப்பது என்பது ஒரு மரபு. அந்த வகையில் இவ்வாறு பெண்கள் தங்கள் வாக்காளர் அடையாள அட்டையை காட்டி போஸ் கொடுக்கும் காட்சி இடம் பெற்றிருந்தது.

    ஆவணங்களை வைங்க

    ஆவணங்களை வைங்க

    இந்த வீடியோவை பதிவு செய்துள்ள கர்நாடக பாஜக ட்விட்டர் தளம், இந்த ஆவணங்களை பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுங்கள்.. தேசிய குடிமக்கள் பதிவேடு நடைமுறையின் போது மீண்டும் இதை நீங்கள் காண்பிக்கும் தேவை ஏற்படும் என்று தெரிவித்து உள்ளது. குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு இன்னும் எதிர்ப்பு ஓயாத நிலையில் குடிமக்கள் தேசிய பதிவேடு திட்டம் தொடர்பாக பாஜக கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    முரண்

    இதனிடையே நெட்டிசன்கள் உள்துறை அமைச்சர் அமித் ஷா லோக்சபாவில் சமீபத்தில் தேசிய குடிமக்கள் பதிவேடு திட்டம் தொடர்பாக அரசு இன்னும் எந்த ஒரு முடிவும் எடுக்கவில்லை என்று கூறியதை இந்த டுவிட்டருக்கு பின்னூட்டமாக தெரிவித்து வருகிறார்கள். மக்கள் அச்சப்பட வேண்டாம் என்று ஒருபக்கம் கூறிக்கொண்டே மற்றொரு பக்கம் இவ்வாறான கருத்துக்களை தெரிவிப்பது பாஜகவின் முரண்பட்ட கொள்கையாக இருக்கிறது என்று நெட்டிசன்கள் ஆதங்கம் தெரிவித்து வருகிறார்கள்.

    ஓட்டு போடும் இந்தியர்கள்

    ஆமா.. மீண்டும் ஆவணத்தை காட்ட வேண்டும் என்கிறீர்களே, அவர்கள் இந்திய குடிமக்கள் இல்லை என்றால், எப்படி ஓட்டுபோடுகிறார்கள் என்று கேட்கிறார் இந்த நெட்டிசன். இவ்வாறு, கர்நாடக பாஜக டுவிட்டர் பதிவுக்கு எதிராக, கடுமையான பின்னூட்டங்களை நெட்டிசன்கள் பதிவு செய்து வருவதை பார்க்க முடிகிறது.

    English summary
    Keep the documents safe, you will need to show them again during #NPR exercise, says Karnataka BJP Tweeter.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X