டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஆதிச்சநல்லூரா அது எங்கே இருக்கிறது.. கீழடி பற்றி அறிவிப்பு எங்கே? ப.சிதம்பரம் கேள்வி

Google Oneindia Tamil News

Recommended Video

    Budget 2020 | Govt to set up museum in Adichanallur

    டெல்லி: கீழடி என்பது திராவிட கலாச்சாரத்தை எடுத்துக் காட்டக்கூடிய ஒரு பகுதி. அங்கு அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு வெளியிடவில்லை என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் விமர்சனம் செய்துள்ளார்.

    இதுகுறித்து டெல்லியில், நிருபர்களிடம் நிர்மலா சீதாராமன் கூறியதாவது: தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஆதிச்சநல்லூர் பகுதியில் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று பட்ஜெட்டில் தெரிவித்துள்ளார்கள். அது எங்கே இருக்கிறது? இவ்வாறு சிதம்பரம் கேள்வி எழுப்ப, பெண் நிருபர் ஒருவர் தமிழகத்தில் என பதில் அளித்தார்.

    Keezhadi is not given impotrant: P Chidambaram

    இதற்கு பதிலளித்த ப.சிதம்பரம் "தமிழகம் என எனக்கும் தெரியும். எங்கே இருக்கிறது?" என பதிலுக்கு கேட்க, தூத்துக்குடி மாவட்டம் என நிருபர்கள் பதிலளித்தனர்.

    மேலும் தனது பேட்டியை தொடர்ந்த சிதம்பரம், ஆதிச்சநல்லூர் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கலாம். இருப்பினும், கீழடி என்பது, திராவிட நாகரிகத்தை அதிகாரப்பூர்வமாக எடுத்துக் காட்டிய ஒரு பகுதி.

    சிந்து சமவெளி நாகரீகத்தை போலவே திராவிடர் நாகரிகம் கீழடியில் கண்டெடுக்கப்பட்டது. இதற்கு, நிறைய ஆதாரம் மற்றும், பொருட்கள் அங்கே கிடைத்தன.

    ஆதிச்சநல்லூர் உட்பட 5 இடங்களில் அருங்காட்சியகம்.. பல நாள் கோரிக்கையை நிறைவேற்றிய நிர்மலா சீதாராமன்! ஆதிச்சநல்லூர் உட்பட 5 இடங்களில் அருங்காட்சியகம்.. பல நாள் கோரிக்கையை நிறைவேற்றிய நிர்மலா சீதாராமன்!

    கடந்த ஐந்து வருடங்களில் புதிய நிறுவனங்கள் தொடங்கும் விகிதம் 12.2 சதவீதமாக இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்கள். ஆனால் அவர்கள் எந்த உலகத்தில் இருக்கிறார்கள் என்று தெரியவில்லை? நான் நாடு முழுக்க சுற்றி வந்துள்ளேன். நிறுவனங்கள் மூடப்படுவதாகத்தான் எனக்கு தகவல் வருகிறது. சுரங்கம், கட்டுமானம் மற்றும் உற்பத்தி ஆகிய மூன்று துறைகள்தான் வேலை வாய்ப்பை அதிகரிக்கக் கூடியவை. ஆனால் இந்த பட்ஜெட்டில் இந்த துறைகளுக்கு என்ன முன்னுரிமை கொடுக்கப்பட்டது என்பதை நீங்களே சொல்லுங்கள்.

    எதற்காக சிந்து சரஸ்வதி நாகரிகம் என்று அடிக்கடி அவர் சொன்னார் என்று தெரியவில்லை. காஷ்மீர் மற்றும் லடாக் மக்களுக்கு தேவை சுதந்திரம். பணம் அதை கொடுக்க முடியாது. மக்கள் சுதந்திரக் காற்றை சுவாசித்தால் தான் வளர்ச்சி பணிகளை மக்கள் அனுபவிக்க முடியும். பணத்தைக் கொண்டு சுதந்திரத்தை கொடுக்கலாம் என்று மத்திய அரசு நினைத்துக்கொண்டே இருக்கிறது. இவ்வாறு சிதம்பரம் தெரிவித்தார்.

    English summary
    P Chidambaram, Congress: Indian economy is demand-constrained and investment-starved. Finance Minister has not acknowledged these two challenges, and that is a pity. Consequently, she has proposed no measures or solutions to those two challenges.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X