டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சர்ச்சைக்குரிய கேள்வித்தாள்.. நாங்கள் தயாரித்த கேள்வித்தாளே அல்ல... கேந்திரிய வித்யாலயா மறுப்பு

Google Oneindia Tamil News

Recommended Video

    பள்ளி பிள்ளைகளிடம் கேட்கும் கேள்வியா இது? - கனகராஜ் கோபம்

    டெல்லி: தலித்துகள் மற்றும் முஸ்லீம்கள் குறித்து சர்ச்சைக்குரிய கேள்விகள் இடம் பெற்று இருந்த வினாத்தாள் தாங்கள் தயாரித்த வினாத்தாள் அல்ல என கேந்திரிய வித்யாலயா நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.

    மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளின் 6ம் வகுப்பு வினாத்தாள் என ஒரு வினாத்தாள் கடந்த செப்டம்பர் 7ம் தேதி சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. அந்த வினாத்தாளில் தலித்துகள் மற்றும் முஸ்லீம்கள் குறித்து சர்ச்சைக்குரிய கேள்விகள் இடம் பெற்று இருந்தது.

    அம்பேத்கர் யார்

    அம்பேத்கர் யார்

    குறிப்பாக டாக்டர் அம்பேத்கர் எந்த வகுப்பைச் சேர்ந்தவர்? தலித் தலைவர் யார் என்று கேள்விகள் இருந்தன. இதேபோல் தலித்துகள் என்பதன் பொருள் என்ன? என்று கேள்வி கேட்டு அதற்கு விடையாக "அந்நியர்கள், தீண்டத்தகாதவர்கள், நடுத்தர வர்க்கத்தினர், உயர் வகுப்பினர்" என்று பதில் தரப்பட்டு இருந்தது. இதில் ஏதேனும் ஒன்றை மாணவர்கள் தேர்ந்தெடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

    தவறான கேள்வி

    தவறான கேள்வி

    இதேபோல் பொதுவாக முஸ்லிம்களின் பண்பு என்ன? என்ற கேள்விக்கு, "முஸ்லிம்கள் பெண்களை பள்ளிக்கு அனுப்ப மாட்டார்கள். அசைவ உணவு பழக்கம் உள்ளவர்கள், நோன்பு காலங்களில் தூங்குவதில்லை" என்று பட்டியல் தரப்பட்டு இருந்தது.

    வைகோ- டிடிவி கண்டனம்

    வைகோ- டிடிவி கண்டனம்

    இந்த கேள்விகள் அடங்கிய வினாத்தாள் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பெரும் வைரலாக பரவியது. இதை பார்த்த திமுக தலைவர் ஸ்டாலின்,சாதி பாகுபாட்டையும் வகுப்புவாதத்தையும் பரப்பும் கேள்விகள் கேந்திரிய வித்யாலயா 6ம் வகுப்புத் தேர்வில் இடம்பெற்றிருப்பதை கண்டு பெரும் அதிர்ச்சி அடைந்தேன் என கூறியிருந்தார். இதேபோல் வைகோ, டிடிவி தினகரன், கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களும் கண்டனம் தெரிவித்து இருந்தனர்.

    போலியான கேள்வித்தாள்

    போலியான கேள்வித்தாள்

    இதனால் பெரும் சர்ச்சை எழுந்த நிலையில் முஸ்லீம்கள் குறித்தும் தலித்துகள் குறித்தும் கேந்திரிய வித்யாலயா பள்ளி கேள்வித்தாளில் தவறாக சித்தரித்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் பரவும் செய்தி உண்மைக்கு புறம்பானது என்றும் . சமூக வலைத்தளவாசிகள் பரவும் போலியான கேள்வித்தாளை பரப்ப வேண்டாம் என்றும் கேந்திரிய வித்யாலயா விளக்கம் அளித்துள்ளது.

    வினாத்தாளே கிடையாது

    வினாத்தாளே கிடையாது

    சென்னை பிராந்தியத்தைச் சேர்ந்த 49 கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் யாரும் இதுபோன்ற கேள்வித்தாளை தயாரிக்கவில்லை. சமூக வலைதளங்களில் பரவுவது கேந்திரிய வித்யாலயா பள்ளிகளின் வினாத்தாளே கிடையாது என மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

    English summary
    The question paper being shared on social media not related to any Kendriya Vidyalaya," clarified the Kendriya Vidyalaya Sangathan
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X