டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கொரோனாவுக்கு தற்போது சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையில் 3-வது இடத்தில் கேரளா; தமிழகம் 4-வது இடம்

Google Oneindia Tamil News

டெல்லி: நாடு தழுவிய அளவில் கொரோனாவுக்கு தற்போது சிகிச்சை பெறுவோர்- ஆக்டிவ் கேஸ்கள் எண்ணிக்கையில் கேரளா 3-வது இடத்தில் உள்ளது.

இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 74,16,538 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் ஆனவர்கள் எண்ணிக்கை 65,05,179. இந்தியாவில் மொத்த கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 1,12,862.

தமிழகத்தில் இன்று 4,389 பேருக்கு கொரோனா பாதிப்பு- 5,245 பேர் டிஸ்சார்ஜ்; 57 பேர் உயிரிழப்பு!தமிழகத்தில் இன்று 4,389 பேருக்கு கொரோனா பாதிப்பு- 5,245 பேர் டிஸ்சார்ஜ்; 57 பேர் உயிரிழப்பு!

இந்தியாவில் கொரோனா நிலவரம்

இந்தியாவில் கொரோனா நிலவரம்

இந்தியாவில் தற்போதைய நிலையில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை அதாவது ஆக்டிவ்ஸ் கேஸ்கள் எண்ணிக்கை 7,97,313 மட்டும். மாநிலங்களில் மகாராஷ்டிராவில் 1,89,715 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுகின்றனர்.

3வது இடத்தில் ஆக்டிவ் கேஸ்கள்

3வது இடத்தில் ஆக்டிவ் கேஸ்கள்

2-வதாக கர்நாடகாவில் மொத்தம் 1,13,538 பேர் தற்போது கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த ஆக்டிவ் கேஸ்கள் பட்டியலில் கேரளா 3-வது இடத்தில் இருக்கிறது. கேரளாவில் 95,009 பேர் கொரோனாவுக்காக தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழக நிலவரம்

தமிழக நிலவரம்

ஆனால் தமிழகத்தில் 40,956 பேர்தான் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுகின்றனர். இது இந்திய அளவில் 4-வது இடம். 5வது இடத்தில் உள்ள ஆந்திராவில் மொத்தம் 38,979 பேர்தான் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனா மரணங்கள் எண்ணிக்கை

கொரோனா மரணங்கள் எண்ணிக்கை

கொரோனா மரணங்களில் மகாராஷ்டிராவில் 38,979 பேர் உயிரிழந்துள்ளனர். 2வது இடத்தில் உள்ள தமிழகத்தில் 10,532 பேர் கொரோனாவால் மாண்டு போயினர். கேரளாவில் இதுவரை மொத்தமே 1,114 பேர்தான் கொரோனாவால் பலியாகி உள்ளனர். இது இந்திய அளவில் 16-வது இடம் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Kerala become biggest hotspot in Acitve cases in Nationawide.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X