டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கல்வியறிவு பெற்ற மாநிலங்கள்.. பீகாரை விட பின் தங்கிய தென்மாநிலங்கள்.. தமிழகம் இடம் தெரியுமா?

Google Oneindia Tamil News

டெல்லி: கல்வியறிவு பெற்ற மாநிலங்கள் முதலிடத்தில் கேரள மாநிலம் உள்ளது. இந்தியாவில் கல்வி அறிவு விஷயத்தில் கடைசி இடத்தில் ஆந்திரா உள்ளது. தமிழகம் 8வது இடத்தில் இருக்கிறது. ஏழு வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்கள் கல்வி அறிவு பெற்றதை அடிப்படையாக கொண்டு வெளியான புள்ளி விவரத்தின் அடிப்படையில் இந்த விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

தேசிய புள்ளிவிவரங்கள் அலுவலகம் வெளியிட்ட சர்வே முடிவுகளின் படி, நாடு முழுவதும் ஒட்டுமொத்த கல்வியறிவு சதவீதம் 77.7%ஆக உள்ளது. நகர்ப்புறங்களில் 87.7 சதவீதமாகவும் கிராமப்புறங்களில் 73.5%மாகவும் உள்ளது. ஆண்களின் கல்வியறிவு சதவீதம் 84.7 ஆகவும், பெண்கள் சதவீதம் 73.5 ஆகவும் இருக்கிறது.

Kerala is one of the most educated states, Tamil Nadu is in 8th place

கல்வியறிவு பெற்ற மாநிலங்கள் பட்டியலில் கேரளா 96.2 சதவீதத்துடன் முதல் இடத்தில் இருக்கிறது. அதைத் தொடர்ந்து டெல்லி 88.7 சதவீதத்துடன் 2வது இடத்தை பிடித்துள்ளது. உத்தரகாண்ட் 87.6 சதவீதத்துடன் 3வது இடத்தையும், இமாச்சல் பிரதேசம் 86.6 சதவீதத்துடன் 4வது இடத்தையும், அசாம் 85.9 சதவீதத்துடன் 5வது இடத்தையும் பிடித்துள்ளன. தமிழகம் 82.9 சதவீதத்துடன் 8வது இடத்தில் இருக்கிறது.

 லாக்டவுனை விதித்து 130 கோடி இந்தியர்களை காப்பாற்றிய பிரதமர் மோடியை உலகமே பாராட்டுகிறது.. ஜேபி நட்டா லாக்டவுனை விதித்து 130 கோடி இந்தியர்களை காப்பாற்றிய பிரதமர் மோடியை உலகமே பாராட்டுகிறது.. ஜேபி நட்டா

உத்தரப்பிரதேசம் பீகாரைவிடவும் தென் மாநிலங்கள் கல்வியறிவில் பின்தங்கி இருக்கும் அதிர்ச்சி தகவலும் இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. ஆந்திரா 66.4 சதவீதத்துடன் நாட்டிலேயே குறைவான கல்வியறிவு பெற்ற மாநிலமாக இருக்கிறது. . கடைசி 5 இடங்களில் உத்தரப்பிரதேசம் (73), தெலங்கானா (72.8), பீகார் (70.9), ராஜஸ்தான் (69.7), ஆந்திரா (66.4) ஆகிய மாநிலங்கள் விளங்குவதாக கூறப்படுகிறது.

English summary
Kerala is one of the most educated states. Andhra Pradesh ranks last in India in terms of educational knowledge. Tamil Nadu is in 8th place.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X