டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

எம்பிக்கள் செயல்பாடு எப்படி.. கேரள மக்கள் செம குஷி.. புதுச்சேரியில் ரொம்ப அதிருப்தி.. சுவாரசிய சர்வே

Google Oneindia Tamil News

டெல்லி: தங்கள் லோக்சபா எம்பிக்கள் மீது கேரள மக்களில் கணிசமானோருக்கு திருப்தி இருப்பதாகவும், ஆனால் புதுச்சேரி, ஹரியானா மக்களுக்கு திருப்தி இல்லை என்றும் தெரிவிக்கிறது, IANS C-Voter State of the Nation 2021 சர்வே.

எம்பிக்கள் செயல்பாடு பற்றி, ஐஏஎன்எஸ்-சி ஓட்டர் எடுத்த இந்த சர்வே முடிவுகளில் பல சுவாரசிய தகவல்கள் உள்ளன.

கேரளாவில், 37.31 சதவீத மக்கள் மக்களவை எம்.பி.க்கள் மீது திருப்தி அடைந்துள்ளனர். 42.87 சதவீதம் பேர் ஓரளவிற்கு திருப்தி அடைந்துள்ளனர், வெறும் 16.44 சதவீதம் பேர் மட்டும்தான் திருப்தி அடையவில்லை.

கேரளாவின் ஒட்டுமொத்த திருப்தி அளவு 63.7 சதவீதமாகும். வடகிழக்கு மாநிலங்களில் 61.3 சதவீத மக்கள் தங்கள் எம்.பி.க்கள் மீது திருப்தியுடன் உள்ளனர். கேரளாவுக்கு அடுத்த இடத்தில் விட கிழக்கு மாநிலங்கள் உள்ளன.

மோடியை விட ராகுல் காந்திதான் பிரதமர் பதவிக்கு பெஸ்ட்.. தமிழகம், கேரள மக்கள் கருத்துமோடியை விட ராகுல் காந்திதான் பிரதமர் பதவிக்கு பெஸ்ட்.. தமிழகம், கேரள மக்கள் கருத்து

இமாச்சல பிரதேசம்

இமாச்சல பிரதேசம்

இமாச்சல பிரதேசத்தில், 50.7 சதவீத மக்கள் சிட்டிங் எம்.பி.க்கள் மீது திருப்தி அடைந்துள்ளனர். 25.22 சதவீத மக்கள் ஓரளவிற்கு திருப்திப்படுத்தியடைந்துள்ளனர். 21.42 சதவீத மக்கள் தங்கள் எம்பிக்கள் செயல்பாட்டில் திருப்தியில்லை என்று கூறியுள்ளனர். எனவே இந்திய அளவில் டாப் 3வது இடத்தில் இமாச்சல பிரதேசம் உள்ளது.

 ஆந்திரா

ஆந்திரா

45.15 சதவீத மக்களுடன் ஆந்திரா நான்காவது இடத்தில் உள்ளது. அகில இந்திய அளவில், 31.52 சதவீத மக்கள் தங்கள் எம்.பி.க்கள் செயல்பாடு மீது மிகவும் திருப்தி அடைந்துள்ளனர். அதே நேரத்தில் 26.05 சதவீதம் பேர் ஓரளவிற்கு திருப்தி அடைந்துள்ளனர். இருப்பினும், 32.99 சதவீதம் பேர் அதிருப்தியிலுள்ளனர்.

ஜம்மு காஷ்மீர் மனநிலை

ஜம்மு காஷ்மீர் மனநிலை

குஜராத் 45.96 சதவீதம், ஒடிசா 41.65 சதவீதம் மக்கள், எம்பிக்கள் மீது திருப்தியடைந்துள்ளனர். புதிதாக உருவாக்கப்பட்ட ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில், 42.27 சதவீத மக்கள் சிட்டிங் எம்.பி.க்கள் மீது மிகுந்த திருப்தி அடைந்துள்ளனர், அதே நேரத்தில் 27.6 சதவீதம் பேர் திருப்தி அடையவில்லை, ஒட்டுமொத்த தரவரிசையில் 16வது இடத்தில் உள்ளது ஜம்மு காஷ்மீர்.

ஹரியானா, புதுச்சேரி

ஹரியானா, புதுச்சேரி

ஹரியானா மற்றும் புதுச்சேரியில் உள்ள மக்கள் தங்கள் மக்களவை எம்.பி.க்கள் மீது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர். ஹரியானாவில் 54.25 சதவீத மக்கள் தங்கள் பாராளுமன்ற உறுப்பினர்களின் செயல்பாட்டில் திருப்தியடையவில்லை, அகில இந்திய அளவில் அதிருப்தி வரிசையில் ஹரியானாவுக்கு முதலிடம் கிடைத்துள்ளது. புதுச்சேரியில் 46.25 சதவீதம் பேர் அதிருப்தியடைந்துள்ளனர்.

 மகாராஷ்டிரா, டெல்லி

மகாராஷ்டிரா, டெல்லி

மக்களின் திருப்தியின் அடிப்படையில் அஸ்ஸாம் 31.07 சதவீதமும், மகாராஷ்டிரா 31.2 சதவீதமும் பெற்று நெருக்கமான நிலைலயில் உள்ளன. அசாமில் 20.07 சதவீத மக்கள் எம்.பி.க்கள் மீது திருப்தி அடையவில்லை. டெல்லியில், 31.14 சதவீத மக்கள் எம்.பி.க்களால் மிகவும் திருப்தி அடைந்துள்ளனர், அதே நேரத்தில் 34.73 சதவீதம் பேர் திருப்தி அடையவில்லை. அனைத்து 543 மக்களவைத் தொகுதிகளிலும் நாடு முழுவதும் 30,000 க்கும் மேற்பட்ட மக்களிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.

English summary
Kerala and norteastern states are neck and neck when it comes to satisfaction level with the sitting Lok Sabha MPs, while people in Haryana and Puducherry have registered their satisfaction level in the negative, as per the IANS C-Voter State of the Nation 2021 survey.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X