டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கூகுளில் இருந்த ''அந்த'' தவறு.. கண்டுபிடித்த 23 வயது இந்திய மாணவர்.. எப்படி கவுரவித்தது தெரியுமா?

கூகுளில் உள்ள குறைகளை கண்டுபிடித்த காரணத்தால் கூகுளின் ''ஹால் ஆப் ஃபேம்'' புத்தகத்தில் இந்தியாவை சேர்ந்த மாணவர் ஒருவரின் பெயர் இடம்பிடித்துள்ளது.

Google Oneindia Tamil News

டெல்லி: கூகுளில் உள்ள குறைகளை கண்டுபிடித்த காரணத்தால் கூகுளின் ''ஹால் ஆப் ஃபேம்'' புத்தகத்தில் இந்தியாவை சேர்ந்த மாணவர் ஒருவரின் பெயர் இடம்பிடித்துள்ளது.

கூகுள் நிறுவனத்தின் தலைமை செயலதிகாரியாக தமிழகத்தை சேர்ந்த சுந்தர் பிச்சை இருக்கிறார். இதேபோல் அமெரிக்காவில் உள்ள முக்கியமான டெக் நிறுவனங்களில் இந்தியர்கள்தான் முக்கிய பொறுப்பில் இருக்கிறார்கள்.

இந்த நிலையில் தற்போது அடுத்த இளம் படை இந்த பணிகளை நிரப்ப இந்தியாவில் இருந்து தயாராகிக் கொண்டுள்ளது. அந்த வகையில் இந்திய மாணவர் ஒருவரின் கண்டுபிடிப்பு கூகுளை திரும்பி பார்க்க வைத்துள்ளது.

புத்தகம் என்ன

புத்தகம் என்ன

கூகுளில் உள்ள தவறுகளை கண்டுபிடிப்பவர்களுக்கு ''ஹால் ஆப் ஃபேம்'' புத்தகத்தில் இடம் கிடைக்கும். அதாவது கூகுள் மேலும் சிறப்பாக இயங்கும் வகையில் அதில் உள்ள தவறுகளை சுட்டிக்காட்டும் நபர்களுக்கு இந்த புகழ் கிடைக்கும். இதில் சில இந்தியர்களின் பெயர்கள் இடம்பிடித்துள்ளது.

என்ன தவறு

என்ன தவறு

கூகுளில் உள்ள சில அதிகாரப்பூர்வ பக்கங்களில் அந்த பக்கத்திற்கு சம்பந்தம் இல்லாத நபர்கள் கூட வந்து சில தகவல்களை போஸ்ட் செய்ய முடியும் என்று கேரளாவை சேர்ந்த வைஷ்ணவ் கண்டுபிடித்து இருக்கிறார். அதாவது சில சாப்ட்வேர்கள் மூலம், ஒரு பக்கத்திற்கு சம்பந்தம் இல்லாத நபர் ஒருவர் அந்த பக்கத்தில் போஸ்ட் செய்ய முடியும், இதை கூகுளால் கட்டுப்படுத்த முடியவில்லை என்று கண்டுபிடித்துள்ளார்.

புதுச்சேரி

புதுச்சேரி

இந்த கண்டுபிடிப்பு காரணமாக அவரை பாராட்ட கூகுள் முடிவெடுத்துள்ளது. அவருக்கு தற்போது ''ஹால் ஆப் ஃபேம்'' விருது வழங்கப்பட்டுள்ளது. இவர் புதுச்சேரியில்தான் பி.டெக் படித்து வருகிறார். இவருக்கு 23 வயதுதான் ஆகிறது. எதிர்காலத்தில் கூகுளில் பணியாற்ற விருப்பம் என்று இவர் கூறியுள்ளார்.

ஏற்கனவே இதேபோல்

ஏற்கனவே இதேபோல்

இதேபோல் ஏற்கனவே சிலர் கூகுளில் உள்ள தவறுகளை கண்டுபிடித்து இருக்கிறார்கள். சென்ற வருடம் அதுல் ஜெயராமன் என்ற நபரும், ஸ்ரீநாத் சசிகுமார் என்ற நபரும் இதேபோல் கூகுள் பக்கத்தில் உள்ள தவறுகளை கண்டுபிடித்தனர். பின் அதனால் ''ஹால் ஆப் ஃபேம்'' புத்தகத்தில் இடம் பிடித்தனர்.

English summary
Kerala student gets into Google hall of fame after finds a bug the giant.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X