டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கேரளாவில் நாளை முதல் பலத்த மழை பெய்யும்.. இந்திய வானிலை மையம் வார்னிங்

Google Oneindia Tamil News

Recommended Video

    தேனி மாவட்டம் பெரியகுளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் இடி மின்னலுடன் கூடிய சாரல் மழை- வீடியோ

    டெல்லி: கேரளாவில் நாளை பலத்த மழை பெய்யும் என இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது.

    தென்மேற்கு பருவமழைதான், இந்தியாவின் நீண்ட கால பருவமழையாகும். வழக்கமாக ஜூன் ஒன்றாம் தேதி தொடங்கும் இந்த மழை செப்டம்பர் மாதம் வரை நீடிக்கும். ஒரு சில முறை செப்டம்பர் மாதத்தை தாண்டியும் தென் மேற்கு பருவ மழை நீடிக்கும்.

    மத்தியப்பிரதேசம், மகாராஷ்டிரா, குஜராத், கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களின் பெரிய நீராதாரம் இந்த தென் மேற்கு பருவமழைதான். தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டிய பகுதிகளிலும் தென்மேற்கு பருவமழையின் தாக்கம் இருக்கும்.

    அதிமுகவை மிக மோசமாக விமர்சித்த துக்ளக்.. 'நமது அம்மா' பதிலை பாருங்க! அதிமுகவை மிக மோசமாக விமர்சித்த துக்ளக்.. 'நமது அம்மா' பதிலை பாருங்க!

    கைவிரித்த கோடைமழை

    கைவிரித்த கோடைமழை

    கடந்த ஆண்டு நாடு முழுவதும் போதுமான அளவுக்கு பருவமழை பெய்யவில்லை. பருவமழைதான் ஏமாற்றியது, கோடை மழையாவது ஓரளவுக்கு கைகொடுக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கோடை மழையும் கைவிரித்துவிட்டது.

    கடும் தண்ணீர் தட்டுப்பாடு

    கடும் தண்ணீர் தட்டுப்பாடு

    இதனால் தென்னிந்திய மாநிலங்கள் மட்டுமின்றி வட மாநிலங்களும் கடும் வறட்சியை சந்தித்து வருகின்றன. குடிநீருக்கே குடத்துடன் அலையும் நிலை ஏற்பட்டுள்ளது.

    குறைந்தளவு இருப்பு

    குறைந்தளவு இருப்பு

    அனைத்து மாநிலங்களிலும் உள்ள அணைகள், ஏரிகள் உள்ளிட்ட நீர் ஆதாரங்கள் பெரும்பாலும் வறண்டுவிட்டன. ஒரு சில அணைகள் மிகக்குறைந்தளவு நீரை மட்டுமே இருப்பு வைத்து நிலைமையை சமாளித்து வருகின்றன.

    தாமதமான பருவமழை

    தாமதமான பருவமழை

    இந்நிலையில் ஜூன் ஒன்றாம் தேதி தொடங்கும் தென்மேற்கு பருவமழையால் தண்ணீர் தட்டுப்பாடும் வெயிலும் குறையும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஒன்றாம் தேதி தொடங்க வேண்டிய பருவமழை ஒருவாரம் தாமதமாக நேற்றுதான் தென்னிந்தியாவை அடைந்துள்ளது.

    மக்கள் மகிழ்ச்சி

    மக்கள் மகிழ்ச்சி

    இதனால் கேரளாவின் பல பகுதிகளில் நேற்று பரவலாக மழை பெய்தது. இன்றும் மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில் மழை நீடித்து வருகிறது. ஒரு வழியாக மழை தொடங்கியதையடுத்து மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

    நாளை பலத்த மழை பெய்யும்

    நாளை பலத்த மழை பெய்யும்

    இந்நிலையில் வரும் நாட்களில் கேரளாவில் பலத்த மழை பெய்யும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. கேரள மாநிலத்தின் கடலோர மாவட்டம் மற்றும் பல பகுதிகளில் நாளை பலத்த மழை பெய்யும் என்றும் வானிலை மையம் எச்சரித்துள்ளது.

    English summary
    Southwest monsoon hits Kerala. Kerala will face heavy rains tomorrow said Indian Meteorological center.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X