டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இன்று முதல் ஜியோ ஜிகா ஃபைபர் பிராட்பேண்ட் சேவையை பெறுவது எப்படி? தெரிஞ்சுக்க வேண்டிய விஷயங்கள்

Google Oneindia Tamil News

Recommended Video

    ஜியோ ஜிகா ஃபைபர் சேவையை பெறுவது எப்படி? தெரிஞ்சுக்க வேண்டிய விஷயங்கள்

    டெல்லி: ஜியோ ஜிகா பைபர் இன்று வணிக ரீதியாக அறிமுகம் ஆகிறது. ஜியோ பைபர் இணையதள சேவையை வாங்குவதற்கு முன்பு தெரிஞ்சுக்க வேண்டிய விஷயங்களை இப்போது பார்ப்போம்.

    கடந்த மாதம் நடைபெற்ற ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில், ஜியோ ஜிகா பைபர் பிராட்பேண்ட் சேவையை முகேஷ் அம்பானி அறிமுகம் செய்து வைத்தார். சுமார் 1100 நகரங்களில் 5 கோடி வீடுகளுக்கு அதிவேக இணைய வசதி சேவை தொடங்கப்பட உள்ளது.

    இதன்படி ஜியோ ஜிகா பைபர் சேவை 700 முதல் ரூ 10000 வரை பிளான்களுக்கு ஏற்ப கிடைக்கும். இந்த சேவைகளை ஆண்டுக்கும், மாதத்துக்கும் பெற்று கொள்ள முடியும். 100 Mbps வேகம் கொண்ட இணையதள சேவை ரூ 700க்கு கிடைக்கும். அதிகபட்சமாக ஒரு ஜிபி வேகம் வரை உள்ளது.

    ரிலையன்ஸ் ஜியோ பெயரைச் சொல்லி திருட்டு! உஷார் மக்களே உஷார்..!

    ஜிகா சேவை உள்ள நகரங்கள்

    ஜிகா சேவை உள்ள நகரங்கள்

    முதல் கட்டமாக இன்று டெல்லி, மும்பை, கொல்கத்தா, ஜெய்ப்பூர், ஹைதராபாத், சூரத், வதோதரா, சென்னை, நொய்டா, காஸியாபாத், புவனேசுவரம், வாரணாசி, அலகாபாத், பெங்களூர், லக்னோ, பஞ்சாப், போர்ட் பிளேர், கயை, பாட்னா, மீரட், ஆக்ரா, விசாகப்பட்டினம் உள்ளிட்ட நகரங்களில் அறிமுகம் செய்யப்படுகிறது. மற்ற நகரங்களில் விரைவில் அமல்படுத்தப்பட உள்ளது.

    ஓடிபி வரும்

    ஓடிபி வரும்

    ஜிகாஃபைபர் பிராட்பேண்ட் சேவையை பெறுவதற்கு jio.com அல்லது My Jio மொபைல் செயலி வழியாக உங்களின் தகவல்களைக் கொடுத்து முன் பதிவு செய்யலாம். இப்படி முன்பதிவு செய்வோருக்கு ஒடிபி வரும். அதனை மீண்டும் ஜியோ வலைதளத்தில் கொடுத்தால் மீண்டும் வீட்டு முகவரியை உறுதி செய்ய சொல்வார்கள். அதன்பிறகு வாடிக்கையாளர்களுக்கு முன்னுரிமை பேரில் இணைப்புகள் வழங்குவார்கள்.

    வீட்டுக்கு அருகே பைபர்

    வீட்டுக்கு அருகே பைபர்

    ஒரு முறை நாம் பதிவு செய்துவிட்டால் ஜியோ நிறுவனத்தினரே நம்மை அழைத்து ஜிகா ஃபைபர் இணைப்பு குறித்து பேசுவார்களாம். அதன்பிறகு வீட்டுக்கே வந்து ஜிகா பைபர் ரவுட்டரை இன்ஸ்டால் செய்வார்கள். ரவுட்டர் இன்ஸ்டால் செய்த இரண்டு மணி நேரத்தில் ஆக்டிவேட் ஆகிவிடும். ஜியோ பைபர் சேவை உங்கள் வீட்டின் அருகில் சென்றால் மட்டுமே உங்களுக்கு இச்சேவை தற்போதைய நிலையில் கிடைக்கும்.

    இரண்டு மாதம் சலுகை

    இரண்டு மாதம் சலுகை

    ஜியோ பைபர் சேவையை இன்ஸ்டால் செய்ய முற்றிலும் இலவசம் என்றாலும் ஜிகா பைபர் ரூட்டருக்கு ரூ.2500 கட்டணமாக வசூலிக்கிறார்கள். ஜியோ ஜிகா பைபர் முன்னோட்ட சலுகைகளை இரண்டு மாதம் இலவசமாக வழங்குகிறது. இரண்டு மாதத்திற்கு பிறகு முழுமையாக சேவை பயன்பாட்டுக்கு வந்த பின்னர் இந்த 2500 ரூபாயை எப்போது வேண்டுமானாலும் திரும்ப பெறலாம்.

    வீடியோ கேம் விளையாடலாம்

    வீடியோ கேம் விளையாடலாம்

    ஜியோ நிறுவனம் வழங்கும் செட்அப் பாக்ஸ் வழியாக கேபிள் ஆப்ரேட்டர்கள் வழங்கும் அனைத்து சேனல்களையும் கண்டு கழிக்கலாம். இந்த செட் அப் பாக்ஸ் மூலம் ஹெச்டி தரத்தில் வீடியோ கேம் விளையாட முடியும்.

     வீட்டிலேயே புதுப்படம்

    வீட்டிலேயே புதுப்படம்

    ஜியோ பைபர் சேவையை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் ஜியோ சினிமா, ஜியோ டிவி மற்றும் ஜியோ சவான் உள்ளிட்ட ஆப்களில் இருந்து இலவசமாக வீடியோக்கள் மற்றும் திரைப்படங்கள் மற்றும் சேனல்களை கண்டு கழிக்கலாம். இதேபோல் ஜியோ முதல் நாள் முதல் ஷோ திட்டத்தினையும் சலுகையாக வழங்குகிறது. இந்த சலுகையின் படி புதிய திரைப்படங்கள் ரிலீஸ் ஆகும் அன்றே முதல் நாள் முதல் காட்சியை வீட்டில் இருந்தே காண முடியும். ஜியோ நிறுவனம் நிறுவனத்தின் சில குறிப்பிட்ட திட்டத்தை தேர்வு செய்வோருக்கு 4கே தரத்தில் இலவச டிவி அல்லது இலவச பெர்சோனல் கம்ப்யூட்டர் வழங்குகிறது.

    English summary
    how to get jio gigafiber broadband, jio gigafiber registration, jio gigafiber price, things to know before buying Jio Fiber connection
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X