டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

குல்பூஷண் ஜாதவ் வழக்கில் மிகப்பெரிய வெற்றி.. மோடிக்கு நன்றி தெரிவித்த சுஷ்மா ஸ்வராஜ்

Google Oneindia Tamil News

டெல்லி: குல்பூஷன் ஜாதவ் வழக்கில் தூக்கு தண்டனையை நிறுத்தி வைத்து, சர்வதேச நீதிமன்ற நீதிபதி அப்துல் யூசூப் உத்தரவிட்டுள்ளார்.

குல்பூஷன் ஜாதவ் மீதான குற்றச்சாட்டை நிரூபிக்க போதுமான ஆதாரங்கள் இல்லை என்றும், குற்றச்சாட்டை மறுபரிசீலனை செய்யவும் பாகிஸ்தானுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Kulbhushan Jadhav case: It is a great victory for India Says Sushma Swaraj

கடந்த 2017-ம் ஆண்டு உளவு பார்த்த புகாரில் கைது செய்யப்பட்டு, பாகிஸ்தான் சிறையில் உள்ள இந்திய கடற்படை அதிகாரியான, குல்பூஷண் ஜாதவ் விவகாரத்தில், இந்தியாவிற்கு சாதகமான தீர்ப்பு வந்துள்ளது.

இதுகுறித்து, ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், குல்பூஷண் ஜாதவ் வழக்கில் சர்வதேச நீதிமன்றத்தின் தீர்ப்பை, நான் முழு மனதுடன் வரவேற்கிறேன். இது இந்தியாவுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி என்று குறிப்பிட்டுள்ளார்.

ஜாதவின் வழக்கை சர்வதேச நீதிமன்றத்தின் முன் எடுத்துச் செல்ல நாங்கள் எடுத்த முயற்சிக்கு, உறுதி துணையாக இருந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் பதிவிட்டுள்ளார்.

சர்வதேச நீதிமன்ற தீர்ப்பு ஓகே.. சரப்ஜித் சம்பவம்தான் பயமுறுத்துகிறது..குல்பூஷனுக்கு தேவை பாதுகாப்பு! சர்வதேச நீதிமன்ற தீர்ப்பு ஓகே.. சரப்ஜித் சம்பவம்தான் பயமுறுத்துகிறது..குல்பூஷனுக்கு தேவை பாதுகாப்பு!

இந்தியாவின் வழக்கை ஐ.சி.ஜே முன் மிகவும் திறமையாகவும் வெற்றிகரமாகவும் முன்வைத்த திரு.ஹரிஷ் சால்வேவுக்கு நான் நன்றி கூறுகிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.

சர்வதேச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு குல்பூஷண் ஜாதவின், குடும்ப உறுப்பினர்களுக்கு மிகுந்த ஆறுதலை அளிக்கும் என்று தான் நம்புவதாகவும் அவர் கூறியுள்ளார்.

English summary
Sushma Swaraj Tweet: I wholeheartedly welcome the verdict of International Court of Justice in the case of Kulbhushan Jadhav. It is a great victory for India
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X