டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வங்கிகளில் பணம் வாங்கி ரூ. 1400 கோடி மோசடி...சிபிஐ 4 மாநிலங்களில் ரெய்டு!!

Google Oneindia Tamil News

டெல்லி: இந்தியன் வங்கி உள்பட பல்வேறு வங்கிகளில் ரூ. 1400 கோடி அளவிற்கு கடன் பெற்று செலுத்தாமல், மோசடி செய்த வகையில் டெல்லியைச் சேர்ந்த குவாலிட்டி லிமிடெட் நிறுவனத்துக்கு சொந்தமான நாட்டின் பல்வேறு இடங்களில் சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது.

டெல்லியை இருப்பிடமாகக் கொண்டு செயல்படும், இந்த நிறுவனத்தின் இயக்குநர்கள் சஞ்சய் திங்க்ரா, சித்தாந்த் குப்தா, அருண் ஸ்ரீவஸ்தவா ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Kwality Ltd Rs 1400-crore bank CBI fraud raid in 4 states

இதுகுறித்து சிபிஐ செய்தி தொடர்பாளர் கூறுகையில், ''இந்திய வங்கிகளின் கீழ் வரும் பிஓஐ, கனரா வங்கி, பாங்க் ஆப் பரோடா, ஆந்திரா வங்கி, கார்பரேஷன் வங்கி, ஐடிபிஐ, சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா, தனலட்சுமி வங்கி, சிண்டிகேட் வங்கி ஆகியவற்றில் மோசடி செய்து பணம் பெற்றுள்ளனர். இந்த வங்கிகளில் வாங்கப்பட்ட பணத்தை திசை திருப்புதல், மோசடி முறையில் பரிவர்த்தனை செய்தது, இட்டுக்கட்டப்பட்ட ஆவணங்கள், ரசீதுகள், பொய்யான கணக்குகளை காண்பித்து கடன் பெற்றது என்று அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது'' என்றார்.

கொரோனாவால்.. 6 மாதம் கழித்து திறக்கப்பட்ட தாஜ்மகால்.. முதல் டிக்கெட்டே சீனாக்காரருக்குத்தான்! கொரோனாவால்.. 6 மாதம் கழித்து திறக்கப்பட்ட தாஜ்மகால்.. முதல் டிக்கெட்டே சீனாக்காரருக்குத்தான்!

இதையடுத்து டெல்லி, சஹரன்பூர், புலந்த்சர் (உத்தரப்பிரதேசம்), அஜ்மீர் (ராஜஸ்தான்), பல்வால் (ஹரியானா) உள்பட 8 இடங்களில் சிபிஐ இன்று சோதனை மேற்கொண்டது.

English summary
Kwality Ltd Rs 1400-crore bank CBI fraud raid in 4 states
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X