• search
டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

எல்லைக்குள் யாரும் நுழைய முயற்சிக்க மாட்டார்கள்.. ராஜ்நாத் சிங் சொன்ன மாஸ் காரணம்!

|

டெல்லி: எல்லையில் நிலைமை கட்டுப்பாட்டில் இருக்கிறது. சீன ராணுவம் இந்திய எல்லைக்குள் ஊடுருவவில்லை என பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறினார்.

நம் நாட்டின் எல்லையில் ராணுவ வீரர்கள் தாக்குப் பிடிக்க முடியாத கடுமையான குளிரிலும், சாதாரண கூடாரங்களில், எப்போது சீன ராணுவ வீரர்கள் தாக்குதல் நடத்துவார்கள் என்று தெரியாமல் இருக்கின்றனர்... ஆனால் இந்த நிலமையில் பிரதமர் நரேந்திர மோடி 8,400 கோடி ரூபாய் செலவில் வாங்கிய விமானத்தில் சுற்றி பறந்து வருகிறார். இந்த நிலைமையிலும் சீனாவின் பெயரைக் கூட எடுக்க பயப்படுகிறார் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அண்மையில் கூறியிருந்தார்.

இதற்கு பதில் அளிக்கும் வகையில் தனியார் ஊடகத்திற்கு பேட்டி அளித்த பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், சீன இராணுவத்துடனான எல்லைக்கட்டுப்பாட்டு கோட்டு பகுதி குறித்த மத்திய அரசின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியுள்ளார். "நிலைமை இந்திய ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது .... இந்திய எல்லைக்குள் சீன ராணுவ வீரர்கள் நுழைகிறார்கள் என்ற கூற்றுக்கள் முற்றிலும் ஆதாரமற்றவை.

காபூல் பல்கலைக்கழகத்தில் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலை படை தாக்குதல்.. 25 பேர் உடல் சிதறி பலி?காபூல் பல்கலைக்கழகத்தில் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலை படை தாக்குதல்.. 25 பேர் உடல் சிதறி பலி?

அவசியமில்லை

அவசியமில்லை

சீனாவுடன் தளபதி மட்ட பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. "இது எப்போது தீர்க்கப்படும் என்று எங்களுக்குத் தெரியாது, ஆனால் நாங்கள் முயற்சி செய்கிறோம். அனைத்து விவரங்களையும் வெளியிட வேண்டிய அவசியமில்லை

யாரும் நுழைய மாட்டார்கள்

யாரும் நுழைய மாட்டார்கள்

"1962 முதல் 2013 வரை என்ன நடந்தது, நான் இதைப் பற்றி எதுவும் சொல்ல விரும்பவில்லை. எங்கள் படைகள் உண்மையான எல்லைக்கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் மிகுந்த தைரியத்துடன் செயல்படுகிறது. சீனாவின் மக்கள் விடுதலை ராணுவம் (. பி.எல்.ஏ) இந்திய எல்லைக்குள் நுழைந்தது என்று கூறுவது அடிப்படை ஆதாரமற்றது.. கால்வான் மோதலுக்குப் பிறகு, நான் ராணுவ வீரர்களைச் சந்தித்தேன். எங்கள் பிரதமரும் படையினரை சந்தித்தார். இனி எங்கள் எல்லைக்குள் யாரும் நுழைய முயற்சிக்க மாட்டார்கள் என்று என்னால் சொல்ல முடியும்" என்றார்.

பாகிஸ்தான் விரக்தி

பாகிஸ்தான் விரக்தி

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு-காஷ்மீரின் (பி.ஓ.கே) ஒரு பகுதியான கில்ஜித் பல்திஸ்தான் 'தற்காலிக மாகாண அந்தஸ்தை' வழங்கும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் முடிவை கடுமையாக விமர்சித்த ராஜ்நாத் சிங்,. உண்மையில் 370 வது பிரிவு நீக்கப்பட்ட பின்னர் பாகிஸ்தான் ஆக்கிரிமிப்பு காஷ்மீரில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. கில்ஜித் பல்திஸ்தானும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரும் இந்தியாவைச் சேர்ந்தவை. அவற்றின் அந்தஸ்தில் எந்த மாற்றத்தையும் எங்களால் ஏற்க முடியாது. 370 வது பிரிவை நீக்கிய பின்னர் பாகிஸ்தான் விரக்தியடைந்துள்ளது, சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பின்னர் பாகிஸ்தான் மற்றும் பயங்கரவாத குழுக்கள் பயந்து போய் இருக்கின்றன" என்றார்.

ஒப்புக்கொண்ட பாகிஸ்தான்

ஒப்புக்கொண்ட பாகிஸ்தான்

புல்வாமா தாக்குதல் தொடர்பாக பாகிஸ்தான் இம்ரான் கானை ராஜ்நாத் சிங் கடுமையாக விமர்சித்தார். ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதத்திற்கு காரணம் பாகிஸ்தான் தான் என்று ராஜ்நாத் சிங் திட்டவட்டமாக கூறினார். இது தொடர்பாக அவர் கூறுகையில். "40 சிஆர்பிஎஃப் வீரர்கள் கொல்லப்பட்ட புல்வாமா தாக்குதலில் பாகிஸ்தான் நாட்டிற்கு பங்கு உள்ளதை என்பதை பாகிஸ்தான் அமைச்சர் ஒப்புக்கொண்டுள்ளார். போர் விமான விமானி அபிநந்தனை விடுவிக்காவிட்டால் இந்தியாவின் பதிலடி கொடுக்கும் என பாகிஸ்தான் பயந்துவிட்டது. . பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுப்பதற்காகவே பாகிஸ்தானை FATF தடுப்புப்பட்டியலில் வைக்க வேண்டும்" இவ்வாறு ராஜ்நாத் சிங் கூறினார்.

 
 
 
English summary
Rajnath Singh said he has cleared the government's stand on the LAC standoff with the Chinese army. "The situation is in our control....the claims of Chinese entering Indian territory are completely baseless,"
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X