டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இந்தியா கேட்டில் எதிர்கட்சிகள் போராட திட்டம்.. தடை போட்ட டெல்லி போலீஸ்

Google Oneindia Tamil News

டெல்லி: டெல்லியில் உள்ள இந்தியா கேட் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் கூட்டம் நடத்த இன்று தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், அரசின் அனுமதி இருந்தால், இந்தியா கேட்டிலிருந்து 3 கி.மீ தூரத்தில் உள்ள ஜந்தர் மந்தரில் 100 பேர் கூட அனுமதி அளிக்கப்படும் என்று டெல்லி காவல்துறை அறிவித்துள்ளது.

உத்தரபிரதேசத்தின் ஹத்ராஸைச் சேர்ந்த 20 வயது இளம் பெண் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட விவகாரத்தில் நீதி கேட்டு இன்று இந்தியா கேட்டில் போராட்டம் நடத்த எதிர்க்கட்சிகள் திட்டமிட்டிருந்தார்கள். டெல்லி நிர்பாயா பாணியில் கொடூரமாக சித்திரவதை செய்து கொல்லப்பட்ட தலித் பெண்ணிற்கு, மகாத்மா காந்தியின் பிறந்த நாளான அக்டோபர் 2ம் தேதியில் நீதி கேட்டு இந்த போராட்டத்தை திட்டமிட்டார்கள்.

Large Gatherings Banned At India Gate Amid Growing Anger Over UP Hathras Rape

இதற்கு டெல்லி காவல்துறை அனுமதி அளிக்கவில்லை. இந்திய கேட் பகுதியில் 144 தடை விதிக்கப்பட்டிருப்பதால் எந்த விதமான கூட்டமும் அங்கு நடத்த அனுமதி இல்லை என டெல்லி காவல்துறை ட்விட்டரில் கூறியுள்ளது

இதனிடையே உத்தரப்பிரசேத்தில் நடந்த வன்கொடுமை மற்றும் கொலை விவகாரத்தில் கடந்த மூன்று நாட்களாக, அம்மாநில அரசு மீது கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த பெரும்பாலான அரசியல் தலைவர்கள் பாஜக முதல்வர் யோகி ஆதித்யா நாத் தலைமையிலான உத்தரபிரதேச அரசை கடுமையாக விமர்சித்துள்ளனர். காங்கிரஸைச் சேர்ந்த சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி வாத்ரா, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், பகுஜன் சமாஜ் கட்சியின் மாயாவதி, சமாஜ்வாடி கட்சியின் அகிலேஷ் யாதவ், சிவசேனாவின் சஞ்சய் ரவுத் உள்ளிட்ட பலர் விமர்சத்துள்ளனர்.

"எந்தவிதமான அநீதிக்கும் தலைவணங்க மாட்டேன்".. காந்தியை மேற்காள் காட்டி ராகுல் காந்தி 'நச்' ட்வீட்

தேசிய மகளிர் ஆணையம் உத்தரப்பிரதேச அரசிடம் அறிக்கை கோரியுள்ளது., மத்திய புலனாய்வுப் பிரிவு விசாரணை கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.இந்த வழக்கு குறித்து விசாரித்து ஏழு நாட்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய மூன்று பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாக உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். இளம் பெண்ணைத் தாக்கிய உயர் சாதியினர் நான்கு பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

ஹத்ராஸில் கொடூரமாக கொல்லப்பட்ட பெண்ணுக்கு நீதி கேட்டு சமூக ஊடகங்களில் பலரும் கருத்துக்கள் வெளியிட்டு வருகிறார்கள். மக்களிடையே கொந்தளிப்பான சூழல் காணப்படுகிறது.இந்த சூழலில் டெல்லி இந்தியா கேட் பகுதியில் போராட்டத்திற்கு போலீசார் தடை விதித்துள்ளனர்.

English summary
All kinds of gatherings are banned today in and around India Gate in central Delhi, the police said on Thursday. However, a total of 100 people can be at Jantar Mantar, 3 km from India Gate, if they have permission of the "competent authority". "No gathering is permissible around India Gate due to imposition of Section 144 CrPC," the Delhi Police tweeted.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X