டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பற்றி எரிந்த தலைநகர்.. 42 பேர் பலியான சோகம்.. கலவரம் பாதித்த டெல்லியின் தற்போதைய நிலை என்ன?

Google Oneindia Tamil News

டெல்லி: டெல்லியில் வன்முறை பாதித்த இடங்களில் தற்போது இயல்பு நிலை திரும்பியதை அடுத்து அங்கு சில கடைகள் திறந்துள்ளன. மேலும் அதிகமாக மக்கள் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

Recommended Video

    பற்றி எரிந்த தலைநகர்... டெல்லியின் தற்போதைய நிலை என்ன

    குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக டெல்லியில் ஜாப்ராபாத்தில் நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதில் ஜாபர்பாத், மவ்ஜ்பூர், சாந்த்பாக், குர்ஜீ காஸ், பஜன்பூரா ஆகிய பகுதிகளில் கடுமையான கலவரம் நடந்தது. இந்த கலவரத்தால் 35-க்கும் மேற்பட்டோர் பலியாகிவிட்டனர்.

    100-க்கும் மேற்பட்டோர் இந்த கலவரத்தால் காயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 500-க்கும் மேற்பட்டோரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

    சிஏஏ விவகாரம்.. ரஜினிகாந்த் பேசிய கருத்துக்கு நன்றி.. சந்திப்புக்கு பின் அபுபக்கர் அதிரடி பேட்டி!சிஏஏ விவகாரம்.. ரஜினிகாந்த் பேசிய கருத்துக்கு நன்றி.. சந்திப்புக்கு பின் அபுபக்கர் அதிரடி பேட்டி!

    இயல்பு வாழ்க்கை

    இயல்பு வாழ்க்கை

    இந்த கலவரத்தால் ஏராளமான கடைகள், வாகனங்கள், வீடுகள் தீயிட்டு கொளுத்தப்பட்டன. பொதுச் சொத்துகள் அடித்து நொறுக்கப்பட்டன. கலவரம் நடந்து 3 நாட்கள் ஆன நிலையில் தற்போது டெல்லியில் இயல்பு வாழ்க்கை திரும்பியுள்ளது. வடகிழக்கு டெல்லியில் போக்குவரத்து இயல்பாக உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    சில கடைகள் திறப்பு

    சில கடைகள் திறப்பு

    மக்கள் தங்கள் பணிகளுக்கு செல்ல தொடங்கிவிட்டனர். சில கடை உரிமையாளர்கள் இத்தனை நாட்கள் மூடியிருந்த கடைகளை திறந்தனர். பெட்ரோல் குண்டு மற்றும் செங்கல் வீசியதால் வடகிழக்கு டெல்லியே பெரும் குப்பை கூளமுமாக காணப்படுகிறது. பதற்றம் நிறைந்த பகுதிகளில் துணை ராணுவ படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

    மோசம்

    மோசம்

    சாலைகளில் எரிந்த கார்கள் உள்ளிட்டவற்றை அகற்றி சாலையை சுத்தம் செய்யும் பணிகள் தொடங்கியுள்ளன. இதற்காக பல்வேறு கிரேன்கள், புல்டோசர்கள் வந்திறங்கியுள்ளன. சிவ விகார் பகுதிதான் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த பகுதிகளில் மக்கள் வீட்டை பூட்டிக் கொண்டு உறவினர்கள் வீடுகளுக்கு சென்றுள்ளதால் அங்கு சாலைகள் வெறிச்சோடி காணப்படுகிறது.

    தடை

    தடை

    டெல்லி காவல் துறை கட்டுப்பாட்டு அறைக்கு உதவி கோரி 7500-க்கும் மேற்பட்ட தொலைபேசி அழைப்புகள் கலவரம் நிகழ்ந்த 3ஆவது தினமான செவ்வாய்க்கிழமை வந்தது. மக்கள் வதந்திகளை நம்ப வேண்டாம் என உள்துறை அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது. நாளை வரை ஐபிஎஸ் அதிகாரி எஸ் என் ஸ்ரீவத்சவா டெல்லி காவல் துறையின் தலைவராக கூடுதல் பொறுப்பில் இருப்பார். அதன் பின்னர் அந்த பதவி அமுல்யா பட்நாயக்கிடம் ஒப்படைக்கப்படும். 24 மணி நேரமும் உதவி செய்ய உதவி எண்கள் வழங்கப்பட்டுள்ளன. அதிகமான மக்கள் கூடுவதற்கு கிழக்கு டெல்லியில் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

    English summary
    Few shops in Delhi opened after 42 died in Delhi violence. The Situation in North Delhi is peaceful today.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X