• search
டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In

வெளியே போயிடுங்க.! இல்லைனா சாக ரெடியா இருங்க..! காஷ்மீர் பண்டிட்களுக்கு லஷ்கர் இ இஸ்லாம் மிரட்டல்..!

Google Oneindia Tamil News

டெல்லி : ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் ஹவால் பகுதியில் வசிக்கும் காஷ்மீரி பண்டிட்டுகளுக்கு லஷ்கர்-இ-இஸ்லாம் என்ற பயங்கரவாத அமைப்பு மிரட்டல் கடிதம் அனுப்பியுள்ள நிலையில், அவர்கள் அங்கிருந்து வெளியேற வேண்டும் அல்லது மரணத்தை எதிர்கொள்ள வேண்டும் என்று அந்த கடித்தத்தில் கூறப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தற்போது யூனியன் பிரதேசமாக இருக்கும் ஜம்மு-காஷ்மீர்-லடாக் கடந்த 1990ஆம் ஆண்டுகளில் ஒருங்கிணைந்த மாநிலமாக இருந்த போது அங்கு பாரம்பரியமாக வசித்து வந்த காஷ்மீர் பண்டிட் சமூகத்திற்கு எதிராக பெரும் வன்முறை தாக்குதலை காஷ்மீரில் இருந்த தீவிரவாதிகள் மேற்கொண்டனர்.

இந்திய வரலாற்றில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த தாக்குதலில் நூற்றுக்கணக்கான காஷ்மீர் பண்டிட்டுகள் கொல்லப்பட்டதை அடுத்து உயிர் பிழைப்பதற்காக அண்டை மாநிலங்களுக்கு தப்பிச்சென்று அகதிகளாக மாறினர்.

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை ராகுல்காந்தி பாதையாத்திரை...அக்.2ல் தொடங்கும் சோனியா அறிவிப்புகன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை ராகுல்காந்தி பாதையாத்திரை...அக்.2ல் தொடங்கும் சோனியா அறிவிப்பு

காஷ்மீர் பண்டிட்கள்

காஷ்மீர் பண்டிட்கள்

இந்திய வரலாற்றில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த தாக்குதலில் நூற்றுக்கணக்கான காஷ்மீர் பண்டிட்டுகள் கொல்லப்பட்டதையடுத்து உயிர் பிழைப்பதற்காக அண்டை மாநிலங்களுக்கு தப்பிச்சென்று அகதிகளாக மாறினர். இதனை மையப்படுத்தி எடுக்கப்பட்ட தி காஷ்மீர் பயிற்சி படம் கூட தற்போது பெரிய அளவில் பேசப்பட்டது. காஷ்மீர் பண்டிட்களுக்கு ஏற்பட்ட நிலைமை யை முழுமையாக இந்தப்படம் விவரித்து உள்ளதாகவும் அதை பார்க்க வேண்டும் என பிரதமர் மோடி கூறினார்.

மீண்டும் குடியேற்றம்

மீண்டும் குடியேற்றம்

அதே சமயத்தில் இந்தப் படத்துக்கு எதிர்ப்புகள் கிளம்பியது அனைவரும் அறிந்ததே. இது ஒருபுறம் இருந்தாலும் ஜம்மு காஷ்மீரில் இருந்து புலம்பெயர்ந்த காஷ்மீர் பண்டிட்டுகள் மீண்டும் அவர்களது தாய் மண்ணில் குடியமர்த்த தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டது அதன்படி ஆயிரக்கணக்கான காஷ்மீர் பண்டிட்டுகள் தற்போது மீண்டும் தங்களது தாய் மண்ணில் குடியேறி வருகின்றனர் அவர்களின் பாதுகாப்புக்காக குடியிருப்புகளில் பாதுகாப்பு வசதிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது

வலுக்கும் போராட்டம்

வலுக்கும் போராட்டம்

இந்நிலையில் கடந்த சில மாதங்களாகவே காஷ்மீர் பண்டிட்டுகளை குறிவைத்து தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு தாக்குதலை நடத்தி வருகின்றனர். இதனால் காஷ்மீரில் மீண்டும் பண்டிட்டுகளுக்கு எதிரான சூழல் நிலவி வருகிறது. இந்நிலையில் கடந்த இரு நாட்களுக்கு முன்னர் ஜம்மு காஷ்மீரின் புத்காம் மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகத்துக்குள் நுழைந்து காஷ்மீர் பண்டிட் ஒருவரை 2 பயங்கரவாதிகள் சுட்டு கொன்ற பயங்கர சம்பவம் நடந்தது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில் காஷ்மீர் பண்டிட் மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

கொலை மிரட்டல்

கொலை மிரட்டல்

இதனிடையே புல்வாமா மாவட்டத்தில் உள்ள ஒரு காஷ்மீர் பண்டிட் குடியிருப்புக்கு இன்று ஒரு கடிதம் வந்துள்ளது. லஷ்கர் - இ - இஸ்லாம் தீவிரவாத அமைப்பு அனுப்பிய அந்தக் கடிதத்தில், "காஷ்மீரில் முஸ்லிம்கள் கொல்லப்பட வேண்டும் என காஷ்மீர் பண்டிட்டுகள் விரும்புகின்றனர். எனவே காஷ்மீரில் பண்டிட்டுகளுக்கு இனி இடம் கிடையாது. நீங்களாக காஷ்மீரை விட்டு வெளியேறி விடுங்கள் அல்லது சாகத் தயாராகுங்கள். உங்கள் பாதுகாப்பபை இரட்டிப்பாக்கிக் கொள்ளுங்கள். நீங்கள் கொல்லப்படுவது நிச்சயம்" என எழுதப்பட்டுள்ளது.

பலத்த பாதுகாப்பு

பலத்த பாதுகாப்பு

மேலும், "புலம்பெயர்ந்தோர் மற்றும் ஆர்எஸ்எஸ் முகவர்கள்" வெளியேற வேண்டும் அல்லது மரணத்தை எதிர்கொள்ள வேண்டும் என்று குழு வலியுறுத்தியுள்ளது. இந்தக் கடிதம் குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தீவிரவாத அமைப்பின் எச்சரிக்கையை தொடர்ந்து காஷ்மீரில் உள்ள அனைத்து பண்டிட் குடியிருப்புகளிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

English summary
The terrorist group Lashker -e-Islam has sent a threatening letter to Kashmiri Pandits living in the Hawal area of Pulwama district in Jammu and Kashmir, saying that they should leave or face death.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X