டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

போலீசார் போராட்டத்திற்கு பதிலடி.. டெல்லியில் இன்று வக்கீல்கள் போராட்டம்.. நீதிமன்ற புறக்கணிப்பு

Google Oneindia Tamil News

சென்னை: டெல்லியில் போலீசாருக்கு எதிராக வக்கீல்கள் இன்றும் போராட்டம் நடத்தி வருவதால் பரபரப்பு சூழ்நிலை நிலவி வருகிறது.

கடந்த 2ம் தேதி டெல்லி திஸ் ஹசாரே நீதிமன்றத்தில் வைத்து, வழக்கறிஞர்கள் மற்றும் போலீசார் நடுவே பெரும் மோதல் உருவானது. இதில் போலீசார் தாக்கப்பட்டதாக காவல்துறை தரப்பிலும், வக்கீல்கள் தாக்கப்பட்டதாக வழக்கறிஞர்கள் தரப்பிலும் மாறி மாறி குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு வருகிறது.

Lawyers strike enters third day in Delhi

வக்கீல்கள் தங்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து, கடந்த திங்கட்கிழமை உச்ச நீதிமன்றத்தை நோக்கி பேரணியாக சென்று பரபரப்பை ஏற்படுத்தினார்.

இதற்கு பதிலடியாக யாருமே எதிர்பார்க்காத வகையில், காவல்துறையினர் தங்கள் சீருடையை கழட்டி வைத்துவிட்டு, டெல்லியில் நேற்று போராட்டத்தில் குதித்தனர்.

டெல்லியில் போராடிய போலீசார்.. ஆதரவாக களத்தில் குதித்த குடும்பத்தினர்.. களைகட்டிய போராட்டம் களம்! டெல்லியில் போராடிய போலீசார்.. ஆதரவாக களத்தில் குதித்த குடும்பத்தினர்.. களைகட்டிய போராட்டம் களம்!

காலை முதல் இரவு வரை நீடித்த இந்த போராட்டம் சுதந்திர இந்திய வரலாற்றில் முதல் முறையாக காவல்துறையினரால் நடத்தப்பட்ட பெரிய போராட்டம் என்று கூறப்படுகிறது. பிறரை பாதுகாக்கும் தங்களுக்கு, முதலில் பாதுகாப்பு அவசியம் என்று போலீசார் எழுப்பிய கோஷத்துக்கு நாடு முழுக்க இருந்து ஐபிஎஸ் அதிகாரிகள் பலரும் ஆதரவுக்கரம் நீட்டினர்.

ஆனால் விவகாரம் இத்தோடு முடியவில்லை. காவல்துறையினருக்கு பதிலடி அளிக்கும் விதமாக டெல்லியில் இன்று வழக்கறிஞர்கள் மறுபடியும் போராட்டத்தை தொடங்கியுள்ளனர். நீதிமன்றத்திற்கு பூட்டு போடும் போராட்டம், நீதிமன்ற புறக்கணிப்பு, போராட்டம், ஊர்வலம், ஆர்ப்பாட்டம் என்று டெல்லி முழுக்க வக்கீல்கள் போராட்டத்தில் பெரும் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.

நாகரீக சமூகத்தின் இரு முக்கிய அங்கங்களான காவல்துறை மற்றும் சட்டத்துறை பிரதிநிதிகள் நடுவேயான இந்த மோதல் மற்றும் போராட்ட சம்பவத்திற்கு மத்திய அரசு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று கோரிக்கை வலுத்து வருகிறது.

English summary
Lawyers strike enters third day in protest over the clash between police & lawyers at Tis Hazari Court on November 2. A lawyer at Rohini Court says,"our fight is against only those policemen who fired at us& lathicharged us that day.We will protest till they are arrested.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X