டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சீனாவுடன் டென்ஷன் ஒருபக்கம்.. திடீரென பாகிஸ்தான் எல்லையில் தேஜஸ் போர் விமானங்களை குவித்த இந்தியா

Google Oneindia Tamil News

டெல்லி: பாகிஸ்தான் எல்லையை ஒட்டிய மேற்குப் பிராந்தியத்தில், இந்தியாவின் இலகு ரக போர் விமானமான தேஜஸ் நிலை நிறுத்தப்பட்டுள்ளதாக விமானப் படை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Recommended Video

    Pakistan எல்லையில் Tejas LCA ! Chinaவுக்கு IAF பதிலடி

    ஏற்கனவே லடாக் பிரச்னையில் சீனாவுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக, கிழக்கு எல்லையில் பதற்றம் நீடிக்கிறது.

    இந்த நிலையில், பாகிஸ்தான் எல்லையை ஒட்டிய மேற்கு பகுதியில் தேஜஸ் விமானங்கள் அதிக அளவுக்கு குவிக்கப்பட்டுள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

    சீனாவை ஆச்சர்யப்படுத்திய பாகிஸ்தான்.. கொரோனா தடுப்பூசி இறுதி கட்ட பரிசோதனை.. மாஸ் முயற்சி!சீனாவை ஆச்சர்யப்படுத்திய பாகிஸ்தான்.. கொரோனா தடுப்பூசி இறுதி கட்ட பரிசோதனை.. மாஸ் முயற்சி!

    சதிகளை முறியடிக்க

    சதிகளை முறியடிக்க

    எதிரிகளின் நடவடிக்கைகளை கண்காணிக்கவும், அவர்களின் சதி முயற்சிகளை முறியடிக்கும் வகையிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மேற்கு பிராந்திய எல்லை பகுதியில் தேஜஸ் போர் விமானங்கள் நிறுத்தப்பட்டுள்ளன என்று பாதுகாப்புத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    சூலூர்

    சூலூர்

    தமிழகத்தின் சூலூர் விமானப்படையைச் சேர்ந்த 45 தேஜஸ் விமானங்கள் பாகிஸ்தான் எல்லையில் நிலை நிறுத்தப்பட்டுள்ளன.
    கடந்த 15ம் தேதி செங்கோட்டையில் சுதந்திர தின உரையாற்றிய பிரதமர் மோடி, தேஜஸ் போர் விமானங்களின் பணியை பாராட்டியிருந்தார்.

    மோடி பாராட்டு

    மோடி பாராட்டு

    மேலும் இந்த விமானத்தின் அதிநவீனமான மார்க்1 ஏ ரக விமானங்களை வாங்குவதற்கான ஒப்பந்தம் விரைவில் இறுதியாகும் எனவும் கூறியிருந்தார். இந்த ஒப்பந்தத்தை இந்த ஆண்டு இறுதிக்குள், பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் விமானப்படை இறுதி செய்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்திய விமானம்

    இந்திய விமானம்

    தேஜஸ் ஜெட் என்பது ஒற்றை இயந்திரம், நான்காம் தலைமுறை, மல்டிரோல் லைட் ஃபைட்டர் விமானமாகும். இது இந்திய விமானப்படை மற்றும் இந்திய கடற்படைக்கான இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் விமான ஆராய்ச்சி மற்றும் வடிவமைப்பு மையத்துடன் இணைந்து ஏரோநாட்டிகல் டெவலப்மென்ட் ஏஜென்சியால் வடிவமைக்கப்பட்டது ஆகும்.

    English summary
    In a significant achievement for the indigenous fighter aircraft programme, the Indian Air Force (IAF) deployed the home-grown Light Combat Aircraft (LCA) Tejas on the western front along the Pakistan border.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X