டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மத்தியில் பாஜக அல்லாத அரசுக்குதான் ஆதரவு.. மமதா இருப்பாரே... பெருங் குழப்பத்தில் இடதுசாரிகள்!

Google Oneindia Tamil News

Recommended Video

    மத்தியில் பாஜக அல்லாத அரசுக்குதான் ஆதரவு.. பெருங் குழப்பத்தில் இடதுசாரிகள்!- வீடியோ

    டெல்லி; லோக்சபா தேர்தலில் மத்தியில் பாஜக கூட்டணி அல்லாத அரசுக்குதான் ஆதரவு அளிக்க முடியும்.. ஆனால் பரம எதிரியான மமதா பானர்ஜி அப்படியன ஒரு அரசில் இடம்பெறுவது உறுதி என்பதால் என்ன செய்வது என தெரியாமல் குழம்பிப் போயுள்ளனர் இடதுசாரிகள்.

    மேற்கு வங்கத்தில் 34 ஆண்டுகால இடதுசாரி அரசுக்கு முற்றுப்புள்ளி வைத்தவர் மமதா பானர்ஜி. மேற்கு வங்கத்தில் மமதா கொடுத்த மரண அடியில் இருந்து இன்னமும் இடதுசாரிகள் மீளவில்லை.

    முதல்வருக்கு பிறந்த நாள்.. 4 அமைச்சர்கள்தான் வாழ்த்தினார்களாமே.. பரபரக்கும் அதிமுக முதல்வருக்கு பிறந்த நாள்.. 4 அமைச்சர்கள்தான் வாழ்த்தினார்களாமே.. பரபரக்கும் அதிமுக

    பாஜகவாக உருமாறிய இடதுகள்

    பாஜகவாக உருமாறிய இடதுகள்

    பாஜக, திரிணாமுல் காங்கிரஸை தோற்கடிப்போம் என முழங்குகின்றனர் இடதுசாரிகள். ஆனால் மேற்கு வங்க தேர்தல் களத்தில் தங்களை அப்படியே பாஜகவினராகவே உருமாற்றிக் கொண்டு களப்பணியாற்றுகின்றனர் இடதுசாரிகள்.

    அம்போவாகும் இடதுகள்?

    அம்போவாகும் இடதுகள்?

    எந்த கைகளில் லால் சலாம், இன்குலாப் ஜிந்தா பாத் என செங்கொடி ஏந்தி முழக்கமிட்டனரோ அதே கைகளில் இன்று காவி கொடி ஏந்தி பாரத் மாதா கீ ஜே என கூச்சலிடுகின்றனர் இடதுசாரிகள். இது எஞ்சியிருக்கும் இடதுசாரி தளத்தையும் சுக்கு நூறாக சிதைத்து விடும் என அஞ்சிப் போயுள்ளனர் மூத்த தலைவர்கள்.

    இடதுகளுக்கான எம்பிக்கள்

    இடதுகளுக்கான எம்பிக்கள்

    மேற்கு வங்கத்தில் மமதா அலை தொடர்ந்து வீசினால் இம்முறையும் லோக்சபாவில் இடதுசாரிகளுக்கு கேரளாவையும் சேர்த்து சிங்கிள் டிஜிட்தான் வாய்ப்பு. அதேநேரத்தில் மத்தியில் கூட்டணி அரசு அமையும் போது இடதுசாரிகளின் ஆதரவும் தேவைப்படும்.

    மமதா இருக்கும் அணிக்கு ஆதரவா?

    மமதா இருக்கும் அணிக்கு ஆதரவா?

    மத்தியில் பாஜக அல்லாத ஒரு கூட்டணி அரசுக்குத்தான் இடதுசாரிகள் ஆதரவு தந்தாக வேண்டும். அதேநேரத்தில் அப்படி எந்த ஒரு கூட்டணி அரசு அமைந்தாலும் நிச்சயம் மமதா பானர்ஜியின் பங்கு மகத்தானதாக இருக்கும். அந்த அரசில் திரிணாமுல் காங்கிரஸ் முக்கிய துறைகளை வகிக்கும். அப்படியான நிலையில் மமதா பங்கு வகிக்கும் அரசுக்கு ஆதரவு அளித்தால் மேற்கு வங்கத்தில் உள்ளதும் போச்சுடா என்கிற நிலைமைதான் இடதுசாரிகளுக்கு ஏற்படும்.

    மீண்டும் ஒரு தவறு கூடாது

    மீண்டும் ஒரு தவறு கூடாது

    இதனால் எப்படியான ஒரு முடிவை எடுப்பது எனத் தெரியாமல் இடதுசாரி தலைவர்கள் பெருங்குழப்பத்தில் இருக்கின்றனர். கடந்த 2008-ம் ஆண்டு காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு வெளியில் இருந்து இடதுசாரிகள் ஆதரவு தந்தனர். ஆனால் அமெரிக்காவுடனான அணு ஆயுத ஒப்பந்தத்தை முன்வைத்து ஆதரவை இடதுசாரிகள் வாபஸ் பெற்றனர். இன்றளவும் இடதுசாரி தலைவர்கள் கட்சியின் இந்த முடிவை விமர்சித்தும் வருகின்றனர். இதனால் இடதுசாரி முகாம்கள் படுதீவிரமாக ஆலோசனைகளை மேற்கொண்டு வருகின்றன.

    English summary
    According to the sources said that left party leaders are holding serious discussion on support to the Non NDA govt of Loksabha Election Results.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X