டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தன்பாலின திருமணத்தை அங்கீகரிக்க கூடாது.. அது அடிப்படை உரிமை இல்லை..டெல்லி நீதிமன்றத்தில் மத்திய அரசு

Google Oneindia Tamil News

டெல்லி: தன்பாலின உறவு என்பது சட்ட விரோதமானது இல்லை என அறிவிக்கப்பட்டிருந்தாலும், இதனால் தன்பாலின திருமணத்தை அடிப்படை உரிமையாக யாரும் கோர முடியாது என்று மத்திய அரசு டெல்லி நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது.

இந்து திருமண சட்டத்தின் கீழ் தன்பாலின திருமணத்தை சட்டப்பூர்வமானதாக அங்கீகரிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கில் மத்திய அரசு இன்று பிரமாணப் பத்திரத்தைத் தாக்கல் செய்துள்ளது.

Legal recognition cant be given for same-sex marriage by the Central government tells Delhi High Court

அதில் தன்பாலின உறவு என்பது சட்ட விரோதமானது என்று கூறும் சட்டப்பிரிவு 377 நீக்கப்பட்டிருந்தாலும்கூட, இதை வைத்துக்கொண்டு தன்பாலின திருமணத்தை அடிப்படை உரிமையாக யாரும் கோர முடியாது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மேலும், ஒரே பாலினத்தைச் சேர்ந்தவர்கள் ஒன்றாக வாழ்வதும், அவர்கள் உறவில் இருப்பதும் இந்தியக் குடும்ப கலாச்சாரத்தின்படி ஏற்றுக் கொள்ளத்தக்கது இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தியக் குடும்ப முறையில் கணவர் என்பவர் ஆணாகவும் மனைவி என்பவர் பெண்ணாகவும் இருக்க வேண்டும் எனவும் மத்திய அரசு கூறியுள்ளது.

தவிடுபொடியான யூகங்கள்... ஜெயலலிதா பிறந்தநாளை வெற்றி வியூகமாக மாற்றிய ஈ.பி.எஸ்-ஓ.பி.எஸ் கூட்டணி! தவிடுபொடியான யூகங்கள்... ஜெயலலிதா பிறந்தநாளை வெற்றி வியூகமாக மாற்றிய ஈ.பி.எஸ்-ஓ.பி.எஸ் கூட்டணி!

திருமணம் என்பது இரண்டு தனிப்பட்ட நபர்களை சமூகம் அங்கீகரிக்கும் நிகழ்வாகும். தற்போதுள்ள சட்டத்தின்படி ஒரு பாலினத்தைச் சேர்ந்த இருவர் திருமணம் செய்து கொள்வதை அங்கிரிக்கும் எந்தவொரு சட்டமும் இதுவரை இங்கு உருவாக்கப்படவில்லை. எனவே, தன்பாலின திருணத்திற்கு நீதிமன்றத்தால் அங்கீகரிக்க முடியாது என்றும் அதில் தெரிவிக்கபட்டடுள்ளது.

மேலும், ஒருவருக்கு அடிப்படை உரிமைகளை உறுதி செய்யும் சட்டப்பிரிவு 21இன் கீழ் தன்பாலின திருமணத்தைக் கொண்டு வர முடியாது என்றும் மத்திய அரசு தனது பிரமாணப் பத்திரத்தில் கூறியுள்ளது.

English summary
The Central government has told the Delhi High Court that in spite of the decriminalization of homosexuality under Section 377 of the Indian Penal Code, there is no fundamental right to same-sex marriage.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X