டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அரசியல் சாசனம் தான் நாட்டு மக்களின் புனித நூல்: சபரிமலை தீர்ப்பில் நாரிமன் 'நச்'

Google Oneindia Tamil News

Recommended Video

    சபரிமலை மறு ஆய்வு வழக்கு: 7 நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றம் !

    டெல்லி: இந்த நாட்டில் உள்ள அனைவருக்குமே அரசியல் சாசனம்தான், புனித புத்தகம் என்று சபரிமலை வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதிகளில் ஒருவரான ஆர்.எப்.நாரிமன் தெரிவித்துள்ளார்.

    உச்சநீதிமன்றம் 3:2 என்ற அடிப்படையில், 7 நீதிபதிகள் பெஞ்ச்சுக்கு இந்த வழக்கை சிபாரிசு செய்த நிலையில், நீதிபதிகள், நாரிமன் மற்றும் சந்திரசூட் ஆகிய இருவரும்தான், இதில் வேறுபட்டனர்.

    Let every person remember Constitution of India is the holy book: Justice Nariman

    இந்த நாட்டின் புனிதப் புத்தகம் அரசியல் சாசனம்தான் என்பதை ஒவ்வொரு குடிமகனும் நினைவில் கொள்ள வேண்டும். இந்த புத்தகத்தை கையில் வைத்துக்கொண்டு தான் இந்தியாவில் ஒவ்வொரு குடிமகனும் ஒரு நாடாக இணைந்து செயல்பட வேண்டும்.

    இந்த விஷயத்தை இப்போது பேச வேண்டிய அவசியம் என்னவென்றால், சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்த வேண்டிய அவசியம் எழுந்துள்ளது. நீதிமன்றத்தின் தீர்ப்பைக் கடைப்பிடிக்கலாமா வேண்டாமா என்பது குறித்த விவாதம், சட்டத்தின் ஆட்சியை வீணாக்கிவிடும்.

    வாதங்கள் முடிவடைந்து தீர்ப்பு வெளியான பிறகு, உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு என்பது அனைவரையும் கட்டுப்படுத்தக்கூடியது. இதை விருப்பத்தின் பேரில் யாரும் தேர்ந்தெடுத்துக் கொள்ள முடியாது. அனைவருமே கட்டாயமாக கீழ்படிந்து தான் ஆகவேண்டும். அமைப்பாக சேர்ந்துகொண்டு உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மீறுவதை ஏற்க முடியாது. இவ்வாறு நாரிமன் தெரிவித்தார்.

    English summary
    Let every person remember that the 'holy book' is the Constitution of India", Justice R F Nariman said on Thursday in a minority verdict in the Sabrimala case. The observations were made by Justice Nariman, writing for himself and Justice D Y Chandrachud.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X