டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மாதம் ரூ.1000 முதல் 10000 வரை.. எல்ஐசி வெளியிட்ட முதியோர்களுக்கான புதிய சூப்பர் பென்ஷன் திட்டம்

Google Oneindia Tamil News

டெல்லி: மூத்த குடிமக்கள் மாதம் ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரை பென்சன் பெறும் வகையில் புதிய ஓய்வூதிய திட்டமான பிரதான் மந்திரி வாய வந்தன யோஜன திட்டத்தை எல்ஐசி நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

மூத்த குடிமக்களுக்கான பிரதமர் வயா வந்தனா யோஜனா (பி.எம்.வி.வி) ஓய்வூதிய திட்டத்தை நிதி அமைச்சகம் அண்மையில் மாற்றியது.

அதன் தொடர்ச்சியாக இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் (எல்.ஐ.சி) மத்திய அரசின் மானியத்துடன் இணைக்கப்படாத, மத்தியஅரசு பங்கேற்காத நிலையில் பிரதமர் வயா வந்தனா யோஜனா ஓய்வூதியத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. நிதியமைச்சகம் சமீபத்தில் இந்த ஓய்வூதிய திட்டத்தை 2023 மார்ச் 31 வரை நீட்டித்தது. 2020-21 நிதியாண்டிற்கு. 7.40% வட்டி விகிதத்துடன் உறுதி செய்திருந்தது.

கொரோனா லாக்டவுன்... கிராமப்புறங்களைவிட நகர்ப்புறங்களில் தலைவிரித்தாடும் வேலைவாய்ப்பின்மை கொடுமை! கொரோனா லாக்டவுன்... கிராமப்புறங்களைவிட நகர்ப்புறங்களில் தலைவிரித்தாடும் வேலைவாய்ப்பின்மை கொடுமை!

மூன்று ஆண்டுகள் திட்டம்

மூன்று ஆண்டுகள் திட்டம்

இந்த திட்டம் செவ்வாய்க்கிழமை முதல் மூன்று நிதியாண்டுகள் வரை விற்பனைக்கு கிடைக்கும். அதாவது மார்ச் 2023 வரை கிடைக்குமென எல்.ஐ.சி வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை ஆப்லைனிலும் (முகவல்கள் வழியாக) எல்.ஐ.சி யின் இணையதளத்திலும் வாங்கலாம். அதிகபட்சமாக 15 லட்சம் வரை இத்திட்டத்தின் படி செலுத்த முடியும்.

7.40 சதவீத வருமானம்

7.40 சதவீத வருமானம்

இந்த பாலிசி 10 ஆண்டு காலம் கொண்டது. மார்ச் 2021 உடன் முடிவடையும் முதல் நிதி ஆண்டிற்குள் வாங்கப்படும் பாலிசிகளுக்கு ஆண்டுக்கு 7.40% வருமானம் உறுதியாக கிடைக்கும். ஆனால் 10 ஆண்டுகள் ஒவ்வொரு மாதத்திற்கும் மாதந்தோறும் ஓய்வூதியமாக தொகை செலுத்தப்படும். மூத்த குடிமக்கள் இந்த திட்டத்தில் முதலீடு செய்த தொகையைப் பொறுத்து மாதத்திற்கு குறைந்தபட்சம் ரூ. 1,000 ஓய்வூதியம் பெறலாம். அதிகபட்ச ஓய்வூதிய தொகை மாதத்திற்கு ரூ. 10,000 ஆக பெறலாம்.

அதிக பட்சம் 10000 பென்சன்

அதிக பட்சம் 10000 பென்சன்

இந்த திட்டத்தின் கீழ் 10 வருடங்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் பென்ஷன் பெற விரும்பும் மூத்த குடிமக்கள், 1,56,658 ரூபாய் செலுத்த வேண்டும்.. அதிகபட்சமாக 10 ஆயிரம் ரூபாய் பென்ஷன் வேண்டும் என்று மூத்த குடிமக்கள் விரும்பினால் 15 லட்சம் ரூபாய் முதலீடு செய்ய வேண்டும் என எல்ஐசி அறிவித்துள்ளது.

இறந்தால் முன்பே முதிர்வு

இறந்தால் முன்பே முதிர்வு

வெற்றிகரமாக 10 வருடங்கள் பென்ஷன் பெற்று முடித்துவிட்டால், கடைசி மாதம் பென்ஷன் பெறும்போது அவர்கள் முதலீடு செய்த தொகையும் திரும்ப அளிக்கப்படும். பென்ஷன் காலம் முடியும் முன்பு பாலிசிதாரர் இறந்துவிட்டால் முதலீடு செய்த தொகை பாலிசிதாரரின் வாரிசிடம் அளிக்கப்படும் என்று எல்ஐசி தெரிவித்துள்ளது.

English summary
LIC launches pension scheme for senior citizens. interest rate, all details here
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X