டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அனுமன் சஞ்சீவி கொண்டு வந்தது போல்.. ராமாயணத்தை மேற்கோள்காட்டி மோடிக்கு பிரேசில் அதிபர் கடிதம்

Google Oneindia Tamil News

டெல்லி: அனுமன் எப்படி சஞ்சீவி மூலிகையை கொண்டு வந்து லக்ஷ்மனின் உயிரை காப்பாற்றினாரோ அது போல் இந்தியா ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்தை வழங்கி பிரேசில் மக்களின் உயிரை காக்க வேண்டும் என அந்நாட்டு அதிபர் ஜெயிர் போல்செனாரோ பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

Recommended Video

    Government may plan to extension of lockdown in country level

    உலகில் கொரோனா நோயால் 14 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். பலியானோர் எண்ணிக்கை 82 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. இந்த நிலையில் தமிழில் உள்ள பழமொழிக்கேற்ப எதை தின்றால் பித்தம் தெளியும் என்பதை உலக நாடுகள் தேடி வருகின்றனர்.

    இது மிகவும் கொடிய நோய் என்பதால் இதற்கான மருந்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் உலக நாடுகள் ஆய்வுகளை நடத்தி வருகிறார்கள்.

    மலேரியா நோய்

    மலேரியா நோய்

    இந்த நிலையில் கடந்த சில தினங்களாக ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் எனும் மருந்து லைம் லைட்டில் வந்த வண்ணம் இருக்கிறது. இந்த மாத்திரை 2ஆம் உலக போரின் போது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த சமயத்தில் மலேரியா நோய் தாக்கியது. இதையடுத்து அப்போதுதான் இந்த மருந்து கண்டுபிடிக்கப்பட்டது. இந்த மருந்து இந்தியாவில் அறிகுறிகளற்ற நோய் தாக்கும் அபாயம் கொண்ட சுகாதார பணியாளர்களுக்கு வழங்கப்படுகிறது.

    தடை

    தடை

    இதன் பக்க விளைவுகள் அதிகம் என்பதால் நோயாளிகளுக்கு இன்னும் கொடுக்கப்படவில்லை. எனினும் மிகவும் ஆபத்தான கட்டத்தில் இருப்பவர்களுக்கு கொடுக்கப்படுகிறது. இந்த மருந்தை அதிகம் உற்பத்தி செய்யும் இந்தியா, மருந்தின் இருப்பை உறுதிப்படுத்த பாராசிட்டாமல் உள்ளிட்ட 14 வகையான மருந்துகளை ஏற்றுமதி செய்ய கடந்த மாதம் 25-ம் தேதி தடைவிதித்திருந்தது.

    ஏற்றுமதி

    ஏற்றுமதி

    அந்த மருந்தை அமெரிக்கா அதிபர் டிரம்ப், பிரதமர் மோடியிடம் தொலைபேசியில் கேட்டுக் கொண்டதற்கிணங்க மருந்து ஏற்றுமதி தடையை தளர்த்துவது குறித்து இந்தியா பரிசீலனை செய்து வந்தது. இதையடுத்து இந்தியா ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்து ஏற்றுமதிக்கான தடையை தளர்த்தி உள்ளது.

    ராமாயணம்

    ராமாயணம்

    இதற்கு முன்னதாக பிரதமர் நரேந்திர மோடிக்கு பிரேசில் அதிபர் ஜெயிர் போல்செனாரோ கடிதம் எழுதியுள்ளார். அதில் அனுமன் எப்படி சஞ்சீவி மூலிகையை கொண்டு வந்து லக்ஷ்மனின் உயிரை காப்பாற்றினாரோ அது போல் இந்தியா ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்தை வழங்கி பிரேசில் மக்களின் உயிரை காக்க வேண்டும் என ராமாயணத்தை மேற்கோள்காட்டி கடிதம் எழுதியுள்ளதாக கூறப்படுகிறது.

    English summary
    Brazil President sends letter to PM Narendra Modi regarding Hydroxychloroquine tablet. He quoted Ramayana in his letter.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X