டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அதிக டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை நிகழும் மாநிலங்கள் பட்டியல்.. தமிழகத்திற்கு நான்காவது இடம்

Google Oneindia Tamil News

டெல்லி: நாட்டில் உள்ள மாநிலங்களில் டிஜிட்டல் பணபரிவர்த்தனையில் தமிழகம் நான்காவது இடத்தில் உள்ளதாக ஆய்வு முடிவு ஒன்றில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரேஸர் பே ஒருங்கிணைந்த பணப் பட்டுவாடா தீர்வு நிறுவனம் ஆகும் இந்நிறுவனம் நாடு முழுவதும் ஆய்வு ஒன்றை நடத்தியுள்ளது. அந்நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் நடப்பு நிதியாண்டின், முதல் காலாண்டில் நடைபெற்ற டிஜிட்டல் பண பரிவர்த்தனைகளில், தமிழ்நாடு நான்காவது இடத்தில் உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

List of states with the highest number of digital transactions,Fourth place for Tamil Nadu

இது தொடர்பாக தகவல் தெரிவித்துள்ள ரேஸர் பேயின் இணை நிறுவனரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான ஹர்ஷில் மாத்தூர், தமிழகம் நாட்டிலேயே மிகவும் வளர்ந்த மாநிலங்களில் ஒன்றாக உள்ளது. மேலும் ஆண்டுக்கு 7% மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வளர்ச்சியை கொண்டுள்ளது

சென்னையை தவிர தமிழ்நாட்டில் அதிக எண்ணிக்கையிலான டிஜிட்டல் பரிவர்த்தனைகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது வரவிருக்கும் மாதங்களில் தமிழக தலைநகர் சென்னைடிஜிட்டல் சூழல் அமைப்பில் மிக பெரிய தாக்கத்தை உருவாக்கும்.

மேலும் வரும் 2020ம் ஆண்டுக்குள் 40% டிஜிட்டல் கொடுப்பனவு பரிவர்த்தனை அடுக்கு 2 வணிகங்கள் மற்றும் நுகர்வோரால் இயக்கப்படும் என்று ரேஸர்பே கணித்துள்ளது.

டிஜிட்டல் பரிவர்த்தனையில் தற்போது முதல் இடத்தில் கர்நாடகா உள்ளது. மகாராஷ்டிரா மற்றும் டெல்லி இரண்டு மற்றும் மூன்றாவது இடத்தில் உள்ளது. ஐந்தாவது இடத்தில் ஆந்திராவும் உள்ளது.

நகரங்களில் நடைபெற்ற அதிக பண பரிவர்த்தனை பட்டியலில் சென்னை 6வது இடத்தில் உள்ளது. தற்போது, டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளுக்கான சேவை கட்டணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால், மொபைல் போன் வாயிலாக செய்யும் பரிவர்த்தனை, 2021ம் ஆண்டிற்குள், 10 மடங்கு அதிகரிக்கும் என்றும் ரேஸர் பே வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

English summary
According to a study, Tamil Nadu ranks fourth in digital money transfers among states in the country.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X