டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தியேட்டர், மதுக் கடைகள் மூடப்பட்டிருக்கும்.. ஊரடங்கு தளர்வு எதெற்கெல்லாம் பொருந்தாது? லிஸ்ட் இதோ

Google Oneindia Tamil News

டெல்லி: காய்கறி போன்ற அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் மட்டுமே திறந்து இருப்பதற்கு இதுவரை வழங்கிய அனுமதியை இன்னும் நீட்டிப்பு செய்து, பிற கடைகளையும், சனிக்கிழமை முதல் திறந்து கொள்ளலாம் என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Recommended Video

    Lockdown Relaxation : மத்திய அரசு இரவோடு இரவாக எடுத்த அதிரடி முடிவு

    இதன்படி குடியிருப்பு பகுதிகளில் உள்ள பல வகை கடைகளும் 50 சதவீத ஊழியர்களுடன் இயங்கலாம். எவையெல்லாம் இயங்காது என்பது குறித்தும், அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    எந்த மாதிரி கடைகளுக்கு திறக்க அனுமதியில்லை என்பது குறித்து, பார்க்கலாம், வாருங்கள்.

    இன்று முதல்.. மால்களை தவிர்த்து பிற கடைகளை திறக்கலாம்.. சலூன்களும் செயல்படும்.. மத்திய அரசு அதிரடிஇன்று முதல்.. மால்களை தவிர்த்து பிற கடைகளை திறக்கலாம்.. சலூன்களும் செயல்படும்.. மத்திய அரசு அதிரடி

    மால்களுக்கு தடை

    மால்களுக்கு தடை

    நகராட்சி மற்றும் மாநகராட்சிகளின் எல்லைக்கு வெளியே இருந்தாலும் மல்டி பிராண்ட் மற்றும் ஒற்றை பிராண்ட் மால்களில் கடைகள் திறக்கப்படாது. நகராட்சி மற்றும் மாநகராட்சிகளின் எல்லைக்குள் சந்தை வளாகங்கள், மல்டி பிராண்ட் மற்றும் ஒற்றை பிராண்ட் மால்களில் உள்ள கடைகள் திறக்கப்படாது.

    தியேட்டர்கள் நோ

    தியேட்டர்கள் நோ

    தியேட்டர்கள், ஷாப்பிங் வளாகங்கள், உடற்பயிற்சிக் கூடங்கள், விளையாட்டு வளாகங்கள், நீச்சல் குளங்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள், தியேட்டர்கள், பார்கள் மற்றும் ஆடிட்டோரியங்கள், மக்கள் கூடும் அரங்குகள் தொடர்ந்து மூடப்பட்டிருக்கும். பெரிய கடைகள் / பிராண்டுகள் / சந்தை பகுதிகள் மூடப்பட்டு இருக்கும். நகர்ப்புற [நகராட்சி] பகுதிகளில், நேரு பிளேஸ், லஜ்பத் நகர் போன்ற சந்தை வளாகங்கள் திறக்கப்படாது.

    கடைகள் கட்டாயம் பின்பற்ற வேண்டியது எது?

    கடைகள் கட்டாயம் பின்பற்ற வேண்டியது எது?

    திறக்க அனுமதிக்கப்பட்ட கடைகள் கட்டாயம் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் இவைதான்: சனிக்கிழமை முதல் திறக்க அனுமதிக்கப்பட்ட நகராட்சிகள் மற்றும் நகராட்சி நிறுவனங்களின் எல்லைக்குள் மற்றும் வெளியே உள்ள அனைத்து கடைகளிலும், கட்டாயமாக 50 சதவீத தொழிலாளர்கள் மட்டுமே பணியில் இருக்க வேண்டும்.

    சமூக இடைவெளி

    சமூக இடைவெளி

    தொழிலாளர்கள் அனைவரும் முகக் கவசம் அணிந்திருக்க வேண்டும். கொரோனா வைரஸ் லாக்டவுனுக்கு மத்தியில் சனிக்கிழமையான இன்று முதல் திறக்க அனுமதிக்கப்பட்ட கடைகளில் உள்ள அனைத்து தொழிலாளர்களும் சமூக இடைவெளியை பராமரிக்க வேண்டும்.

    லாக்டவுன் தளர்வுகள் எதற்கெல்லாம் பொருந்தாது?

    லாக்டவுன் தளர்வுகள் எதற்கெல்லாம் பொருந்தாது?

    இந்த தளர்வுகள் ஹாட்ஸ்பாட்கள் மற்றும் கன்டெய்ன்மென்ட் மண்டலங்களுக்கு பொருந்தாது. மதுபானக் கடைகளைப் பொறுத்தவரை, அந்தந்த மாநில / யூனியன் பிரதேசத்தின் 'கடைகள் மற்றும் ஸ்தாபனச் சட்டத்தின்' கீழ் வருபவை அல்ல, மது ஒரு தனி பிரிவின் கீழ் வருகிறது என்று உள்துறை அமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது. எனவே, மதுபானம் விற்பனைக்கு அனுமதியில்லை. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    வர்த்தகம் அதிகரிக்கும்

    வர்த்தகம் அதிகரிக்கும்

    புனித ரமலான் மாதம் துவங்கியுள்ள நிலையில், அத்தியாவசிய சேவைகளை வழங்கும் கடைகளை மீண்டும் திறக்க உள்துறை அமைச்சகம் பிறப்பித்துள்ள உத்தரவு, மக்களுக்கு நிம்மதியை தந்துள்ளது. மார்ச் 24 முதல் நாடு லாக்டவுன் நிலையில் இருக்கும் நிலையில், முதல் முறையாக இவ்வாறு ஒரு தளர்வு நடைமுறைக்கு வந்துள்ளது. உரிய பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றினால், வணிகர்கள் மூலமாக, கொரோனா பரவாது.

    English summary
    Shops in multi-brand and single-brand malls outside the limits of municipal corporations and municipalities will not open.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X