டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

Live: காஷ்மீரை தீவிரவாத பிடியிலிருந்து விடுவிக்க மோடி அழைப்பு.. 40 நிமிட உரை நிறைவு

Google Oneindia Tamil News

டெல்லி: ஜம்மு காஷ்மீர் மாநில பிரிவினை தொடர்பாக நாட்டு மக்களிடையே விளக்கம் அளித்து பிரதமர் நரேந்திர மோடி இன்று இரவு தொலைக்காட்சியில் உரை நிகழ்த்தினார்.

ஜம்மு காஷ்மீரில் நிலவிய நிலைமை. தற்போது ஏற்பட்டுள்ள புதிய சூழல், அந்த மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்ததால் ஏற்பட்டுள்ள நன்மைகளை பிரதமர் மோடி பட்டியலிட்டுப் பேசினார்.

பிரதமர் மோடியின் உரையின் முக்கிய அம்சங்கள்:

Newest First Oldest First
8:41 PM, 8 Aug

காஷ்மீர் தொடர்பாக சுமார் 40 நிமிட நேரம் ஆற்றிய உரையை நிறைவு செய்தார் பிரதமர் நரேந்திர மோடி
8:41 PM, 8 Aug

ஜம்மு-காஷ்மீரை தீவிரவாதம் மற்றும் பிரிவினைவாதத்திலிருந்து புதிய நடவடிக்கைகளை எடுத்து விடுவிப்போம். ஜம்மு காஷ்மீர் மக்கள் புதிய ஆற்றலுடனும், நம்பிக்கையுடனும் பிரிவினைவாதத்தை தோற்கடிப்பார்கள் என்று நான் நம்புகிறேன்- மோடி பேச்சு
8:41 PM, 8 Aug

ஜம்மு காஷ்மீர் தயாரிப்புகளை உலகமெங்கும் பிரபலப்படுத்தி ஊக்குவிக்க அனைத்து தொழில்நிறுவனங்களையும் கேட்டுக்கொள்கிறேன்- மோடி உரை
8:34 PM, 8 Aug

ஜம்மு காஷ்மீரில் விரைவில் சட்டசபை தேர்தல் நடத்தப்படும்
8:34 PM, 8 Aug

லடாக்கில் மிகப்பெரிய சூரிய மின்சக்தி மையம் அமைக்க வாய்ப்பு உள்ளது. லடாக்கை புதிய பாதைக்கு அழைத்து செல்வோம்.
8:34 PM, 8 Aug

லடாக் மூலிகை வளங்களை சந்தைப்படுத்தி விவசாயிகள் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவோம்- மோடி உரை
8:31 PM, 8 Aug

லோக்சபா தேர்தலில் வாக்களிக்கும் உரிமை பெற்ற காஷ்மீர் மக்களில் ஆயிரக்கணக்கானோரால், சட்டமன்றம் மற்றும் உள்ளாட்சி அமைப்பு தேர்தல்களில் வாக்களிக்க முடியவில்லை என்பதை அறிந்தால் நீங்கள் அதிர்ச்சியடைவீர்கள். இப்போது நிலைமை மாறும்: பிரதமர் மோடி
8:30 PM, 8 Aug

ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் ஆகியவை உலகின் மிகப்பெரிய சுற்றுலா மையமாக விளங்குகின்றன
8:28 PM, 8 Aug

தமிழ், ஹிந்தி, தெலுங்கு திரைப்பட சூட்டிங்குகளை இனி காஷ்மீரில் மேற்கொள்ள முடியும்- மோடி உரை
8:28 PM, 8 Aug

காஷ்மீரை யூனியன் பிரதேசமாக அறிவித்துள்ளது தற்காலிகமானது- மோடி
8:28 PM, 8 Aug

நிலைமை சீரடைந்ததும் காஷ்மீர் மீண்டும் மாநில அந்தஸ்துக்கு மாற்றப்படும் -மோடி
8:26 PM, 8 Aug

சட்டப்பிரிவு 370 ஐ அகற்றுவதன் மூலம் ஜம்மு-காஷ்மீரில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் நிலைமைகள் மேம்படும்- மோடி உரை
8:24 PM, 8 Aug

சஃபை கரம்சரிஸ் சட்டம் நாட்டின் பிற மாநிலங்களில் பொருந்தும், ஆனால் ஜம்மு-காஷ்மீர் துப்புரவு தொழிலாளர்களுக்கு அது பொருந்தவில்லை. பிற மாநிலங்களில் தலித்துகள் மீதான ஒடுக்குமுறைகளை தடுக்க கடுமையான சட்டங்கள் உள்ளன, ஆனால் காஷ்மீரில் இல்லாமல் இருந்தது
8:12 PM, 8 Aug

காஷ்மீரில் பாகிஸ்தான் சிலரைத் தூண்டிவிட்டது. ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய பகுதிகளில் இதனால், எந்த வளர்ச்சியும் ஏற்படவில்லை. 42,000 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர்.
8:10 PM, 8 Aug

ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக்கில் ஒரு புதிய சகாப்தம் தொடங்கியுள்ளது. இப்போது தேசத்தில் உள்ள அனைவரின் உரிமைகளும் ஒன்றே, பொறுப்புகளும் ஒன்றானவை.
8:09 PM, 8 Aug

சர்தார் வல்லபாய் படேல், டாக்டர் ஷியாமா பிரசாத் முகர்ஜி, அடல் பிஹாரி வாஜ்பாய் மற்றும் பல கோடி இந்தியர்களின் கனவுகள் நனவாகியுள்ளன
8:06 PM, 8 Aug

சட்டப்பிரிவு 370 ஜம்மு காஷ்மீர் வளர்ச்சிக்கு தடையாக இருந்தது. சிறப்பு சட்டப் பிரிவு நீக்கப்பட்டதற்காக காஷ்மீர் மக்களுக்கு வாழ்த்து தெரிவிக்கிறேன். வரலாற்று சிறப்பு மிக்க தீர்மானத்தை நாங்கள் எடுத்துள்ளோம் - மோடி உரை.
8:03 PM, 8 Aug

நாட்டு மக்கள் மத்தியில் மோடி உரையை தொடங்கினார். ஜம்மு காஷ்மீர் விவகாரம் குறித்து மோடி பேச்சு.
7:58 PM, 8 Aug

இன்னும் சில நிமிடங்களில் மக்களுக்கு உரை நிகழ்த்துகிறார் பிரதமர் மோடி
7:08 PM, 8 Aug

ஆல் இந்தியா ரேடியோ, தூர்தர்ஷன், யூ டியூப் சேனல் வழியாக மோடி நேரலையில் பேச உள்ளதாக பிரதமர் அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன
7:07 PM, 8 Aug

ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை நீக்கியது தொடர்பாக மோடி விளக்கம் அளிக்க அதிக வாய்ப்பு இருப்பதாக தகவல்
7:07 PM, 8 Aug

மோடி உரையில் என்ன சொல்லப்போகிறார் என்று அறிய இந்தியா மட்டுமின்றி, பாகிஸ்தான் உள்ளிட்ட உலக நாடுகளும் மிகுந்த எதிர்பார்ப்பு

Live: Prime Minister Narendra Modi will be addressing the nation at 8:00 p.m.
English summary
Prime Minister Narendra Modi announced he will be addressing the nation at 8:00 p.m. today. Here you can get live updates.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X