டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

லாக்டவுன்- 6 மாத கடன் தவணை( EMI) ஒத்திவைப்புக்கும் கூட வட்டி விதிப்பா? உச்சநீதிமன்றம் கேள்வி

Google Oneindia Tamil News

டெல்லி: கொரோனா லாக்டவுனால் 6 மாதங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட கடன் தவணைகளுக்கும் வட்டி விதிக்கப்படுமா? என்பது குறித்து நிதி அமைச்சகம், ரிசர்வ் வங்கி பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொரோனா லாக்டவுன் அமல்படுத்தப்பட்டதால் வங்கிகளிடம் இருந்து பெற்ற கடன் தவணைகளை திருப்பி செலுத்த 6 மாத அவகாசத்தை ரிசர்வ் வங்கி வழங்கியது. கடன் தவணைகளை திருப்பிச் செலுத்தாத இந்த காலம் சிபிலில் சேர்க்கப்படாது எனவும் கூறப்பட்டது.

Loan moratorium Case: Will there be additional interest for later? SC asks Centre

இதனால் வங்கிகளில் கடன் பெற்ற பலரும் தவணை ஒத்திவைப்பு சலுகையை பயன்படுத்தினர். ஆனால் வங்கிகளோ, தவனை ஒத்திவைப்பு காலத்துக்கும் ஒரு வட்டியை வசூலிப்போம் என நடவடிக்கை மேற்கொண்டது. இது வங்கி கடன் பெற்றவர்களை பெரும் அதிர்ச்சி அடைய வைத்தது.

வங்கிகளின் இந்த நடவடிக்கைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் இன்று விசாரணை நடைபெற்றது.

அப்போது, கடன்களுக்கு தவணை மற்றும் வட்டி செலுத்துவதில் எந்த பிரச்சனையும் இல்லை. அதில் நீதிமன்றம் தலையிடவில்லை.

தனியார் பள்ளிகளுக்கு கடிவாளம்... கட்டாயப்படுத்தி கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை பாயும் -முதலமைச்சர் தனியார் பள்ளிகளுக்கு கடிவாளம்... கட்டாயப்படுத்தி கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை பாயும் -முதலமைச்சர்

ஆனால் தவணை ஒத்திவைப்பு சலுகை காலத்துக்கும் வட்டி விதிக்கப்பட்டுள்ளதுதான் கவலை அளிக்கிறது. இது தொடர்பாக ரிசர்வ் வங்கி மற்றும் நிதி அமைச்சகம் 3 நாட்களில் பதிலளிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணை ஜூலை 17- ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

English summary
The Supreme court asked officials of Finance Ministry and RBI to convene a joint meeting within 3 days to decide whether interest on EMIs during six month moratorium period till August 31 can be charged by banks or not.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X