டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மகிழ்ச்சியான செய்தி.. கடன்களை செலுத்த மேலும் 3 மாதம் அவகாசம்.. ரிசர்வ் வங்கி ஆளுநர் அறிவிப்பு

Google Oneindia Tamil News

டெல்லி: வங்கி கடன்களை செலுத்த மேலும் 3 மாதம் அவகாசம் அளித்து ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ் உத்தரவிட்டுள்ளார். இதனால் ஆகஸ்ட் 31 வரை கடன்களுக்கான இஎம்ஐகளை வங்கிகள் வசூலிக்காது. அதன்பிறகே வங்கிகள் வசூலிக்கும்

Recommended Video

    RBI has extended moratorium on term loans

    மார்ச் 25ம் தேதி முதல் நாட்டில் ஊடங்கு அமலில் உள்ளது. இதுவரை நான்கு முறை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் இறுதியில் ரிசர்வ் வங்கி மூன்று மாதம் கடன் இஎம்ஐகளை ஒத்திவைக்குமாறு வங்கிகளுக்கு அறிவுறுத்தியது,

    இதனால் 3 மாதங்கள் கடன் இஎம்ஐ தள்ளி வைக்கப்பட்டது. இந்நிலையில் மே மாதத்துடன் தவணை முடிந்துள்ளது. ஜுன் முதல் மீண்டும் இஎம்ஐ கட்ட வேண்டிய நிலை ஏற்பட்டிருந்தது.

     இ.எம்.ஐ செலுத்த மேலும் 3 மாதம் காலக்கெடு.. ரெப்போ விகிதம் குறைப்பு.. ஆர்பிஐ ஆளுநர் அறிவிப்புகள் இ.எம்.ஐ செலுத்த மேலும் 3 மாதம் காலக்கெடு.. ரெப்போ விகிதம் குறைப்பு.. ஆர்பிஐ ஆளுநர் அறிவிப்புகள்

    கடன் இஎம்ஐ

    கடன் இஎம்ஐ

    ஆனால் தொடர்ந்து ஊரடங்கு அமலில் இருந்ததால் மக்கள் வட்டியை கட்டும் நிலையில் இல்லை. கடன்களை செலுத்தும் நிலையிலும் இல்லை. இதனால் கடன் இஎம்ஐ ஒத்திவைப்பு குறித்து ரிசர்வ் வங்கி மீண்டும் அறிவிக்குமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது. இந்த சூழலில் அண்மையில் ஐந்து நாட்கள் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 20 லட்சம் கோடி மதிப்புள்ள சுயசார்பு இந்தியா திட்டத்தை அறிவித்தார். ஆனால் அப்போது எந்த அறிவிப்பும் வெளியாகாமல் இருந்தது.

    வங்கி கடன் செலுத்த

    வங்கி கடன் செலுத்த

    இந்த சூழலில் இன்று செய்தியாளர்களை சந்தித்த ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ் வங்கி கடன்களை செலுத்த மேலும் 3 மாத அவகாசம் அளிக்கப்படுவதாக அறிவித்தார். அதாவது மே மாதத்துடன் முடிய இருந்த கடன் தள்ளிவைப்பு உத்தரவை ஆகஸ்ட் 31 வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளார். அத்துடன் ரெப்போ வட்டி விகிதத்தையும் 4.40 புள்ளிகளில் இருந்து 4 புள்ளிகளாக குறைத்துள்ளார்.

    கடன்களை வசூலிக்காது

    கடன்களை வசூலிக்காது

    கடன் தள்ளிவைப்பு, மற்றும் ரெப்போ வட்டி குறைப்பு ஆகியவற்றால் வங்கி கடனை கட்ட முடியாமல் தவித்து வந்த மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த மூன்று மாதங்கள் வங்கிகள் கடன்களை வசூலிக்காது. வங்கியில் இருப்பு இருந்தால் மட்டுமே எடுக்கும். அத்துடன் வங்கிகளில் வீட்டு கடன் மற்றும் வாகன கடன் வட்டி குறையும் என்று தெரிகிறது.

    எப்படி அமலுக்கு வரும்

    எப்படி அமலுக்கு வரும்

    loan moratorium என்று அழைக்கப்படும் வங்கி கடன் தள்ளி வைப்பு திட்டத்தில் இணைந்தால் நீங்கள் உங்கள் வங்கி கடன் இஎம்ஐ மேலும் 3 மாதங்கள் தள்ளிபோகும். இதன் மூலம் 60 மாதத்தில் கட்ட வேண்டிய கடன் 66 மாதங்களில் முடியும். ஏனெனில் ஏற்கனவே 3மாதம் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் இணைந்து கடனை தள்ளி வைத்தால் ஒருவரின் சிபில் ஸ்கோர் ஏறாது. மற்றபடி வட்டி உள்ளிட்ட எல்லாவற்றையும் வங்கிகள் கொஞ்சம் தாமதாக வசூலிக்கும் அவ்வளவுத்தான்.

    English summary
    As the lockdown has been extended, the RBI has also extended moratorium on term loans
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X