டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

டெல்லி டிராக்டர் பேரணி.. ஒரு பக்கம் கண்ணீர் புகை குண்டு வீச்சு.. மறுபக்கம் மலர் தூவி வரவேற்பு

Google Oneindia Tamil News

டெல்லி : டெல்லியில் குடியரசு தினத்தையொட்டி டிராக்டர் அணிவகுப்பை மேற்கொண்ட விவசாயிகள் மீது ஸ்வரூப் நகரில் உள்ள மக்கள் மலர் தூவி வரவேற்றனர்.

Locals at Swaroop Nagar in Delhi showered flower petals on the farmers

டெல்லியின் வெளிவட்ட சாலைகளான சிங்கு, திக்ரி, காஜிபூர், பல்வால், ஷாஜகான்பூர் ஆகிய 5 எல்லைகளில் இருந்து டிராக்டர்கள் பேரணி நடத்த விவசாயிகளுக்கு டெல்லி போலீசார் அனுமதி அளித்திருந்தனர். 100 கிமீ தூரம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்ட இந்த பேரணிக்காக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

திட்டமிட்டபடி விவசாயிகள் பேரணியை தொடங்கினர். ஒருபக்கம் டெல்லியில் குடியரசு தின விழா நிகழ்ச்சிகள் நடந்து கொண்டிருந்த நிலையில். மறுபக்கம் விவசாயிகள் மத்திய அரசை கண்டித்து மிக பிரம்மாண்டமாக பேரணியை நடத்த தொடங்கினர்.

வாகனங்கள் ஊர்வலமாக வந்து கொண்டிருந்த போது, டிராக்டர் அணிவகுப்பை மேற்கொண்ட விவசாயிகள் மீது ஸ்வரூப் நகரில் உள்ள மக்கள் மலர் தூவி வரவேற்றனர். இது விவசாயிகளை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது. இதனிடையே டெல்லியில் தடுப்புகளை உடைத்து முன்னேற முயன்ற விவசாயிகள் மீது போலீசார் கண்ணீர் புகை குண்டு வீசியதால் பெரும் பதற்றம் நிலவுகிறது.

English summary
Locals at Swaroop Nagar in Delhi showered flower petals on the farmers as they carried out tractor parade on Republic Day, ANI reported.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X