டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

லாக்டவுன் 4.0, எத்தனை நாட்கள் நீட்டிப்பு.. இன்று முக்கிய அறிவிப்பு வெளியிடுகிறது மத்திய அரசு

Google Oneindia Tamil News

டெல்லி: நாடு முழுவதும் லாக்டவுனை 4வது கட்டமாக எத்தனை நாட்கள் நீட்டிப்பது குறித்து என்பது குறித்து மத்திய அரசு இன்று அறிவிப்பு வெளியிட உள்ளது. இந்த லான்டவுன் 4.0 வில் நிறைய தளர்வுகள் இருக்கும் என்று கூறப்படுகிறது.

Recommended Video

    National Lockdown 4.0: அதிக தளர்வுகள்... லாக்டவுன் 4.0 குறித்து வெளியான தகவல்கள்

    சீனாவில் உருவான கொரோனா வைரஸ் இந்தியாவில் கிட்டத்தட்ட 90 ஆயிரம் பேருக்கு பரவி உள்ளது. இதுவரை 2800 பேர் உயிரிழந்துள்ளனர். தினமும் 3 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு தொற்று பரவி வருகிறது. கொரோனா பாதிப்பில் சீனாவை பின்னுக்குத்தள்ளி இந்தியா முன்னேறியுள்ளது.

    Lockdown 4.0: guidelines for the phase four of lockdown will be issued on today

    கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் கடும் நடவடிக்கைள் எடுத்த போதிலும் பாதிப்பு அதிகரித்துக்கொண்டே வருகிறது. நாடு முழுவதும் மத்திய அரசு லாக்டவுனை 3ம் முறை நீட்டித்தது. 3ம் கட்ட லாக்டவுன் இன்றுடன் முடிவுகிறது. மொத்தம் 54 நாட்கள் ஊரடங்கு நாடு முழுவதும் அமலில் உள்ளது.

    இந்நிலையில் அனைத்து மாநில முதல்வர்களும் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து பரிந்துரை வழங்க வேண்டும் என பிரதமர் மோடி கேட்டுக்கொண்டிருந்தார். இதில் சில மாநிலங்கள் மட்டுமே ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தின.

    லாக்டவுன் 4: சென்னை உட்பட தமிழகத்தில் 5 நகரங்களுக்கு தளர்வு இல்லை.. வெளியான தகவல் லாக்டவுன் 4: சென்னை உட்பட தமிழகத்தில் 5 நகரங்களுக்கு தளர்வு இல்லை.. வெளியான தகவல்

    பெரும்பாலான மாநிலங்கள் ஊரடங்கு கட்டுப்பாட்டை தளர்த்த வேண்டும் என்றும் தற்போது மத்திய அரசு முடிவு செய்து வரும் சிவப்பு, ஆரஞ்சு, பச்சை கொரோனா மண்டலங்களை மாநில அரசுகளே முடிவு செய்ய அனுமதிக்க வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளன.

    இந்தியாவிலேயே கொரோனா பாதிப்பு மகாராஷ்டிராவில் அதிகமாக உள்ளது. அதற்கு அடுத்தபடியாக , குஜராத், தமிழகம், டெல்லி, ராஜஸ்தான் மத்திய பிரதேசம் உள்ளிட்டவை பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள 12 மாநிலங்களில் உள்ள 30 நகரங்களில் லாக்டவுன் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. அந்த லிஸ்டில் சென்னை, அரியலூர், செங்கல்பட்டு, விழுப்புரம் உள்ளிட்ட சில மாவட்டங்கள் உள்ளன. எனினும் மத்திய அரசு 4வது கட்ட லாக்டவுன் இன்னும் எத்தனை நாட்கள் நீட்டிக்கப்படும், எவ்வளவு தளர்வுகள் வழங்கப்படும் என்பதை இன்று அறிவிக்க உள்ளது. அப்போது தெரிந்துவிடும்.

    English summary
    guidelines for the phase four of lockdown will be issued on today. Centre Plans Tougher Curbs for 30 Zones of 12 states where maximum restrictions are likely to be imposed.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X