டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

லாக்டவுன் 5.0.. இன்னும் எத்தனை நாட்கள் நீடிக்கும்.. எது செயல்படும், எது செயல்படாது.. கசிந்த தகவல்!

Google Oneindia Tamil News

டெல்லி: இந்தியாவில் லாக்டவுன் 5.0 அறிவிக்கப்பட வாய்ப்புள்ள நிலையில் என்ன மாதிரியான தளர்வுகள் வரும் என தகவல்கள் வெளியாகி வருகிறது.

Recommended Video

    லாக்டவுன் 5.0.. கசிந்த தகவல்! | Lockdown 5.0 | என்ன மாதிரியான தளர்வுகள் வரும்? | Oneindia Tamil

    இந்தியாவில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் கடந்த மார்ச் 24ம் தேதியில் இருந்து லாக்டவுன் அமலில் இருக்கிறது. இதுவரை நான்கு முறை லாக்டவுன் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொருமுறையும் கொஞ்சம் கொஞ்சமாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

    மே 31ம் தேதி ஊரடங்கு முடிய உள்ள நிலையில் மீண்டும் ஐந்தாவது முறையாக லாக்டவுன் நீட்டிக்கப்பட வாய்ப்புள்ளது என்கிறார்கள். லாக்டவுன் 5.0 குறித்து நேற்று உள்துறை அமைச்சர் அமித் ஷா மாநில முதல்வர்களிடம் ஆலோசனை செய்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

    நாடு முழுவதும் மீண்டும் லாக்டவுன் நீட்டிப்பா? பிரதமர் மோடி அமித்ஷா உடன் ஆலோசனை நாடு முழுவதும் மீண்டும் லாக்டவுன் நீட்டிப்பா? பிரதமர் மோடி அமித்ஷா உடன் ஆலோசனை

    அடுத்த லாக்டவுன்

    அடுத்த லாக்டவுன்

    இந்த புதிய லாக்டவுன் 5.0ல் நிறைய தளர்வுகள் கொண்டு வரப்படும் என்கிறார்கள். சென்னை, மும்பை, ஹைதராபாத் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் மட்டும் கட்டுப்பாடுகள் எப்போதும் போல இருக்கும். இதன் லிஸ்ட் நாளை வெளியாக வாய்ப்புள்ளது என்கிறார்கள். அதேபோல் இந்த லாக்டவுன் மேலும் 15 நாட்களுக்கு இருக்கும் என்றும் கூறப்படுகிறது. நாளை காலை அல்லது இரவு இது தொடர்பான அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளது.

    கட்டுப்பாட்டு பகுதி

    கட்டுப்பாட்டு பகுதி

    இந்த லாக்டவுன் 5.0ல் கட்டுப்பாட்டு பகுதிகளில் எந்த விதமான தளர்வுகளும் இருக்காது என்று கூறுகிறார்கள். ஒரு நகரம் முழுக்க தளர்வு அறிவிக்கப்பட்டாலும், கட்டுப்பாட்டு பகுதிகளில் தளர்வுகள் நீடிக்கும் என்கிறார்கள். ஒரு தெருவில் கேஸ்கள் அதிகம் இருந்தால், அங்கு மட்டும் எப்போதும் போல கட்டுப்பாடுகள் இருக்கும் என்று கூறுகிறார்கள். மற்ற சோன்களில் தளர்வுகள் அறிவிக்கப்படலாம்.

    தளர்வு என்ன

    தளர்வு என்ன

    அதன்படி இந்த லாக்டவுன் 5.0ல் விமான போக்குவரத்தில் நிறைய தளர்வுகள் கொண்டு வரப்படும் என்று கூறுகிறார்கள். அதன்படி தற்போது பெரு நகரங்களுக்கு இடையில் மட்டும்தான் விமான போக்குவரத்து உள்ளது. ஆனால் லாக்டவுன் 5.0ல் சிறு சிறு நகரங்களுக்கு இடையிலும் விமான போக்குவரத்து தொடங்கும் என்கிறார்கள். நாடு முழுக்க குறைந்த பயணிகளுடன் விமான போக்குவரத்து தொடங்கும் என்கிறார்கள்.

    ரயில் போக்குவரத்து

    ரயில் போக்குவரத்து

    அதேபோல் ரயில் போக்குவரத்தும் மாநிலங்களுக்கு இடையே அதிகரிக்க உள்ளது. முக்கியமாக பெரு நகரங்களுக்கு இடையே ரயில் போக்குவரத்து தொடங்க உள்ளது. தற்போது வரை நாடு முழுக்க 3,736 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு உள்ளது. இதில் இதுவரை 50 லட்சம் பிற மாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு சென்று இருக்கிறார்கள். இந்த ரயில்களின் எண்ணிக்கை வரும் நாட்களில் அதிகரிக்கப்படும். மாநிலங்களுக்கு உள்ளே லாக்டவுன் 5.0ல் ரயில் போக்குவரத்து கொண்டு வரப்படும்.

    பேருந்து மெட்ரோ

    பேருந்து மெட்ரோ

    அதேபோல் மாநிலங்களுக்கு இடையில் சில மாநிலங்களில் பேருந்து போக்குவரத்து கொண்டு வரப்படும். மாநிலங்களுக்கு உள்ளே நிறைய மாநிலங்களில் போக்குவரத்து கொண்டு வரப்படும். தமிழகத்திலும் மாநிலத்திற்கு உள்ளே பேருந்து போக்குவரத்து விரிவாக்கப்படும் என்று கூறுகிறார்கள். அதேபோல் லாக்டவுன் 5.0ல் பல பெரு நகரங்களில் மெட்ரோ சேவை, மின்சார ரயில்சேவை தொடங்க வாய்ப்புள்ளது என்கிறார்கள்.

    வேறு தளர்வுகள்

    வேறு தளர்வுகள்

    இது போக சில படிப்புகளுக்கு தேர்வுகள் நடத்தப்பட வாய்ப்புள்ளது. மேலும் ஜிம்கள் திறக்கப்படும் என்று கூறுகிறார்கள். கோவில்கள் , வழிபாட்டு தலங்கள் திறக்கப்பட வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள். ஏற்கனவே கர்நாடகா , மேற்கு வங்கத்தில் வழிபாட்டு தலங்கள் திறக்கப்பட்டு உள்ளது. இந்த முறை லாக்டவுன் 5.0ல் மாநில அரசுகளுக்கு கூடுதலாக அதிகாரம் வழங்கப்படும்.

    கூடுதல் அதிகாரம்

    கூடுதல் அதிகாரம்

    ஆனால் வழிபாட்டு தலங்கள் எதிலும் மக்கள் கூட்டமாக பண்டிகை கொண்டாட முடியாது. அதேபோல் கூட்டமாக நடக்கும் குடும்ப விழாக்களுக்கும் கட்டுப்பாடு இருக்கும். சர்வதேச விமான போக்குவரத்து தொடங்கப்பட வாய்ப்பு இல்லை. மால்கள் திறக்கப்பட வாய்ப்பு இல்லை. தியேட்டர்கள் திறக்கப்படாது என்று கூறுகிறார்கள். இது குறித்து நாளை அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளது.

    English summary
    Lockdown 5.0: Lot may get eased down in this new extension in India amid rise of cases.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X