டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

லாக்வுடன் என்பது ஏழைகளுக்கு அளிக்கப்பட்ட "மரண தண்டனை".. மோடியை கடுமையாக சாடிய ராகுல் காந்தி

Google Oneindia Tamil News

டெல்லி: பிரதமர் மோடி வாக்குறுதியளித்தபடி 21 நாட்களில் கொரோனா வைரஸை அழிப்பதற்கு பதிலாக, இந்தியாவை மொத்தமாக லாக்வுடன் செய்து அமைப்புசாரா தொழிலாளர்கள் மற்றும் ஏழைகளுக்கு "மரண தண்டனை" அளித்துவிட்டார் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வேதனை தெரிவித்தார்.

ஐந்து மாதங்கள் லாக்டவுனுக்கு பிறகு தற்போது தான் நாட்டில் இயல்பு நிலை திரும்பி வருகிறது. எனினும் இந்த ஐந்து மாதத்தில் பல கோடி மக்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இது பற்றி காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்ட வீடியோவில், லாக்வுடன் என்பது கொரோனா வைரஸ் மீதான தாக்குதல் அல்ல. லாக்டவுன் என்பது இந்தியாவின் ஏழைகள் மீதான தாக்குதல். இது எங்கள் இளைஞர்களின் எதிர்காலம் மீதான தாக்குதல் என்று தெரிவித்தார்.

பாஜகவில் மனைவியுடன் இணைந்தார்...பிரதமர் பாராட்டிய மதுரை சலூன் கடைக்காரர்!! பாஜகவில் மனைவியுடன் இணைந்தார்...பிரதமர் பாராட்டிய மதுரை சலூன் கடைக்காரர்!!

அமைப்பு சாரா தொழிலாளர்கள்

அமைப்பு சாரா தொழிலாளர்கள்

இதுபற்றி அவர் மேலும் கூறுகையில, "லாக்டவுன் என்பது தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் சிறு வணிகர்கள் மீதான பெரும் தாக்குதலாகும். இது எங்கள் அமைப்புசாரா துறையின் மேல் நடத்தப்பட்ட மோசமான தாக்குதல். இந்த உண்மையை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இந்த தாக்குதலுக்கு எதிராக நாம் அனைவரும் ஒன்றுபட்டு நிற்க வேண்டும். கொரோனா பெயரில் நடத்தப்பட்ட எல்லா செயல்களுமே அமைப்புசாரா துறை மீதான மூன்றாவது தாக்குதல் தான்.

ஜிஎஸ்டி அமல்

ஜிஎஸ்டி அமல்

முன்னதாக ஏழைகள், அமைப்புசாரா துறை மற்றும் சிறு வணிகர்களின் முதுகெலும்பை உடைப்பதற்காக டிமானிஸ்டேசன் (பணமதிப்பிழப்பு) கொண்டுவரப்பட்டது. அத்துடன் ஜி.எஸ்.டி. மோசமான முறையில் அமல்படுத்தப்பட்டது.

லாக்டவுன் குறித்து ராகுல்

லாக்டவுன் குறித்து ராகுல்

திடீரென கொண்டுவரப்பட்ட லாக்டவுன் என்பது அமைப்புசார வர்க்கத்திற்கு வழங்கப்பட்ட "மரண தண்டனை". 21 நாட்களில் கொரோனாவை முடிப்பதாக மோடி வாக்குறுதி அளித்தார். ஆனால் அதற்கு பதிலாக பல கோடி வேலைகள் மற்றும் சிறு தொழில்களை முடித்துவிட்டார். லாக்டவுன் என்பது பிரதமர் மோடியின் "மக்கள் எதிர்ப்பு பேரழிவு திட்டம்.

கோரிக்கை நிராகரிப்பு

கோரிக்கை நிராகரிப்பு

சரியான நேரத்தில் ​​வங்கிக் கணக்குகளில் நேரடியாக பணத்தை டெபாசிட் செய்வதன் மூலம் NYAY போன்ற திட்டத்தின் மூலம் ஏழைகளுக்கு உதவ வேண்டும் என்று காங்கிரஸ் கொடுத்த ஆலோசனையை பாஜக அரசு கவனிக்கவில்லை. சிறு மற்றும் நடுத்தர வணிகங்களுக்கு, நீங்கள் ஒரு தொகுப்பைத் தயாரிக்க வேண்டும் என்று நாங்கள் பரிந்துரைத்தோம். அவர்கள் காப்பாற்றப்பட வேண்டும். இந்த பணம் இல்லாமல், அவர்கள் உயிர்வாழ முடியாது என்றோம். ஆனால் அரசாங்கம் எதுவும் அவர்களுக்கு செய்யவில்லை" இவ்வாறு ராகுல் காந்தி கூறினார்.

English summary
Congress leader Rahul Gandhi said that instead of wiping out coronavirus in 21 days as Prime Minister Modi had promised, the lockdown served as a “death sentence” for India’s unorganised sector and the poor.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X