டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

"ஆணுறை" விற்பனை குறைஞ்சு போச்சாம்.. "அது" நடந்துட்டுதான் இருக்கு.. ஆனால் காரணம் வேறயாம்!

Google Oneindia Tamil News

டெல்லி: இந்தியாவில் ஆணுறைகளின் விற்பனை கடந்த மார்ச் மாதம் உயர்ந்த நிலையில் ஏப்ரல் மாதம் கிடுகிடுவென குறைந்துவிட்டது.

இந்தியாவில் கடந்த மார்ச் 25-ஆம் தேதி முதல் கொரோனாவால் லாக்டவுன் அறிவிக்கப்பட்டது. இந்த காலகட்டத்தில் கணவன், மனைவி இருவரும் வீட்டிலேயே இருந்து பணியாற்றி வந்ததாலும் இன்னும் சிலர் விடுமுறையில் இருந்ததாலும் ஆணுறைகள், கருத்தடை மாத்திரைகளை அதிகமாக வாங்கி வந்தனர்.

இதனால் இதன் விற்பனை 25 சதவீதம் முதல் 50 சதவீதம் அதிகரித்திருந்தது. ஆனால் ஏப்ரல் மாதத்தில் மேலும் 19 நாட்களுக்கு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டவுடன் 10 முதல் 15 சதவீதமாக குறைந்துவிட்டதாக ஓர் ஆய்வு கூறுகிறது. அதற்காக இந்தியர்கள் உடலுறவால் போரடித்து போய்விட்டார்கள் என்ற அர்த்தம் இல்லை. இதற்கு நிபுணர்கள் கூறும் காரணத்தை பார்ப்போம்.

 அந்த 2 நாள் தவறு.. தமிழகத்தில் கொரோனா தீவிரம் அடைய அந்த 2 நாள் தவறு.. தமிழகத்தில் கொரோனா தீவிரம் அடைய "டாஸ்மாக்" காரணமா?.. இன்றிலிருந்து தெரிய வரும்!

டாக்டர்

டாக்டர்

ஊரடங்கின் போது மக்கள் நடமாட்டத்திற்கு கட்டுப்பாடு இருந்தது. இதனால் யாராலும் மருந்து கடைகளுக்கு செல்ல முடியவில்லை. அனைத்து கடைகளும் மூடிவிட்டாலும் மருந்து கடைகள் திறந்திருந்தன. எனினும் டாக்டரின் பரிந்துரை கடிதத்தை காண்பித்தால் மட்டுமே போலீஸார் மருந்துக் கடைகளுக்கு செல்ல அனுமதித்தனர்.

ஆணுறை

ஆணுறை

இதனால் காண்டம் வாங்க செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. அதற்காக கூட்டுக் குடும்பமாக வாழும் வீட்டுக்கு ஆணுறை, கருத்தடை மாத்திரைகளை டோர் டெலிவரியும் செய்ய முடியாது. அதே சமயம் குடும்ப கட்டுப்பாடு செய்யும் நடைமுறைகளும் லாக்டவுன் தொடங்குவதற்கு முன்னரே நிறுத்தப்பட்டது. இதனால் காப்பர் டி லூப் கூட போட முடியாத சூழல் எழுந்தது.

அச்சம்

அச்சம்

இதனால் கருத்தடை மாத்திரைகளை பயன்படுத்தும் பெண்களுக்கு ஒரு வித அச்சம் ஏற்பட்டுவிட்டது. அதாவது லாக்டவுன் காலத்தில் தேவையில்லாமல் கருத்தரித்துவிட்டால் என்ன செய்வது, ஒரு வேளை கருவை கலைக்க மருத்துவமனைக்கு சென்றாலும் அவர்கள் இந்த நெருக்கடியான சூழலில் கருகலைப்பு செய்ய மாட்டார்கள் என்கிற அச்சம் அதிகமாகவே இருந்தது.

முன்கள வீரர்கள்

முன்கள வீரர்கள்

அது மட்டுமல்லாமல் மருந்தாளுநர்களும் முன்கள வீரர்கள் என்பதால் அவர்கள் கோவிட் 19 நோயாளிகளுடன் தொடர்பு ஏற்பட்டு அதனால் நமக்கும் கொரோனா வந்துவிடுமோ என்ற அச்சம் காரணமும் பெரும்பாலானோர் மருந்து கடைகளுக்கு செல்வதை விரும்பவில்லை. ஆய்வில் இது 23.8 லட்சம் பேருக்கு திட்டமிடப்படாத கர்ப்பங்களுக்கும் 14.5 லட்சம் கருக்கலைப்புகளுக்கும் வழிவகுக்கும் என கூறுகிறது.

போலீஸார்

போலீஸார்

கடந்த சில வாரங்களாக கருத்தடை சாதனங்களை வாங்க மக்கள் வெளியே வருகிறார்கள் ஆனால் அவர்கள் பார்ப்பதற்கு உடல்நிலை சரியில்லாதவர்கள் போன்று இல்லை என்பதால் மருந்துச் சீட்டுகள் இல்லாததாலும் இவர்கள் பாதி வழியிலேயே போலீஸாரால் தடுத்து நிறுத்தப்படுகின்றனர். ஒரு சில இடங்களில் தண்டனைகளும் வழங்கப்பட்டன.

English summary
Lockdown condom sales fallen across the country. But Indian are having intercourse.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X