டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

லாக்டவுன் நீட்டிப்பா.. அப்பாடா.. நிதி ஆயோக் துணை தலைவர் சொல்வதை கேட்டால் மனசு குளிருது

Google Oneindia Tamil News

டெல்லி: கொரோனா வைரஸ் தாக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கு லாக்டவுன் நடைமுறை இன்னும் நீட்டிக்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், ஒரு முக்கியமான தகவலை நிதி ஆயோக் துணைத் தலைவர் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று வீடியோ கான்பரன்ஸ் மூலமாக அனைத்து கட்சி தலைவர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

அப்போது பெரும்பாலான கட்சித் தலைவர்கள் 21 நாட்கள் லாக்டவுன் காலகட்டத்தை நீட்டிக்க வேண்டும் என்று விருப்பம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

தமிழகத்தில் மேலும் 48 பேருக்கு கொரோனா.. பாதிப்பு எண்ணிக்கை 738 ஆக உயர்வு தமிழகத்தில் மேலும் 48 பேருக்கு கொரோனா.. பாதிப்பு எண்ணிக்கை 738 ஆக உயர்வு

லாக்டவுன் நீடிப்பு

லாக்டவுன் நீடிப்பு

திடீரென லாக்டவுன் நிலையை விலக்கிக் கொண்டால் பழையபடி நோய்த்தொற்று ஏற்படும், சமூக விலகலுக்கு நமது மக்கள் தொகை மிகுந்த நாட்டில் வழி கிடையாது என்று அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். இதனால்தான், லாக்டவுன் காலகட்டம் அதிகரிக்கும் என்ற அச்சம் பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் நிதி ஆயோக் அமைப்பின் துணைத் தலைவர் ராஜீவ் குமார் ஒரு தகவலை சொல்லி உள்ளார். அவர் என்ன கூறியுள்ளார் என்பதை பாருங்கள்.

மும்பை

மும்பை

இந்தியாவின் கொரோனா வைரஸ் தொற்று மையப் புள்ளியாக மும்பை நகரம் மாறியுள்ளது. மற்றொரு பக்கம் பார்த்தால் இந்த நாட்டில் 400 மாவட்டங்களில் ஒரு கொரோனா பாதிப்பு கூட கிடையாது. எனவே எங்கே சரி செய்ய வேண்டுமோ அங்கே செய்ய வேண்டும். இதை மத்திய அரசு கண்டிப்பாக கவனிக்கும்.

62 மாவட்டங்களில் 80 சதவீத நோயாளிகள்

62 மாவட்டங்களில் 80 சதவீத நோயாளிகள்

கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகம் உள்ள 62 மாவட்டங்களில் லாக்டவுன் நடைமுறையை தொடர்ந்து கொண்டு, மற்ற பகுதிகளில் கட்டுப்பாடுகளை தளர்த்தும் வாய்ப்பு இருக்கிறது. இந்த 62 மாவட்டங்களில்தான் மொத்த லாக்டவுன் வியாதி புள்ளி விவரப்படி, 80 சதவீத நோயாளிகள் இருக்கிறார்கள்.

ஒத்துழைப்பு

ஒத்துழைப்பு

இதுபோன்ற திட்டங்களை செயல்படுத்துவதில் மாநில அரசின் பங்கு மிக அதிகம். மாவட்ட நிர்வாகங்கள் இந்த திட்டங்களில் மிகுந்த கவனம் செலுத்தவேண்டும். மத்திய மற்றும் மாநில அரசுகளின் ஒத்துழைப்புதான் இதுபோன்ற பிரச்சினைகளை தீர்ப்பதற்கு உதவும். இவ்வாறு ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார்.

English summary
Lockdown extension may be for some districts, says NITI Aayog VC Rajv Kumar to an TV Channel.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X