டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ராஜஸ்தானை நையப்புடைத்த வெட்டுக் கிளிகள்.. அடுத்து டெல்லிக்கு மிரட்டல்.. உ.பியிலும் உஷார் நிலை!

Google Oneindia Tamil News

டெல்லி: ராஜஸ்தானில் பயிர்களை நாசம் செய்த வெட்டுக்கிளிகள் தற்போது டெல்லியை நோக்கி படையெடுக்கக் கூடும் என வேளாண் நிபுணர்கள் தெரிவித்தனர்.

Recommended Video

    17ம் நூற்றாண்டில் மதுரையை நாசம் செய்த வெட்டுக்கிளிகள்

    ராஜஸ்தான், குஜராத்,மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் வெட்டுக்கிளிகள் படையெடுத்து அங்குள்ள பயிர்களை நாசப்படுத்தி வருகின்றன.

    பாலைவனப் பகுதிகளை ஒட்டிய நாடுகளான ஈரான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து உருவாகும் இந்த வெட்டுக்கிளிகள் ஒரு சதுரகிலோ மீட்டர் பரப்பளவில் இருக்கும் 4 கோடி வெட்டுக்கிளிகள் ஒரே நாள் 80, 500 கிலோ வேளாண் பயிர்களை உணவாக உட்கொள்ளும்.

    இன்று விண்வெளிக்கு செல்லும் 2 நாசா வீரர்கள்.. விண்ணுக்கும் கொரோனா பரவுமா.. ஸ்பேஸ் எக்ஸ் சொன்ன பதில்!இன்று விண்வெளிக்கு செல்லும் 2 நாசா வீரர்கள்.. விண்ணுக்கும் கொரோனா பரவுமா.. ஸ்பேஸ் எக்ஸ் சொன்ன பதில்!

    ஜெய்ப்பூர்

    ஜெய்ப்பூர்

    இது ஒரு நாளில் 35,000 மனிதர்கள் உண்ணும் உணவிற்கு சமமாகும். ராஜஸ்தானில் வெட்டுக்கிளிகளை சமாளிக்க டிரோன் மூலம் பூச்சிக்கொல்லிகள் அடிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அது போல் இன்று ஜெயப்பூர் மாவட்டத்தில் சோமு என்ற இடத்தில் ஆளில்லா விமானம் மூலம் பூச்சிக் கொல்லி மருந்துகள் அடிக்கப்பட்டன.

    விமானம்

    விமானம்

    இதுகுறித்து அந்த மாநில வேளாண்துறை அதிகாரி கூறுகையில் இன்று ஒரு ஆளில்லா விமானத்தை வாடகைக்கு வாங்கி பூச்சிக் கொல்லி அடிக்கும் பணியை தொடங்கியுள்ளோம். அடுத்து வரும் நாட்களில் இன்னும் பல ஆளில்லா விமானங்கள் பயன்படுத்தப்படும். 2.5 ஏக்கர் பரப்பளவு கொண்ட பகுதியில் விமானம் மூலம் பூச்சிக் கொல்லியை தெளிக்க 15 நிமிடங்களாகிறது என்றார்.

    வயல்கள்

    வயல்கள்

    பாகிஸ்தானிலிருந்து இந்தியாவுக்கு ஏப்ரல் 11 ஆம் தேதி நுழைந்த இந்த வெட்டுக்கிளிகள் மாநிலத்தின் பாதிக்கும் மேலான மாவட்டங்களை ஆக்கிரமித்துள்ளது. வெகு தூர பகுதிகளுக்கு உணவு தேடி சென்ற வெட்டுக்கிளிகள் வயல்களில் பயிர்கள் இல்லாததால் ஜெய்ப்பூர், கரௌலிக்கு திரும்பி வந்துவிட்டது. வெட்டுக்கிளி கூட்டம் தேசிய தலைநகரான டெல்லிக்கும் படையெடுக்கும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

    தலைநகர்

    தலைநகர்

    டெல்லியில் 22 சதவீதம் இடங்கள் பச்சை பசேல் என காட்சி அளிப்பதால் அவை உணவுக்காக இங்கும் வரும். காற்றின் வேகமும் திசையும் அவற்றுக்கு சார்பாக இருந்தால் அவை இன்னும் சில நாட்களில் தேசிய தலைநகரை நோக்கி படையெடுக்கும் என தெரிவித்தனர்.

    வெட்டுக்கிளி

    வெட்டுக்கிளி

    உத்தரப்பிரதேசத்தில் உள்ள மஹோபா மற்றும் ஜான்சி ஆகிய மாவட்டங்களில் வெட்டுக்கிளி கூட்டங்கள் வந்துள்ளதால் அந்த மாநிலத்தில் 10 மாவட்டங்களின் நிர்வாகங்கள் பூச்சிக் கொல்லி தெளிப்பான்கள் உள்ளிட்டவைகளுடன் உஷார் நிலையில் உள்ளன. இதனால் வெட்டுக்கிளி அண்டைய மாநிலங்களான ராஜஸ்தான், மத்திய பிரதேசத்திற்கு வந்துவிட்டது.

    English summary
    Locust Swarm could head towards Delhi as Uttar Pradesh on High Alert after it destroys Rajasthan.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X