டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

லோக்சபா தேர்தல் 2019 மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு Live: வாக்குப்பதிவு நிறைவடைந்தது

Google Oneindia Tamil News

Recommended Video

    Lok Sabha Election 2019: இன்று 3ம் கட்ட வாக்குப்பதிவு.. 115 தொகுதிகளில் தேர்தல்!

    டெல்லி: மக்களவை மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு நாடு முழுக்க 117 தொகுதிகளில் இன்று நடந்து வருகிறது. இன்று காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

    நாடு முழுவதும் முதல் இரண்டு கட்ட மக்களவை தேர்தல் நிறைவடைந்துள்ளது. இந்த நிலையில் இன்று மூன்றாவது கட்டமாக 13 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் மக்களவை தேர்தல் நடைபெற்று வருகிறது. மாலை 6 மணி வரை இந்த வாக்குப்பதிவு நடக்கும்.

    Newest First Oldest First
    6:57 PM, 23 Apr

    61% வாக்குப்பதிவு

    டெல்லி: நாடு முழுக்க மாலை 5 மணி நிலவரப்படி 61% வாக்குப்பதிவாகியுள்ளது. வாக்குப் பதிவு பெரும்பாலான தொகுதிகளில் முடிவுக்கு வந்தது.
    5:57 PM, 23 Apr

    வாக்குப்பதிவு நிறைவடைகிறது

    மாலை 6 மணியுடன் 3வது கட்ட வாக்குப்பதிவு நிறைவடைய உள்ளது. வயநாடு உட்பட 116 தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது.
    3:34 PM, 23 Apr

    கேரளா

    3வது கட்ட லோக்சபா தேர்தலில் கேரளாவில் மதியம் 3 மணி நிலவரப்படி 57.68 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. வயநாட்டில் 60.2% வாக்குகள் பதிவாகி உள்ளது.
    2:29 PM, 23 Apr

    2 மணிவரை 37.89% வாக்குப்பதிவு

    டெல்லி: நாடுமுழுக்க 3வது கட்ட தேர்தலில் 116 லோக்சபா தொகுதிகளுக்கு இன்று நடைபெறும் வாக்குப்பதிவில் மதியம் 2 மணி நிலவரப்படி 37.89 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
    2:24 PM, 23 Apr

    அகமதாபாத்தில் அருண் ஜேட்லி வாக்குப்பதிவு

    குஜராத்: நிதி அமைச்சர் அருண் ஜேட்லி, அகமதாபாத்தில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்கு செலுத்தினார்.
    12:23 PM, 23 Apr

    கேரளா

    காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி போட்டியிடும் வயநாடு தொகுதியில் மக்கள் ஆர்வத்தோடு வாக்களித்து வருகிறார்கள். காலை 11 மணி நிலவரப்படி, அங்கு, 23.68% வாக்குகள் பதிவாகியுள்ளன.
    11:37 AM, 23 Apr

    ஓட்டுப்போட்டார் ஹர்திக் பட்டேல்

    குஜராத்: சுரேந்திர நகர் வாக்குச்சாவடியில் ஓட்டுப்போட்டார், காங்கிரஸ் தலைவர் ஹர்திக் பட்டேல்
    11:19 AM, 23 Apr

    திருவனந்தபுரத்தில் கியூவில் நிற்கும் பாஜக வேட்பாளர்

    கேரளா: திருவனந்தபுரம் தொகுதி பாஜக வேட்பாளர், கும்மனம் ராஜசேகரன் திருவனந்தபுரத்தில் கியூவில் நின்று வாக்களிப்பு
    11:17 AM, 23 Apr

    அன்னா ஹசாரே வாக்களிப்பு

    மகாராஷ்டிரா: ராலேகான் சித்திக்கி மாவட்டத்தில், சமூக சேவகர் அன்னா ஹசாரே வாக்களிப்பு
    10:47 AM, 23 Apr

    குஜராத்

    ராஜ்கோட் நகரிலுள்ள வாக்குச்சாவடியில் மனைவியுடன் வந்து வாக்களித்தார் கிரிக்கெட் வீரர் செடேஷ்வர் புஜாரா
    10:27 AM, 23 Apr

    குஜராத்

    குஜராத் மாநிலம், ரெய்சான் வாக்குச்சாவடியில், பிரதமர் நரேந்திர மோடியின் தாய், ஹீராபென் மோடி வாக்களித்தார். தள்ளாத வயதிலும் வாக்குச்சாவடிக்கு வந்திருந்தார் ஹீராபென்.
    10:11 AM, 23 Apr

    கேரளா

    ராகுல் காந்தி போட்டியிடும் வயநாடு தொகுதியில் காலை 10 மணி நிலவரப்படி 11.87% வாக்குகள் பதிவாகியுள்ளன. கடந்த தேர்தலில் மொத்தம் 73.23% வாக்குகள் பதிவான தொகுதி வயநாடு.
    9:49 AM, 23 Apr

    9 மணி வரை எங்கு- எவ்வளவு வாக்குப் பதிவு?

    இன்று 14 மாநிலங்களில் லோக்சபா தேர்தல் நடைபெறுகிறது. அதில் காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கியது. 9 மணி நிலவரப்படி அசாமில் 12.36 சதவீதமும், பீகாரில் 12.60 சதவீதமும், கோவாவில் 2.29 சதவீதமும், குஜராத்தில் 1.35 சதவீதமும் கர்நாடகத்தில் 1.75 சதவீதமும் கேரளத்தில் 2.48 சதவீதமும் மகாராஷ்டிரத்தில் 0.99 சதவீதமும் ஒடிஸாவில் 1.32 சதவீதமும் வாக்குப் பதிவு நடந்துள்ளது.
    9:33 AM, 23 Apr

    குஜராத்

    பாஜக தேசிய தலைவர் அமித்ஷா மற்றும் அவரது மனைவி சோனல் ஷா ஆகியோர் அகமதாபாத்தில் வாக்களித்தனர். இதில் வழக்கமாக அத்வானி போட்டியிட்டு வெற்றி பெற்று வந்த காந்தி நகர் தொகுதியில் அமித்ஷா போட்டியிடுகிறார்.
    9:30 AM, 23 Apr

    ஒடிஸா

    ஒடிஸா லோக்சபா தேர்தலில் தால்சரில் வாக்குச் சாவடி மையத்தில் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது வாக்கை அளித்தார். இன்று 14 மாநிலங்களில் மூன்றாம் கட்டமாக லோக்சபா தேர்தல் நடைபெறுகிறது.
    9:28 AM, 23 Apr

    மேற்கு வங்கம்

    மேற்கு வங்க மாநிலம் மால்டாவில் ஒரு பள்ளியில் 87 வயது மூதாட்டியை ஒருவர் குழந்தை போல தூக்கிக் கொண்டு வந்து வாக்களிக்க வைத்தார்.
    9:20 AM, 23 Apr

    குடும்பத்துடன் வந்து வாக்களித்த சுப்ரியா சுலே

    மகாராஷ்டிரா: தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாரின் மகள் சுப்ரியா சுலே தனது குடும்பத்தினருடன் வந்து பாரமதியில் வாக்களித்தார். இத்தொகுதியில் அவர் எம்பியாக உள்ளார். மீண்டும் அதே தொகுதியில் தேசியவாத காங்கிரஸ் சார்பில் போட்டியிடுகிறார்.
    9:17 AM, 23 Apr

    மனைவியுடன் ஓட்டு போட்டார் குஜராத் முதல்வர் விஜய் ருபானி

    குஜராத்: குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் உள்ள அனில் கியான் மந்திர் பள்ளியில் முதல்வர் விஜய் ருபானி தனது மனைவி அஞ்சலியுடன் வந்து வாக்களித்தார்.
    9:00 AM, 23 Apr

    வெடிகுண்டை விட வலிமையானது வாக்காளர் அடையாள அட்டை: மோடி பேட்டி

    வெடிகுண்டை விட வலிமையானது வாக்காளர் அடையாள அட்டை: மோடி பேட்டி
    அஹமதாபாத்: பிரதமர் நரேந்திர மோடி வாக்களித்த பின் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் "பயங்கரவாதிகளுளுக்கு ஆயுதமாக வெடிகுண்டு உள்ளது. ஜனநாயகத்தின் வலிமை வாக்காளர் அடையாள அட்டை. வெடிகுண்டைவிட வலிமையானது வாக்காளர் அடையாள அட்டை என்று என்னால் உறுதியாக சொல்ல முடியும். எனவே நீங்கள் உங்கள் வாக்காளர் அடையாள அட்டையின் வலிமையை உணருங்கள்" இவ்வாறு கூறினார்.
    8:47 AM, 23 Apr

    வாக்களித்த பின் தூய்மையானவராக உணருவீர்கள்: பிரதமர் மோடி பேட்டி

    அஹமதாபாத்: தனது வாக்கினை பதிவு செய்த பின் பிரதமர் நரேந்திர மோடி பேசுகையில், "இன்று காலை மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு நடந்து வருகிறது. எனது சொந்த மாநிலமான குஜராத் மாநிலத்தில் எனது கடமையை நிறைவேற்றுவதற்கான வாய்ப்பு கிடைத்தது. கும்பாபிஷேகத்தில் புனித நீரால் தூய்மை அடைவது போல், ஜனநாயக திருவிழாவில் வாக்களித்த பின் நீங்கள் தூய்மையானவராக உணருவீர்கள்" என்றார்.
    8:37 AM, 23 Apr

    குஜராத்

    குஜராத் மாநிலம் அஹமதாபாத்தின் ரெனிப்பில் உள்ள மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடியில் பிரதமர் நரேந்திரமோடி தனது வாக்கினை பதிவு செய்தார். குஜராத்தில் 26 தொகுதிகளுக்கும் இன்று மக்களவை தேர்தல் நடந்து வருகிறது.
    8:34 AM, 23 Apr

    குஜராத்

    பிரதமர் நநேரந்திர மோடி, பாஜக தேசிய தலைவர் அமித்ஷா ஆகியோர் தனது வாக்கினை பதிவு செய்ய அஹமதாபாத் வந்தனர் அஹமதாபாத்தின் ரெனிப்பில் உள்ள மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடிக்கு இருவரும் வந்து வாக்களித்தார்கள்.
    8:13 AM, 23 Apr

    குஜராத்

    காந்தி நகர்: குஜராத் மாநிலத்தில் உள்ள 26 மக்களவை தொகுதிகளுக்கும் இன்று தேர்தல் நடந்து வருகிறது. இந்நிலையில் காந்தி நகரில் ஓட்டு போட வந்த பிரதமர் மோடி, முன்னதாக தனது தாயை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
    7:34 AM, 23 Apr

    லோக்சபா தேர்தல் 2019

    நாடு முழுவதும் 13 மாநிலங்களில் இன்று 3ம் கட்ட மக்களவை தேர்தல். 116 மக்களவை தொகுதிகளுக்கு இன்று மக்களவை தேர்தல். காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது
    4:52 AM, 23 Apr

    திரிபுரா

    திரிபுராவில் 1 தொகுதியில் தேர்தல் நடக்கிறது.
    4:52 AM, 23 Apr

    காஷ்மீர்

    காஷ்மீரில் 1 தொகுதியில் தேர்தல் நடக்கிறது. அங்கு தீவிரவாத அச்சுறுத்தல்களுக்கு இடையே பலத்த பாதுகாப்புடன் தேர்தல் நடக்கிறது
    4:52 AM, 23 Apr

    உத்தரபிரதேசம்

    உத்தரபிரதேசத்தில் 10 தொகுதிகளில் தேர்தல் நடக்கிறது. இங்கு மூன்றாவது கட்டமாக தேர்தல் நடக்கிறது.
    4:51 AM, 23 Apr

    ஒடிசா

    ஒடிசாவில் 6 தொகுதிகளில் தேர்தல் நடக்கிறது. இதில் ஒடிசா சட்டசபை தேர்தலும் லோக்சபா தேர்தலுடன் சேர்ந்து நடக்க உள்ளது.
    4:51 AM, 23 Apr

    சத்தீஷ்கர்

    சத்தீஷ்கர் மாநிலத்தில் 7 தொகுதிகளில் தேர்தல் நடக்கிறது.
    4:51 AM, 23 Apr

    பீகார்

    பீகாரில் 5 தொகுதிகளில் தேர்தல் நடக்கிறது.
    READ MORE

     Lok Sabha Election 2019: 115 Seats face voting today in the third phase - LIVE UPDATES
    English summary
    Lok Sabha Election 2019: 115 Seats face voting today in the third phase today.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X