டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

லோக்சபா தேர்தல் 2019 இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு: தமிழகத்தில் 38 தொகுதிகளில் வாக்குப்பதிவு ஓவர்

Google Oneindia Tamil News

Recommended Video

    Lok Sabha Election 2019: லோக்சபா தேர்தல்.. 2ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது

    டெல்லி: லோக்சபா தேர்தல் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று துவங்கி நடைபெற்று வருகிறது. தமிழகம் உட்பட மொத்தம் 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 95 தொகுதிகளில் இந்த தேர்தல் நடக்கிறது. இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு துவங்கியுள்ளது.

    தேர்தல் தொடர்பான உடனுக்குடன் செய்திகளுக்கு இந்த லைவ் பக்கத்தில் நீங்கள் இணைந்திருங்கள்.

    Newest First Oldest First
    7:43 PM, 18 Apr

    தமிழகம்

    18 தொகுதி சட்டசபை இடைத் தேர்தலில் 71.62 சதவீத வாக்குகள் பதிவு
    7:42 PM, 18 Apr

    தமிழகம்

    மாலை 6 மணி நிலவரப்படி 69.55 சதவீதம் பதிவு. தமிழக தலைமை அதிகாரி சத்யபிரத சாகு பேட்டி. மதுரையில் 8 மணி வரை தேர்தல் நடக்கிறது.
    7:39 PM, 18 Apr

    தமிழக லோக்சபா தேர்தலில் 69.55 சதவீத வாக்குகள் பதிவு - சத்யபிரத சாகு தகவல்
    6:25 PM, 18 Apr

    அரக்கோணம் தொகுதியில் துப்பாக்கி சூடு

    அரக்கோணம் தொகுதிக்கு உட்பட்ட ஆற்காடு மேல் விஷாரத்தில் துப்பாக்கிச் சூடு சம்பவம் நடைபெற்றுள்ளது. மத்திய பாதுகாப்பு படையினர் வானத்தை நோக்கி சுட்டுள்ளனர். கூட்டம் அதிகமாக இருந்ததால் அதை கலைக்க வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு
    6:17 PM, 18 Apr

    தமிழகத்தில் 37 லோக்சபா தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்தது

    தமிழகத்தில் 37 லோக்சபா தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்தது. புதுச்சேரி தொகுதியிலும் வாக்குப்பதிவு நிறைவடைந்தது. 6 மணிக்குள் வாக்குச்சாவடிகளுக்கு வந்தவர்களுக்கு டோக்கன் தரப்பட்டு வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மதுரையில் மட்டும் இரவு 8 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவடைகிறது.
    6:04 PM, 18 Apr

    18 இடைத்தேர்தலுக்கான வாக்குப் பதிவு நிறைவு

    தமிழகத்தில் காலை 7 மணிக்கு தொடங்கிய 18 சட்டசபை தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப் பதிவு மாலை 6 மணியுடன் முடிவடைந்துவிட்டது. 5 மணி நேர நிலவரப்படி தமிழக சட்டசபை இடைத்தேர்தலில் 67.08 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன.
    5:37 PM, 18 Apr

    மாலை 5 மணிவரை 63.73% வாக்குப்பதிவு

    தமிழகத்தில் மாலை 5 மணிவரை 63.73 சதவீதம் வாக்குப்பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக சிதம்பரத்தில் 70.73% வாக்குப்பதிவாகியுள்ளது என்று, தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்தார்.
    4:56 PM, 18 Apr

    மக்கள் தெளிவாக உள்ளனர்- வடிவேலு

    மக்கள் தெளிவாக உள்ளனர்- வடிவேலு
    மக்களுக்கு நான் எதுவும் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை, அவர்கள் தெளிவாக உள்ளார்கள். தேர்தல் என்பது திருவிழாவுக்கு சமம். யார் வந்தாலும் மக்களை காப்பாற்ற வேண்டும். சென்னை சாலிகிராமத்தில் வாக்களித்த பின் நடிகர் வடிவேலு பேட்டி. முன்னதாக வாக்குச்சாவடிக்குள் போட்டோ எடுத்தபோது, டான்ஸ் ஆடி காமெடி செய்தார் வடிவேலு.
    4:10 PM, 18 Apr

    தமிழகத்தில் மதியம் 3 மணிவரை 52.02 சதவீதம் வாக்குப்பதிவு

    தமிழகம்: தமிழகத்தில் மதியம் 3 மணிவரை 52.02 சதவீதம் வாக்குப்பதிவாகியுள்ளதாகவும், கரூரில் அதிகபட்சமாக 56.85% வாக்குகள் பதிவாகியுள்ளது என்றும், குறைவாக சென்னை மத்திய தொகுதியில் வாக்குப்பதிவாகியுள்ளன என்றும் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்தார்.
    3:48 PM, 18 Apr

    அரியலூரில் வன்முறை

    தமிழகம்: சிதம்பரம் தொகுதிக்கு உட்பட்ட அரியலூரில் இரு தரப்பினர் இடையே கடும் மோதல். 20 வீடுகள் சேதம்
    3:38 PM, 18 Apr

    கர்நாடகா

    கர்நாடக முதல்வர் குமாரசாமியின் ஹெலிகாப்டரில் தேர்தல் பறக்கும் படை சோதனை நடத்தியுள்ளது. அவரது உடமைகளையும் சோதனைக்கு உட்படுத்தியதால் பரபரப்பு
    3:34 PM, 18 Apr

    வாக்குச் சாவடிகளை கைப்பற்ற ஆளுங்கட்சி திட்டம்?

    வாக்குச் சாவடிகளை கைப்பற்ற ஆளும்கட்சி திட்டமிட்டுள்ளதாக ஆணையர், டிஜிபியிடம் திமுக புகார் கடிதம் அளித்துள்ளது. வாக்குச் சாவடிகளை கைப்பற்ற போலீஸ் ஒத்துழைக்கும் வகையில் பாதுகாப்பை திரும்ப பெற திட்டமிட்டுள்ளதாக புகார். வாக்குச் சாவடி உள்ள இடங்களில் சிசிடிவி கேமராக்களை செயலிழக்கவும் திட்டமிட்டுள்ளதாக புகார்.
    3:19 PM, 18 Apr

    வாக்குப்பதிவு நேரத்தை அதிகரிக்க வேண்டும் - காங். கோரிக்கை

    மின்னனு எந்திரம் கோளாறான இடங்களில் நேரத்தை அதிகரிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்கு காங்கிரஸ் கோரிக்கை வைத்துள்ளது.
    2:56 PM, 18 Apr

    பெரம்பலூரில் அதிமுகவினர் ரகளை

    பெரம்பலூர் தொகுதிக்கு உட்பட்ட வெங்கலம் அரசு பள்ளி வாக்குச்சாவடியில் மது போதையில் அதிமுகவினர் ரகளை என தகவல். ரகளை செய்த அதிமுகவினரை போலீசார் அப்புறப்படுத்தினர்.
    2:39 PM, 18 Apr

    வாக்காளர் பட்டியலில் 1000 பெயர்கள் மாயம்

    கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் அடுத்த தூத்தூர் பகுதியில் வாக்காளர் பட்டியலில் 1000 மீனவர்களின் பெயர்கள் விடுபட்டதால் மீனவர்கள் போராட்டம்
    2:25 PM, 18 Apr

    தமிழகம்

    பண்ருட்டி அருகே திருவதிகையில் வாக்கு இயந்திரத்தில் அமமுக சின்னம் உள்ள பட்டன் உடைந்ததால் வாக்குப்பதிவு 1 மணி நேரமாக நிறுத்தப்பட்டுள்ளது. மாற்று வாக்குப்பதிவு இயந்திரம் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது.
    1:54 PM, 18 Apr

    தமிழகம்

    தமிழகத்தில் மதியம் 1 நிலவரப்படி அதிகப்பட்சமாக நாமக்கல்லில் 41.56 சதவீதம் வாக்குகள் பதிவு
    1:36 PM, 18 Apr

    தமிழகம்

    நெல்லை தொகுதியில் 36.78%, விருதுநகரில் 38.40% கன்னியாகுமரியில் 32% வாக்குப்பதிவு. புதுச்சேரி லோக்சபா தொகுதியில் 1 மணி நிலவரப்படி 33% வாக்குகள் பதிவாகியுள்ளன.
    1:36 PM, 18 Apr

    ஸ்டாலின் பேட்டியால் சிக்கல்

    ஓட்டு போட்டுவிட்டு விதிமுறைகளை மீறி திமுக தலைவர் ஸ்டாலின், மத்திய சென்னை திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் ஆகியோர் பேட்டியளித்ததாக தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார்
    1:33 PM, 18 Apr

    1 மணி அளவிலான வாக்குப்பதிவு நிலவரம்

    விழுப்புரம் தொகுதியில் 49.26%, திருப்பூர் லோக்சபா தொகுதியில் 38%, நீலகிரி தொகுதியில் 32.7%, கரூர் தொகுதியில் 35.44%,, சேலத்தில் 38% வாக்குப்பதிவாகியுள்ளது.
    1:29 PM, 18 Apr

    தமிழகம்:

    நெல்லை தொகுதிக்கு உட்பட்ட பணகுடியில், மணிகண்டன் என்பவருக்கு சொந்தமான ஓட்டை வேறு ஒருவர் போட்டுவிட்டதாக புகார்.
    1:12 PM, 18 Apr

    தமிழகம்

    கோயம்பேட்டில் போதிய பஸ்கள் வரத்து இல்லாததால் பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது. அரை மணி நேரத்திற்கு ஒரு பஸ் மட்டுமே வருவதாக பயணிகள் போராட்டத்தில் குதித்தனர். நேற்று இரவு முதலே பஸ்கள் எண்ணிக்கை போதவில்லை என கோயம்பேட்டில் பயணிகள் குமுறல்
    1:08 PM, 18 Apr

    தமிழகம்:

    மதியம் 1 மணி நிலவரப்படி சேலத்தில் 38% வாக்குப்பதிவாகியுள்ளது.
    12:56 PM, 18 Apr

    85 வயதில் முதல்முறையாக வாக்களித்த கன்னியப்பன்

    85 வயதில் முதல்முறையாக வாக்களித்த கன்னியப்பன்
    தமிழகம்: திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்த மருதாடு கிராமத்தைச் சேர்ந்தவர் கன்னியப்பன். சிறு வயது முதலே கொத்தடிமை வாழ்க்கையில் சிக்கிக் கொண்டார். இவர் தற்போது 85 ஆவது வயதில் முதல்முறையாக தனது வாக்கை பதிவு செய்தார். இதற்காக மலர்களால் அலங்கரிக்கப்பட்ட காரில் கன்னியப்பனை ஆட்சியர் அழைத்து வந்தார்.
    12:56 PM, 18 Apr

    சென்னை போலீஸ் கமிஷனர் விஸ்வநாதன் பேட்டி

    தமிழகம்: சென்னையில் அமைதியான முறையில் தேர்தல் நடைபெற்று வருகிறது. சிறு பிரச்சினை என்றாலும் உடனே தீர்க்கப்படுகிறது. உடனுக்குடன் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து விடுகிறார்கள். வாக்குச்சாவடிகள் தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது.
    12:32 PM, 18 Apr

    தமிழகம்

    குமரி தொகுதிக்கு உட்பட்ட பிலாங்காலை பகுதியிலுள்ள கல்லுவிளையை சேர்ந்த அஜின் ஓட்டை யாரோ போட்டுவிட்டனர். கள்ள ஓட்டால் தனது ஓட்டை பறி கொடுத்த அஜின் ஏமாற்றமடைந்தார்.
    12:25 PM, 18 Apr

    வேலூரில் மட்டும்தான் பணம் கொடுக்கப்பட்டதா? சீமான் கேள்வி. வேலூரில் மட்டுமே பணம் கொடுக்கப்பட்டதாக மக்களுக்கு காட்ட நினைக்கிறார்கள். ஒருவர் செய்த தவறுக்கு மொத்த வேட்பாளர்களையும் தண்டிப்பது ஏன்? சீமான் கேள்வி
    12:09 PM, 18 Apr

    தமிழகம்

    லோக்சபா தேர்தலில் சென்னை சாலிகிராமத்தில் உள்ள வாக்குச்சாவடியில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வாக்களித்தார்.
    12:05 PM, 18 Apr

    தமிழகம்

    தமிழகம்
    லோக்சபா தேர்தலில் சென்னை சாலிகிராமத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் வாக்களித்தார். அவருடன் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்தும் வாக்களித்தார்.
    12:00 PM, 18 Apr

    தமிழகம்

    லோக்சபா தேர்தலில் காலை 11 மணி நிலவரப்படி சென்னையில் 22.8% வாக்குகள் பதிவாகி உள்ளது. வடசென்னையில் 23.67%, தென் சென்னையில் 23.87% வாக்குகள் பதிவாகி உள்ளது.
    READ MORE

    Lok sabha election 2019 phase 2 polling live updates

    English summary
    Voting for Phase 2 Lok Sabha Election will take place on April 18, Today. 11 states and 1 union territory will vote to elect representatives on 95 seats. Here you can find live updates.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X