டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

டிசம்பரில் தோற்ற பாஜக.. அவ்வளவு தான் என அகமகிழ்ந்தவர்களை.. மோடி துக்கமாக்கியது இப்படித்தான் !

Google Oneindia Tamil News

டெல்லி: டிசம்பர் மாதத்தில் ஏற்பட்ட 3 மாநில சட்டமன்ற தோல்வியை வைத்து பிரதமர் மோடி அலை இனி அவ்வவுதான் என எடைபோட்ட எதிர்க்கட்சிகள், உற்சாகத்தில் இருந்தன. ஆனால் அவர்களின் மகிழ்ச்சியை அடுத்த 5 மாதத்தில் துக்கமாக மாற்றி காட்டிவிட்டார் பிரதமர் மோடி.

விவசாயிகளுக்கு கடன்தள்ளுபடி அறிவிப்பினை வெளியிட்டு ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம் உள்ளிட்ட 3 மாநிலங்களில் கடந்த டிசம்பர் மாதம் காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடித்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த பிரதமர் மோடி உடனடியாக தோல்விக்கான காரணங்களை ஆராய்ந்ததோடு விவசாயிகளின் பொருட்களுக்கு உரிய விலை கொடுப்பதற்கான சூழலை ஏற்படுத்துவதாக வாக்குறுதி அளித்தார். சந்தைகளை ஏற்படுத்தவும் வழிவகைகள் செய்தார். இதேபோல் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6 ஆயிரம் தருவதாக உறுதி அளித்தார். அதன்படியும் செயல்பட்டார்.

செம ட்விஸ்ட்.. யாருமே இதை கணிக்கவில்லை.. தமிழக அரசியலில் ஒரு அதிரடி திருப்பம்! செம ட்விஸ்ட்.. யாருமே இதை கணிக்கவில்லை.. தமிழக அரசியலில் ஒரு அதிரடி திருப்பம்!

தடுத்த பாஜக

தடுத்த பாஜக

அடுத்ததாக உத்தரப்பிரதேசத்தில் அகிலேஷ் யாதவ் மற்றும் மாயவதிக்கு ஷாக் கொடுக்கும் விதமாக மண்டல் கமிஷன் பரிந்துரைகளை அமல்படுத்தினார்.இதன்படி பொருளாதாரத்தில் பினதங்கிய உயர்ஜாதியினருக்கு இடஒதுக்கீடு அளிக்கும் திட்டத்தை கொண்டுவந்தார். அதேபோல் ஒபிசி மற்றும் தலித்துகளை பாஜகவுக்குள் இழுத்தார். இதன் மூலம் அங்கு ஜாதி ரீதியாக அகிலேஷ் மற்றும் மாயாவதி வெற்றி பெறுவதை தடுத்தார். இதன்காரணமாகவே இப்போது உத்தரப்பிரதேசத்தில் பெரும் வெற்றி பெற்றுள்ளது பாஜக.

ஊடுருவல்கள் தடுப்பு

ஊடுருவல்கள் தடுப்பு

இதேபோல் தான் ஹிந்துக்களை ஒன்றுபடுத்தும் கொள்கைகள் மூலம் இதுவரை இல்லாத நிகழ்வாக தெலுங்கானாவிலும் வெற்றி பெற்று அசத்தி உள்ளார். மேற்கு வங்கம் மற்றும வடகிழக்கு மாநிலங்களில் வங்கதேசத்தில் வரும் ஊடுருவல்களை தடுப்பதாக உறுதி செய்து அதன் மூலம் அந்த மக்களை கிளீன் போல்டு செய்துவிட்டார் பிரதமர் மோடி.

இந்தியாவில் எங்கும் இப்படி நடக்கவில்லை.. புதிய சாதனை படைத்த கோவை வாக்காளர்கள்.. வெல்டன்!இந்தியாவில் எங்கும் இப்படி நடக்கவில்லை.. புதிய சாதனை படைத்த கோவை வாக்காளர்கள்.. வெல்டன்!

மோடியின் தாக்குதல்

மோடியின் தாக்குதல்

இதனிடையே பாகிஸ்தானின் பால்கோட்டில் சர்ஜிக்கல் தாக்குதலை நடத்தி மேற்கு மற்றும் பாகிஸ்தானை ஒட்டிய வடமேற்கு மாநிலங்களில் மக்களை கவர்ந்தார். இதன் மூலம் பயங்கரவாத தாக்குதல் அச்சுறுத்தல் உள்ள ராஜஸ்தான், குஜராத், மகாராஷ்டிரா உள்பட பல்வேறு மாநிங்களில் வெற்றிகளை குவித்துவிட்டார்.

வலிமையான வேட்பாளர்கள்

வலிமையான வேட்பாளர்கள்

கர்நாடகாவில் காங்கிரஸ் மதசார்பற்ற ஜனதா தளம் இடையே நிலவிய கூட்டணி குழப்பத்தை பயன்படுத்தி , குழம்பிய குட்டையில் பாஜக சூப்பராக மீன்பிடித்துவிட்டது. டெல்லி, பஞ்சாப், அரியானாவில் ஆம் ஆத்மி காங்கிரஸ் தனித்து களம் கண்ட நிலையில் வலிமையான வேட்பாளர்களை நிறுத்தி நல்ல வெற்றி பெற்றார் மோடி.

கேட்கவே கஷ்டமா இருக்கு.. மறக்க முடியாத மன்சூர் அலிகான்.. திண்டுக்கல்லை விட்டு கிளம்பினார்! கேட்கவே கஷ்டமா இருக்கு.. மறக்க முடியாத மன்சூர் அலிகான்.. திண்டுக்கல்லை விட்டு கிளம்பினார்!

ஜாதி அரசியல்கள்

ஜாதி அரசியல்கள்

மிகஅதிப்படியான பிரச்சாரங்களை செய்த மோடி மற்றும் அமித்ஷா, சரியான காய்நகர்த்தல்கள் மூலம் ஜாதி அரசியலை லாவமாக கையாண்டனர்.அதேபோல் மத அரசியல் இருக்கும் இடங்களிலும் சரியாக கையாண்டார்கள். பொருளாதாரம் பற்றி மேதைகள் பல தத்துவங்கள் சொல்லி பாஜகவுக்கு வாக்களிக்கவிடாமல் தடுக்க முயன்றார்கள்.

கழிவறை வசதி

கழிவறை வசதி

ஆனால் அவர்களின் வாயை அடைக்கும் விதமாக பிஎப் கணக்கில் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்று பாருங்கள் என வேலை வாய்ப்பு உயர்ந்துள்ளதை காட்டியது பாஜக.. பொருளதாரம் வேகமாக வளர்ந்துள்ளதை சுட்டிகாட்டியதோடு, அதிகம்பேர் வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதை சொல்லி வாயை அடைத்தது. எல்லாவற்றுக்கும்மேலாக ஏழைகளுக்கு கேஸ் இணைப்பு, கழிவறை வசதி இதுதான் பிரதமர் மோடிக்கு பெரிய அளவில் கைகொடுத்துள்ளது.

2021ம் ஆண்டு வரை எடப்பாடி பழனிசாமி தான் முதல்வர்..!! இந்த கணக்கை பாருங்க.. உங்களுக்கே புரியும்..!! 2021ம் ஆண்டு வரை எடப்பாடி பழனிசாமி தான் முதல்வர்..!! இந்த கணக்கை பாருங்க.. உங்களுக்கே புரியும்..!!

எதிர்மறை பிரச்சாரங்கள்

எதிர்மறை பிரச்சாரங்கள்

ஆனால் மோடியாலும் அமித்ஷாவிலும் ஒன்றும் செய்ய முடியாமல் போன மாநிலங்கள் என்றால் அது தமிழ்நாடு,கேரளா, ஆந்திரா இவைதான்.இந்த மாநிலங்களில் மட்டும் பாஜக வென்று இருந்தால் 400 தொகுதிகளை கடந்து பாஜக வென்று இருக்கும். கேரளாவிலும், ஆந்திராவிலும் வாக்கு சதவீதத்தை உயர்த்திவிட்ட பாஜகவால் தமிழகத்தில் சுத்தமாக ஒன்றும் செய்யமுடியவில்லை என்பதே களஎதார்த்தம். இதற்கு காரணமும் இருக்கிறது. கர்நாடகாவில் வெற்றி பெறுவதற்காக செய்த கொள்கை சமரசங்கள், இங்கே நீட் தேர்வுக்கு எதிரான பிரச்சாரங்கள், பாஜகவி ஒவ்வொரு திட்டங்களுக்கும் எதிரான பிரச்சாரங்கள் போன்றவைகளை காரணமாக சொல்லலாம்.

English summary
lok sabha election results 2019 live updates: How PM Modi Recovered From December Setbacks
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X