டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சன்னி தியோலா.. சன்னி லியோனா.. பாவம் அர்னாபே கன்பியூஸ் ஆகிட்டாரு!

Google Oneindia Tamil News

டெல்லி: மக்களவைத் தேர்தல் முடிவுகள் பற்றி நேரலையில் பேசிக் கொண்டிருந்த பிரபல ஊடகவியலாளர் அர்னாப், சன்னி தியோலுக்குப் பதில் சன்னி லியோன் அதிக வாக்குகள் பெற்றிருப்பதாகக் கூறிய வீடியோ வைரலாகியுள்ளது.

மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று நடைபெற்று வருகிறது. தேசிய அளவில் எந்தக் கட்சி முன்னிலையில் உள்ளது, நட்சத்திர வேட்பாளர்களின் வாக்கு நிலவரம் என்ன என்பது பற்றி ஊடகங்களில் நேரலை நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்பட்டு வருகின்றன.

அந்தவகையில், ரிபப்ளிக் தொலைக்காட்சி நேரலையில், குருதாஸ்பூர் மக்களவைத் தொகுதியில் பாஜக வேட்பாளர் சன்னி லியோன் 7,500 வாக்குகள் முன்னிலையில் இருப்பதாக ஒரு குண்டைத் தூக்கிப் போட்டார் பிரபல ஊடகவியலாளரான அர்னாப்.

சன்னி தியோல்:

அர்னாப்பின் இந்த பேச்சால் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். காரணம் இத்தேர்தலில் குருதாஸ்பூர் தொகுதியில் பாஜக சார்பாக போட்டியிட்டவர் நீலப்பட நடிகை சன்னி லியோன் அல்ல, பிரபல பாலிவுட் நடிகர் சன்னி தியோல். அவசரத்தில் சன்னி தியோல் பெயரைத் தான் சன்னி லியோன் என உச்சரித்து விட்டார் அர்னாப்.

வைரல் வீடியோ:

வைரல் வீடியோ:

சன்னி லியோன் நீலப்பட நடிகையாக இருந்து தற்போது பாலிவுட் நடிகையாக உள்ளவர். தமிழிலும் இவர் படங்களில் நடித்துள்ளார். இதனால் அவரது பெயரை அர்னாப் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வைரலானது.

சன்னி லியோன் கேள்வி:

இந்த வீடியோவைப் பார்த்த சன்னி லியோனும், இதற்கு டிவிட்டரில் பதிலளித்துள்ளார். அதில் அவர், ‘எத்தனை வாக்குகள் வித்தியாசத்தில் நான் முன்னிலையில் இருக்கிறேன்' என அர்னாப்பிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

டிரெண்டிங் ஆன சன்னி:

டிரெண்டிங் ஆன சன்னி:

மக்களவைத் தேர்தலில் போட்டியிடாமலேயே வாக்குகள் எண்ணும் நாளன்று டிரெண்டிங் ஆகி இருக்கிறார் சன்னி லியோன். பேசாமல், அவரையேகூட ஒரு தொகுதியில் வேட்பாளராக்கி இருக்கலாம் என நெட்டிசன்கள் கிண்டலாக பதிவிட்டு வருகின்றனர்.

English summary
Republic founder Arnab Goswami found himself with his foot in his mouth when he accidentally referred to Sunny Deol as Jism 2 actor Sunny Leone instead during a news show covering the counting of votes as the 2019 Lok Sabha elections come to a close.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X