டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அடிச்சு தூக்கு.. கூட்டணியை படுவேகத்தில் உருவாக்கும் பாஜக.. ஆமை வேகத்தில் காங்.. ராகுல் சுதாரிப்பாரா?

லோக்சபா தேர்தலுக்காக கூட்டணி உருவாக்குவதில் காங்கிரஸ் கட்சியை விட பாஜகதான் கெத்து என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்து இருக்கிறது.

Google Oneindia Tamil News

டெல்லி: லோக்சபா தேர்தலுக்காக கூட்டணி உருவாக்குவதில் காங்கிரஸ் கட்சியை விட பாஜகதான் கெத்து என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்து இருக்கிறது.

லோக்சபா தேர்தலுக்கு இன்னும் 100 நாட்களுக்கு குறைவான காலமே இருக்கிறது. இதனால் காங்கிரஸ், பாஜக ஆகிய கட்சிகள் மிக தீவிரமாக கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது.

காங்கிரஸ் கட்சி திட்டமிட்டு இருந்த மெகா கூட்டணி பல இடங்களில் உருவாகாமல் போய்விட்டது என்றுதான் கூற வேண்டும். மாறாக பாஜக பல மாநிலங்களில் யாரும் எதிர்பார்க்காத வகையில் மெகா கூட்டணியை உருவாக்கி உள்ளது.

தென்னிந்தியாவில் எப்படி

தென்னிந்தியாவில் எப்படி

லோக்சபா தேர்தலை பொறுத்தவரை தென்னிந்தியாவில் காங்கிரஸ் கட்சி கொஞ்சம் வேகமாக கூட்டணி அமைத்து வருகிறது. பாஜகவை விட இங்கு காங்கிரஸ் வேகமாக உள்ளது.

தமிழகம் - பாஜக, காங்கிரஸ் இரண்டும் கூட்டணியை உறுதி செய்துள்ளது.

ஆந்திரா - ஆந்திராவில் தெலுங்கு தேசம் + காங்கிரஸ் கூட்டணி வைக்க உள்ளது. மாறாக பாஜக ஆந்திராவில் பவன் கல்யாணின் ஜன சேனா கட்சியுடன் கூட்டணி வைக்க பேசி வருகிறது.

கர்நாடகா - கர்நாடகாவில் காங்கிரஸ் + மஜத கூட்டணி உறுதியாகி உள்ளது. பாஜக தனித்து போட்டியிடவே வாய்ப்பு.

கேரளா - கேரளாவில் காங்கிரஸ் தனித்து போட்டியிடும். அதே சமயம் பாஜக, பாரதிய தர்ம சேனா என்ற சிறிய கட்சியுடன் கூட்டணி வைக்க உள்ளது.

முக்கிய மாநிலங்கள்

முக்கிய மாநிலங்கள்

வேறு சில முக்கிய வடமாநிலங்கள் என்று பார்த்தால், அங்கு பாஜகதான் முன்னிலையில் உள்ளது.

உத்தர பிரதேசம்: உத்தர பிரதேசத்தில் சிறிய கட்சிகள், ஜாதி கட்சிகளுடன் பாஜக கூட்டணி வைக்க உள்ளது. காங்கிரஸ் தனித்து போட்டியிட வாய்ப்புள்ளது.

பீகார்: பீகாரில் காங்கிரஸ், பாஜக இரண்டு கூட்டணியை இறுதி செய்துள்ளது. இரண்டுமே அங்கு மெகா கூட்டணி அமைக்கிறது.

மஹாராஷ்டிரா: மஹாராஷ்டிராவில் பாஜக கெத்தாக சிவசேனாவுடன் சேர்ந்து இருக்கிறது. ஆனால் காங்கிரஸ் அங்கு கை கோர்க்க கை இல்லாமல், வெறும் கையோடு இருக்கிறது.

மேற்கு வங்கம்: மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் , திரிணாமுல் காங்கிரஸ் உடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. ஆனால் பாஜக காங்கிரஸ் இரண்டும் அங்கு இதுவரை கூட்டணியில் இடம்பெறவில்லை.

சிறிய மாநிலங்கள்

சிறிய மாநிலங்கள்

இது இல்லாமல் அசாம், ஹரியானா, ஜார்கண்ட், பஞ்சாப், ஒடிசா, டெல்லி ஆகிய மாநிலங்கள் இருக்கிறது. ஜார்கண்ட், பஞ்சாப், ஒடிசா, டெல்லி ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் எப்போது வேண்டுமானாலும் கூட்டணியை உறுதி செய்யலாம். இதற்காக பேசி வருகிறது. அசாம், ஹரியானா, ஜார்கண்ட் மாநிலங்களில் பாஜக எப்போது வேண்டுமானாலும் கூட்டணியை இறுதி செய்யும்.

பாஜக முன்னிலை

பாஜக முன்னிலை

அதன்படி மொத்தமாக பார்க்கையில் பாஜக கூட்டணி பேச்சுவார்த்தையில் முன்னிலை வகிக்கிறது. முக்கிய வடமாநிலங்களில் பாஜக கூட்டணி பேச்சுவார்த்தையில் வேகம் காட்டுகிறது. முக்கியமான மாநிலமான பீகார், மஹாராஷ்டிராவில் பாஜக கூட்டணியை இறுதி செய்துள்ளது.

காங்கிரஸ் பின்னடைவு

காங்கிரஸ் பின்னடைவு

ஆனால் காங்கிரஸ் இன்னும் மஹாராஷ்டிரா, உத்தர பிரதேசத்தில் ஆள் இல்லாமல் தவிக்கிறது. இன்னும் மேற்கு வங்கத்திலும் திரிணாமுல் காங்கிரஸ் உடன் காங்கிரஸ் சேருமா என்று இறுதி செய்யவில்லை. டெல்லியில் காங்கிரஸ் ஆம் ஆத்மி உடன் சேருமா என்பதும் குழப்பமாகவே உள்ளது. இப்போது வரை பாஜக கூட்டணி பேச்சுவார்த்தையில் ஒரு அடி முன்னிலையிலேயே இருக்கிறது.

English summary
Lok Sabha Elections 2019: BJP leads Congress in Alliance talks all over India.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X