டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

களமிறங்கிய ஸ்டார் பேச்சாளர்கள்.. போட்டி போட்டு மோதும் பாஜக - காங்கிரஸ்.. காரணம் இருக்கு மக்களே!

லோக்சபா தேர்தலில் பிரச்சாரம் செய்வதற்காக பாஜக மற்றும் காங்கிரஸ் ஸ்டார் பேச்சாளர்களை களமிறக்கி உள்ளது.

Google Oneindia Tamil News

டெல்லி: லோக்சபா தேர்தலில் பிரச்சாரம் செய்வதற்காக பாஜக மற்றும் காங்கிரஸ் ஸ்டார் பேச்சாளர்களையும், எம்.பிக்களையும் களமிறக்கி உள்ளது. இதற்கு பின் நிறைய அரசியல் கணக்குகள் இருக்கிறது.

லோக்சபா தேர்தலுக்காக திமுக பிரச்சாரம் செய்த போது திமுக எம்.பி கனிமொழி தூத்துக்குடி இல்லாமல் வேறு சில இடங்களிலும் பிரச்சாரம் செய்தார். பெண் வாக்காளர்கள் அதிகம் இருக்கும் தொகுதிகளில் கனிமொழி அதிகமாக பிரச்சாரம் செய்தார்.

வாக்காளர்களை கவர எல்லா கட்சியும் இது போல பிரச்சாரங்களை ஏற்பாடு செய்வது உண்டு. அப்படித்தான் தற்போது பாஜகவும், காங்கிரஸ் கட்சியும் வடஇந்தியாவில் சில பிரச்சார பீரங்கிகளை களமிறக்கி உள்ளது. இதற்கு பின் இருக்கும் ஒரே காரணம்.. ஜாதி வாக்குகள்!

3வது அணிக்கு ஆள் சேர்க்கும் சந்திரசேகர ராவ்.. திடீரென ராகுலை சந்தித்த நாயுடு.. காரணம் என்ன? 3வது அணிக்கு ஆள் சேர்க்கும் சந்திரசேகர ராவ்.. திடீரென ராகுலை சந்தித்த நாயுடு.. காரணம் என்ன?

ஜாதிதான் நிர்ணயம் செய்யும்

ஜாதிதான் நிர்ணயம் செய்யும்

ஒவ்வொரு தொகுதியிலும் வாக்குகளை ஒவ்வொரு விஷயம் முடிவு செய்யும். உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், பீகார் உள்ளிட்ட அதிக லோக்சபா தொகுதிகளை கொண்ட மாநிலங்களில் ஜாதிதான் பெரிய அளவில் வெற்றியாளர்களை தீர்மானிக்கிறது. இந்த ஜாதி ரீதியிலான வாக்காளர்களை கவர தற்போது பாஜகவும், காங்கிரசும் மும்முரமாக களமிறங்கி உள்ளது.

எப்படி

எப்படி

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தற்போது பாஜக கட்சிக்காக ஹரியானா மாநிலம் போண்சி பகுதியில் பிரச்சாரம் செய்ய களமிறக்கப்பட்டுள்ளார். இது ராஜ்பூட் ஜாதியினர் அதிகம் இருக்கும் பகுதி என்பதால் இங்கு ராஜ்நாத் சிங் பிரச்சாரம் செய்கிறார். 2014ல் இங்கு ராஜ்நாத் சிங் பிரச்சாரம் செய்தது, பாஜக கட்சிக்கு பெரிய அளவில் பலன் அளித்தது.

எங்கு பிரச்சாரம்

எங்கு பிரச்சாரம்

ராஜ்நாத் சிங் ஹரியானாவில் குர்கான் தொகுதியில் பிரச்சாரம் செய்ய உள்ளனர். இங்கு சுமார் 20 லட்சம் வாக்காளர்கள் இருக்கிறார்கள். இதில் ராஜ்பூட் ஜாதியினர்தான் அதிகம் உள்ளனர். அதேபோல் குஜ்ஜார் ஜாதியினர் 35000 பேர் மற்றும் மேவ் ஜாதியினர் 45000 பேர் இருக்கிறார்கள். இவர்களின் வாக்குகளை பாஜக ராஜ்நாத் சிங்கை வைத்து கவர திட்டமிட்டுள்ளது.

பஞ்சாப்

பஞ்சாப்

அதேபோல் ஹரியானாவில் இருக்கும் பஞ்சாப்பை சேர்ந்த வாக்காளர்களை கவர, ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார் களமிறக்கப்பட்டுள்ளார். இங்கு 65000-75000 பஞ்சாபியர்கள் இருக்கிறார்கள். இவர்களின் வாக்குகளை கட்டார் பாஜக பக்கம் திருப்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

காங்கிரஸ் எப்படி

காங்கிரஸ் எப்படி

இன்னொரு பக்கம் காங்கிரஸ் கட்சி ராஜஸ்தான் துணை முதல்வர் சச்சின் பைலட்டை குர்கானில் பிரச்சாரம் செய்ய அழைத்து வந்துள்ளது. குஜ்ஜார் இன மக்களின் வாக்குகளை கவர்வதற்காக பாஜக இவரை அழைத்து வந்துள்ளது. சச்சின் பைலட் குஜ்ஜார் ஜாதியை சேர்ந்தவர் என்பதால் காங்கிரஸ் இவரை களமிறக்கி உள்ளது.

ஜாதி எப்படி முக்கியம்

ஜாதி எப்படி முக்கியம்

இப்படி வடமாநிலங்களில் பல இடங்களில் ஜாதி பார்த்து பிரச்சாரங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இந்த கடைசி நேர பிரச்சாரம் தேர்தல் முடிவுகளில் மாற்றத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளதாக அரசியல் வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.

English summary
Lok Sabha elections 2019: Congress and BJP bring star campaigners to the stage to lure caste-based votes in many parts of northern states.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X